இரண்டாம் முத்திரை Jeffersonville, Indiana, USA 63-0319 1மாலை வணக்கம், நண்பர்களே, ஜெபம் ஏறெடுக்க நாமெல்லாரும் சற்று எழுந்து நிற்போம். எங்கள் பரமபிதாவே, நாங்கள் மறுபடியும் கர்த்தருடைய ஊழி யத்தில் இன்றிரவு பயபக்தியுடன் இக்கூடாரத்தில் கூடியுள்ளோம். எங்களில் இருவர் அல்லது மூவர் எங்கு கூடினாலும், அவர்கள் மத்தியில் பிரசன்னராய் இருப்பதாக நீர் வாக்களித்திருக்கிறீர். உமது நாமத்தில் நாங்கள் கூடிவந்திருக்கிறபடியால் எங்கள் மத்தியில் நீர் இருக்கிறீர் என்ற நிச்சயம் எங்களுக்குண்டு. இப்பொழுது, பிதாவே, இன்றிரவு நீர் வந்து எங்களுக்கு இரண்டாம் முத்திரையை உடைத்துத் தருமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். அந்தக் கவிஞன், தான் காலமாகிய திரைக்குப்பின்னால் இருப்பதைக்காண விரும்பியதுபோல, கர்த்தாவே, நாங்களும் காலமாகிய திரைக்கு அப்பால் என்னவிருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்பதே எங்கள் வாஞ்சையாய் இருக்கின்றது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யானவர் தாமே இப்பொழுது, எங்கள் மத்தியில் வந்து, முத்திரையை உடைத்து, நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியவைகளை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு வேண்டுகிறோம். 2கிறிஸ்துவின் மகத்தான ஐக்கியத்தில் பிரவேசிக்காத யாராவது இன்றிரவு இங்கிருந்தால், கர்த்தாவே, அவர்கள் இன்றிரவு நித்தியத்திற்கேற்ற அந்த தீர்மானத்தைச் செய்து, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட கிருபை செய்தருளும். பிதாவே, வியாதியஸ்தர் யாராவது இங்கிருந்தால், அவர்களைச் சுகப்படுத்தும். இங்கு அநேக உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. பரி. பவுலின் காலத்தில் அவனுடைய தேகத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் எடுத்து பிசாசு பிடித்தவர்களின் மேல் போட, அசுத்த ஆவி அவர்களைவிட்டு நீங்கிப் போய் அவர்கள் சுகமடைந்ததாக நாங்கள் வேதத்திலிருந்து அறிகிறோம். அதை நினைவுபடுத்திக்கொண்டு, என் கைகளை இவ்வுறுமால்களின் மேல் வைக்கிறேன். கர்த்தருடைய வருகை வெகு சீக்கிரத்தில் உள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம். அந்த நேரம் அருகாமையில் வந்து கொண்டிருக் கிறது என்பதை அறிகிறோம். 1900 வருடங்களுக்குப் பின்பு இவை யாவும் மறுபடியும் சபைக்குத் திரும்ப வந்துள்ளது. பிதாவே, நாங்கள் கேட்கிறவைகளை அருளிச் செய்யவேண்டு மாய் உம்மிடம் மன்றாடுகிறோம். கர்த்தாவே, உம் தாசனைப் பலப்படுத்தும். எல்லாவிடங்களிமுள்ள உமது ஊழியக்காரர்களுக்கு ஒத்தாசை செய்யும். முக்கியமாக, இன்றிரவு இங்கு கூடி வந்திருப்பவர்களையும் பலப்படுத்தி அவர்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ள உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறாம். ஆமென். 3இன்றிரவு கர்த்தருடைய வீட்டுக்கு மறுபடியும் வந்திருப்பது மிகவும் நல்லது. அநேகர் நின்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இதைக் குறித்து நாங்கள் வேறொன்றும் செய்யமுடியாத நிலையில் உள்ளோம். முன்னூறு அல்லது நானூறு பேர் அதிகம் கொள்ளத்தக்கதாய், இக்கூடாரத்தை நாங்கள் விஸ்தரித்தோம். ஆனால் இத்தகைய விசேஷித்த கூட்டங்கள் நடைபெறும்போது, கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. 4இப்பொழுது, ஓ, முத்திரைகளைக் குறித்துப் படித்து, ஜெபிப் பதனால் எனக்கு இது ஒரு நல்ல தருணமாக அமைந்துள்ளது. உங்களுக்கும் அது அவ்வாறே இருக்கும் என்று நம்புகிறேன். (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) அது உங்களுக்கு அவ்வாறே இருக் கிறது என்று நான் நிச்சயமுள்ளவனாய் இருக்கிறேன். இது எனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக உங்களுக்கும் இருக்கும் என்று கருதுகின்றேன். ஆகையால் இது உங்களுக்கு ஒரு மகத்தான தருணம். ஆராதனை முடிந்தவுடன் என் சிநேகிதி ஒருவளை முன்னால் வர அழைக்க விரும்புகிறேன். இன்று அவளுடைய பிறந்த நாள். அவள் வேறு யாருமில்லை. என் மகள் சாராள் (Sarah) தான். அவளுக்கு இன்று பன்னிரண்டாவது பிறந்தநாள். நாளை கழித்து பெக்கியின் (Becky) பிறந்த நாள். அவளையும் நான் முன்னால் வர அழைக்கவேண்டும். 5இன்றிரவு நாம் இரண்டாம் முத்திரையைப் படிக்கப்போகிறோம். முதல் நான்கு முத்திரைகளுக்கு, குதிரை சவாரி செய்யும் நால்வர் உண்டு, இன்று சம்பவித்த ஒன்றை நான் உங்களுக்கு மறுபடியும் எடுத்துக் கூற விரும்புகிறேன். அநேக வருடங்களுக்கு முன்பு நான் செய்தியளித்த பழைய குறிப்புகளை ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நோக்கியவாறு, ''என்னால் முயன்றவரை அப்பொழுது நான் செய்தியளித்தேன்'' என்று நினைத்துக்கொண்டேன். புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களையும், மற்ற வைகளையும் குறித்து, “நல்லது, நான் சிறிது நேரம் படித்து, ஆராய்ந்து, இதையும், அதையும் பார்ப்பேன்,'' என்று நான் எண்ணினேன். அப் பொழுது ஒன்று சம்பவித்தது. அது நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தது. ஒரு வித்தியாசமான வெளிப்பாடு எனக்கு அளிக் கப்பட்டது. அது வித்தியாசமானதாகவே வருகின்றது. நான் உடனே பென்சிலை எடுத்துக்கொண்டு, அவர் அங்கு இருக்கும்போதே, வேகமாக எழுதத் தொடங்கினேன். 6ஓ! அரைமணி நேரத்துக்கு முன்பு முக்கியமான ஒன்று சம்ப வித்தது. நான் இங்கு வரும்போது சகோ. உட் (Bro. Wood) என்பவரிடம் சில நிமிடங்களுக்கு முன்பாக அதைக் கூறினேன். ஆனால் ஏதோ ஒன்று, நீங்கள் அறிவீர்களா? நான் உங்களுக்கு எடுத்துரைக்கக் கூடாத அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் சம்பவித்த ஏதோவொன்று எனக்கு அதிகமாக உதவினது. இக்கட்டிடத்தில் என் நண்பர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். நீங்கள் எல்லாருமே என் நண்பர்கள்தான். நான் குறிப்பிடும் இந்த நண்பர் சகோ. லீ வேயில் (Bro. Lee Vayle), அவர் அருமையான ஒரு சகோதரன். மேலும் அவர் வேதத்தை மிகவும் நன்றாகப் படித்தவர். டாக்டர் வேயில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம்பெற்ற பாப்டிஸ்ட். நம்மிடையே வேதத்தைச் சிறந்த முறையில் படித்தவர்களில் அவரும் ஒருவர். அவர் ஒரு... இதை நான் வெறும் புகழ்ச்சியாகக் கூறவில்லை. உண்மையாக நான் அவ்வாறு கருதுவதனால் இதைக் கூறுகிறேன். நம் வரிசையில், நான் அறிந்தவரையில், அவர் வேதத்தில் அதிநிபுணத்துவம் பெற்றவர்களில் ஒருவராக இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறு குறிப்பு எழுதி பில்லியின் (Billy) மூலம் எனக்கனுப்பினார். ஆனால் பில்லியோ எனக்கு சிறிதளவும் படித்துக் காண்பிக்க முடியாதவனாய் இருந்தான். நான் நினைக்கிறேன்... நான் இதை இன்னும் படிக்கவில்லை. ஆனால் அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை உங்களிடம் கூற விரும்பு கின்றேன். அவர் இங்கிருப்பாரானால், சகோ. லீ வேயில், நான் அதை ஆறு மாதங்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். 7சகோ. வேயில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். ''எனக்குத் திட்ட வட்டமாய் தெரியாது. பாலிகார்ப் (Polycarp) பரி. யோவானின் மாணாக்கன் என்று நினைக்கிறேன்.'' அது உண்மைதான். 'ஐரினேயஸ் (Irenaeus) பாலிகார்ப்பின் மாணாக்கன் என்றும் நினைக்கிறேன்.'' அது மிகவும் சரியே, “தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி அங்கத்தினர் அதில் உட்பிரவேசித்த பிறகு, இயேசு மறுபடியும் வருவார் என்று ஐரினேயஸ் கூறியுள்ளார்.'' கிறிஸ்து மரித்து 400 வருடங்களுக்குப் பின்னர், ஐரினேயஸ் இவ்விதம் கூறியுள்ளார். “முடிவு காலம் வரும்போது...'' என்றார் அவர். இப்பொழுது, அது நிசாயா மநாட்டுக்கு முன்பு' (Pre Nicaea Council) என்னும் தலைப்பு கொண்ட புஸ்தகத்தில் உள்ளது. வேதத்தை ஆராய் கின்ற இங்குள்ளவர்களுக்கு... வேத வரலாற்றை ஆராய்கின்றவர்களை நான் என் கருத்தில் கொண்டு... நீங்கள் இதை நிசாயா மாநாட்டுக்கு முன்பு (Pre Nicaea Council) என்னும் தலைப்பு கொண்ட புத்தகத்தில் முதலாம் அல்லது இரண்டாம் பகுதியில் காணலாம். இப்பொழுது ஐரினேயஸ் அநேக வருடங்களுக்கு முன்பு அதைக் கண்டு, ''தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி அங்கத்தினன் உட்பிரவேசிக்க வேண்டு மென்று சொல்லியிருக்கிறார். 8தெரிந்து கொள்ளப்படுதல், அழைக்கப்படுதல் என்பது சமீப காலத்தில் எழுந்த ஒரு போதகமென்று ஜனங்கள் நினைக்கின்றனர். என்னே! உண்மையாக, தெரிந்து கொள்ளப்படுதல், அழைக்கப்படுதல் என்பது, பழமையான போதகங்களில் ஒன்றாகும். உண்மையான வேத மாணக்கர் ஐரேனியஸ் தெரிந்து கொள்ளுதல் என்பதில் எப்பொழுதும் விசுவாசம் கொண்டிருந்தார். நாம் ஆராய்ந்ததுபோல, ஐரேனியஸ் சபையின் தூதர்களில் ஒருவர் என்பதை நாம் பார்த்தோம். நாம் விசுவாசிக்கிறோம். இப்பொழுது அவைகள் யாவும் உண்மையாகவே இரகசியங்களாயிருந்தன. நீங்கள் பாருங்கள்? தேவ இரகசியங்கள் யாவும் முத்திரைகளின் கீழ் மறைக்கப் பட்டு, கடைசி நாட்களில் முழுமையாக வெளிப்பட வேண்டும். அவை கள் பவுலின் காலத்தில் ஆரம்பித்து, ஐரினேயஸ், மார்ட்டின் இன்னும் மற்றவர் (தூதர் -தமிழாக்கியோன்) வழியாய் வந்து, இந்தக் கடைசிக் காலத்திற்கு வந்துள்ளது. 9இப்பொழுது நமது முயற்சியைக் கர்த்தர் இன்றிரவு ஆசீர்வதிப்பாரென்று நாம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். முதலாம் முத்திரை-அது எனக்கு அதிக சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் அளித்தது. ஆகவே, இப்பொழுது, நான் அதிக நேரம் உங்களைத் தாமதிக்க விரும்பவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து - இக்கூட்டங்கள் முடிவு பெற்ற பின்னர்- நான் இங்கிருந்து போய்விட வேண்டும். ஆகையால் நீங்கள் சிறிது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நான் மெச்சுகிறேன்.... 10சகோ. ஜூனியர் ஜாக்ஸன் அங்கு நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறேன். நான்... சில வினாடிகளுக்கு முன்பு சகோ. ரட்டிலைக் (Bro. Ruddell) கண்டேன். அவர்கள் நம்முடன் ஐக்கியங்கொண்ட சபைகளின் போதகர்கள். அவர்கள் தங்கள் ஆராதனைகளை விட்டு வந்து இங்கு கலந்து கொள்வதை நான் உண்மையாகவே பாராட்டுகிறேன். சகோ. ஹூப்பர் சுவற்றில் சாய்ந்தவண்ணம் அங்கு நின்று கொண்டிருக்கிறார். அவர் ஊடிகா (Utica) சபையினின்று வந்திருக்கிறார். உங்கள் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். 11இப்பொழுது, நாம் சபையின் காலங்களைக்குறித்து போதித்த வாறே, ஏழு முத்திரைகளைக் குறித்து இப்பொழுது போதித்துக் கொண்டி ருக்கிறோம். சென்றமுறை நான் சபையின் காலங்களைப் போதித்து முடித்த பின்பு, அதை விவரிக்க கரும்பலகையில் வரைந்து காண்பித்தபோது என்ன நிகழ்ந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக் கிறது? கர்த்தருடைய தூதன் அச்சமயம் ஒளியாக இறங்கிவந்து, நுற்றுக்கணக்கானவருடைய முன்னிலையில் சுவற்றில் வரைந்து காண்பித்தார். இப்பொழுதும்கூட இயற்கைக்கு மேம்பட்டவைகளை அவர் செய்துக் கொண்டு வருகிறார். ஆகையால் மகத்தான காரியங்கள் சம்ப விக்குமென்று நாம் எதிர்பார்க்கிறோம். அடுத்தபடியாக என்ன நிகழ விருக்கிறது என்பதை நாமறியோம்... ஆனால் அதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, நமக்கு அவர் எவ்வளவு மகத்தான தேவனாயிருக்கிறார்! அவர் அதிசயமானவர்! நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். 12நான் முதலிரண்டு வசனங்களைப் படிக்கிறேன். அதன் பின்பு இரண்டாம் முத்திரையைக் குறித்த மூன்றாம், நான்காம் வசனங்களைப் படிக்கலாம். ஐந்தாம், ஆறாம் வசனங்கள் மூன்றாம் முத்திரையைப் பற்றி யவை. பிறகு ஏழாம், எட்டாம் வசனம்... குதிரை சவாரி செய்யும் ஒவ் வொருவனுக்கும் இரண்டு வசனங்கள், இவர்கள் எப்படி... என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறியிருப்பவனை நீங்கள் கவனியுங்கள். குதிரையின் மேலிருக்கிறவன் குதிரைகளை மாற்றிக் கொண்டே வருகிறான். 13அதன் பின்பு, கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு இரவு அந்தப் பெரிய ஏழாம் முத்திரை திறக்கப்படும்போது... அப்பொழுது நிகழ்ந்த ஒரே சம்பவம் பரலோகத்தில் அரைமணி நேர அமைதலாகும். அதை நாம் அறிந்துகொள்ள தேவன் உதவி செய்வாராக! இப்பொழுது மூன்றாம் வசனத்தைப் படிக்கிறேன். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது... (நாலாம் வசனம்).. அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. வெளி. 6:3-4 14இப்பொழுது ஜீவனானது யோவானிடம், ''நீ வந்து பார்'' என்று சொன்னது. அது ஒரு இரகசியமான காரியம். அது என்னவாயிருந்தது என்று யோவான் காணவில்லை. யோவான் ஒரு அடையாளத்தை மட் டும் கண்டான். அந்த அடையாளம், அதன் காரணம்... “வந்து பார்'' என்று அவர் சொன்னார். ஆனால் அவன் ஒரு அடையாளத்தைக் கண்டான். அவன் அந்த அடையாளத்தை அவர்கள் கவனிக்கும் வகையில் சபைக்கு அறிவிக்க வேண்டும். கடைசி காலத்தில் முத்திரைகள் திறக்கப் படும்போது, இதன் இரகசியம் வெளியாக வேண்டும். 15இப்பொழுது, முத்திரைகள் யாவும் திறக்கப்படும் என்பது உங்க ளெல்லாருக்கும் புரிகின்றதா? பாருங்கள்? இக்காலத்தில் வாழ்வதற்காக நீங்கள் மகிழ்ச்சியுறுகிறீர்கள் அல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) நண்பர்களே, அது மாத்திரமல்ல... பாருங்கள்? அனைத்துமே எளிமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கடந்த ஞாயிறு காலையை (செய்தியை- தமிழாக்கியோன்) நீங்கள் எப்பொழுதும் ஞாபகங்கொள்ளவேண்டும். பாருங்கள்? எல்லாம் எளிமையில், தாழ்மையில் நிகழ்வதால் ஜனங்கள் அதைக் கடந்து சென்று அது நிகழ்வதை அறியாமற் போகின்றனர். நாம் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம் என்பது நினைவிருக்கட்டும். அவர் எந்த நேரத்திலும் வரக்கூடும். எடுக்கப் படுதலும் அவ்விதமாகவே சம்பவிக்கும் என்று நான் உங்களிடம் கூறினேன். அது சம்பவித்ததை யாருமே அறியமாட்டார்கள். அது அவ்விதமாகவே வரும். பாருங்கள்? சாதாரணமாக... நாம் வேதத்தின் வாயிலாக அது எவ்விதமாக நிகழ்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். பாருங்கள்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் தோன்றிய அப்பெரிய நிகழ்ச்சியும் அவ்வாறே நிகழ்ந்தது. அவர் யாரென்பதை யாருமே கண்டுகொள்ள முடியவில்லை. அவர் பைத்தியக்காரனென்று ஜனங்கள் கருதினர். சபைகள் அவரை “ஒரு மதவெறியன்... உண்மையாகவே ஒரு பைத்தியக்காரன்'' என்கின்றனர். மேலும், ”நீ புத்திசுயாதீனமில்லாதவன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றனர். பைத்தியம் என்றால் “அறிவிழந்தவன்'' என்று அர்த்தம். வேறு சிலர், 'உனக்குப் பிசாசு பிடித்திருப்பதால் நீ பைத்தியக்காரனாயிருக்கிறாய். தவறான முறையில் பிறந்த நீயா தேவாலயத்தின் ஆசாரியர்களாகிய எங்களுக்குப் போதிப்பது?' என்றனர். நல்லது, என்னே, அதை அவர்கள் நிந்தையாகக் கருதினர். 16ஏசாயா தீர்க்கதரிசி தொடங்கி மல்கியா தீர்க்கதரிசி வரை 712 வருட காலமாக யோவான் ஸ்நானன் வருவான் என்பதைக் கண்ட தீர்க்கதரிசிகள் அவ்விதமே அவனைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத் தனர். அவனுடைய வருகையை அவர்கள் எந்நேரமும் எதிர்நோக்கி யிருந்தனர். ஆனால் அவனோ வந்து, பிரசங்கித்து, ஊழியம் செய்து, மகிமையில் பிரவேசித்தான். அப்போஸ்தலர்களும்கூட அவன் யாரென்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. மனுஷகுமாரன் எருசலேமுக்குச் சென்று பாடுபட வேண்டு மென்று இயேசு கூறினபோது, அவர்கள் இயேசுவிடம், “எலியா முந்தி வரவேண்டுமென்று வேதம் உரைக்கின்றதே?'' என்று கேட்டனர். அதற்கு, இயேசு “எலியா முந்தி வந்தாயிற்று. ஆனால் நீங்கள் அவனை அறிந்துகொள்ளவில்லை. அவன் என்ன செய்வானென்று வேதம் கூறுகினதோ, அதை அவன் அப்படியே செய்தான்'' என்றார். ”அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்ததோ, அவர்கள் அதை அவனுக்குச் செய்தார்கள்.'' பாருங்கள்? அவர்கள் அது யாரென்று அறிந்து கொள்ள இயலவில்லை. இயேசு, 'அவன்தான் யோவான் ஸ்நானன்' என்றார். 'ஓ! அப்படியா' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். உடனே அவர்கள் விழித்தெழுந்தனர். 17அவ்வாறே இயேசுவும் அநேக அற்புதங்களைச் செய்தபோதும், மக்கள் அவரைக் கண்டுகொள்ளத் தவறினர். அவர் அவர்களிடம் ''என்னிடம், பாவம் (அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் சொல்லக் கூடும்? நான் உலகில் வரும்போது என்னுடைய உத்தியோகம் (My Office) இவ்வாறு செய்யும் என்று வேதம் உரைத்துள்ள செயல்களை நான் செய்யாமலிருக்கின்றேனா? அப்படியானால் நான் எதில் பாவம் செய்துள்ளேன் என்பதைக் காண்பியுங்கள். சரி, இப்பொழுது நீங்கள் யாரென்பதை நான் பகுத்தறிந்து சொல்லுகிறேன். அப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா என்று பார்ப்போம்'' என்றார். பாருங்கள் அவர், “நான் வரும்போது நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியவராய் இருந்தீர்கள்,'' என்று அவர் கூறியிருப்பார். ஆனால் அவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. பாருங்கள்? அவர் புரிந்த செயல்களை அவருடன் இணைத்து நோக்கி, அவர் யாரென்பதை அறிந்து கொள்ள அவர்கள் முயலவில்லை. ஆனால் அவரோ, ''என்னில் பாவம் உண்டென்று யாரால் குற்றஞ்சாட்டக்கூடும். பாருங்கள்? அது என்ன கூறிற்றோ, அதை நான் செய்யாமல் போனேனா?'' என்றார். 18அவருடன் நடந்த அப்போஸ்தலர்களும்கூட அவருடைய செயல் களைக் கண்டு இடறினதாக வேதம் கூறுகின்றது. ஆனால் முடிவில் அவர்கள், ''ஆண்டவரே, இப்பொழுது நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் எல்லா வற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், எந்த மனிதனும் உமக்குப் போதிக்கவேண்டிய அவசியமில்லையென்றும் நாங்கள் விசுவாசிக்கி றோம்'' என்றனர். இப்பொழுது, நான் அவருடைய முகத்தைப் பார்த்திட விரும்பியிருப்பேன். அவர் அவர்களை நோக்கி, “நல்லது, இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? கடைசியில் அது உங்கள் மேல் உதித்துவிட்டது,'' என்று கூறியிருக்க வேண்டும். நல்லது, அந்த வேளை வரையில் அது அவர்..... தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக நடத்துகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரை நான் அதற்காக நேசிக்கிறேன். 19நாம் இப்பொழுது நம்முடைய காலத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவைகளையெல்லாம் குறித்துப் பேசிக்கொண்டே போனால், முத்திரைகளைப்பற்றி சிந்திக்க நமக்கு சமயமிராது. வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்ய வேண்டுமென்று அநேக விண்ணப்பங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. எனக்கு வருகின்ற ஒவ்வொரு விண்ணப்பத்திற்காகவும் நான் எல்லா நேரங்களிலும் ஜெபித்துக்கொண்டு வருகிறேன். உறுமால்களையும் ஜெபித்து அனுப்புகிறேன். கடைசி முத்திரைவரையில் நாம் முடித்துவிட்டால், ஞாயிறு காலையில்... கர்த்தருக்குச் சித்தமானால் நாம் பிணியாளிகளுக்காக நல்ல பழமைகால பாணியிலான ஜெபிக்கும் ஆராதனை ஒன்று நடத்தலாம். காலை முழுவதையும் அவர்களுக்காக ஜெபிப்பதில் நாம் செலவிடலாம். அது ஒரு விநோதமான சுகமளிக்கும் ஆராதனையாக இருக்கும் என்று அதிக நிச்சயமுடையவனாயிருக்கிறேன். பாருங்கள்? நான் அவ்வித உணர்வு உடையவனாகவே இருக்கிறேன், நீங்கள் பாருங்கள். அது விநோதமாக இராது. அது சற்று விசித்திரமாக ஒரு சிலருக்கு தோன்ற லாம் என்று நான் கருதுகிறேன், பாருங்கள். 20இப்பொழுது, இக்காலத்தில் தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படுவதற்கு அவருடைய கிருபை எவ்வளவு மகத்துவமுள்ள தாயிருக்கிறது! இப்பொழுது, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். இந்த கடைசி நாட்களில்தான் இரகசியங்கள் வெளிப்பட வேண்டும் என்று ஞாபகங்கொள்ளுங்கள். அவர் தமது வார்த்தையை - இரகசியங்களை எவ்விதம் வெளிப்படுத்துகிறார் என்று வேதம் கூறுகின்றது? அவர் எங்கே அதைக் கூறுகிறார் என்பதை வாசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நாம் சற்று திருப்பி, அவர் தமது இரகசி யங்களை எவ்விதம் வெளிப்படுத்துகிறார் என்று பார்ப்போம். நீங்கள் ஆமோஸைப் படிக்க வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். ஆமோஸ் புஸ்தகத்திற்கு வேதத்தைத் திருப்பி, ஆமோஸ் 3-ஆம் அதிகாரம், 7-ஆம் வசனத்தை வாசிக்க நான் விரும்புகிறேன். அது சரி. நான் 6-ஆம் வசனத்தையும் வாசிக்க விரும்புகிறேன். ஊரில் எக்காளம் ஊதினால்..., ஜனங்கள் கலங்காதிருப்பார் களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? (ஆங்கிலத்தில் surely - நிச்சயமாகவே என்று வசனம் ஆரம் பிக்கின்றது - தமிழாக்கியோன்) கர்த்தராகிய ஆண்டவர்... தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். இக்கடைசி நாட்களில் ஒரு தீர்க்கதரிசி எழும்புவானென்று தீர்க்க தரிசனம் நமக்கு உரைக்கப்பட்டுள்ளது. 21இப்பொழுது, பலவிதமானவைகள் நம்மிடையே இருந்தன என்று நமக்குத் தெரியும். இப்பொழுது, நான் இன்றிரவு இங்கு சுற்றிலும் பார்த்தபிறகு, அநேக வேதமாணாக்கர் அமர்ந்துள்ள இடத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அறிகிறேன். என்னை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த ஒலிநாடாக் களும் (tapes) ஏறக்குறைய உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் செல் கின்றன. பாருங்கள்? நம் மத்தியில் காணப்படும் 'எலியாவின் அங்கி' போன்ற மனிதத் தத்துவம் (cult) ஒன்றை நானும் எவ்விதத்திலும் புகுத்த முனைகிறேன் என்று நினைக்க வேண்டாம். அந்த எல்லாக் காரியங்களும், நம்மிடையே ஏராளமாக இருந்தன. இவை யாவும் வரப்போகும் உண்மையான செயலுக்கு முன்பே நிகழ்ந்து, ஜனங்கள் வழி தவறச் செய்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். 22கிறிஸ்து வருவதற்கு முன் பொய்யான வழிகாட்டிகள், கள்ள மேசியாக்கள் எழும்பினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்போஸ் தலர்களை அடித்துத் துன்புறுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போது, அக்காலத்தில் யூதமார்க்கத்தின் போதனைகளில் தலைசிறந்து விளங்கிய கமாலியேல் அவர்களிடம், “இவர்களை விட்டுவிடுங்கள். இது தேவனால் உண்டாயிருந்தால் நீங்கள் தேவனோடு போர் செய்கிற வர்களாய் காணப்படுவீர்கள்.'' இது தேவனால் உண்டாகவில்லை யெனில்...'' என்றான். மேலும் அவன், ”ஒரு மனிதன் சில நாட்களுக்கு முன்பு 400 பேரை வனாந்தரத்துக்குக் கொண்டு செல்லவில்லையா?'' என்றான் இவ்விதமாக காரியங்கள் நம்மிடம் உண்டு என்றான் என்ன? உண்மையான ஒன்று வருவதற்கு முன்னால் நிகழும் சம்பவங்கள். 23இப்பொழுது, பாருங்கள்? சாத்தான் இக்கள்ளப் போதகர்களை எழுப்புகிறான். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிற இந்த சாத்தானுடைய புத்தி நுட்பத்தை கவனியுங்கள். நாம், அவன் யார் என்பதை படிப்படியாக வெளிக்கொணர்கிறோம். வேதத்தின் வாயிலாக அவன் முகத்திரையைக் கிழித்து, அவன் யார் என்பதை நீங்கள் காணும் படியாகச் செய்து கொண்டிருக்கிறோம். செய்யப்படவேண்டிய காரியமும் அதுதான். அவன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முனையவில்லை என்பதை நீங்கள் ஞாபகங்கொள்ளுங்கள். சாத்தான் அவ்விதம் அல்ல. அவன் ஒரு அந்திக்கிறிஸ்து. அவன் போதகம் சத்தியத்தைப் போன்று காணப் படுவதால், உலகத் தோற்றத்துக்கு முன் ஜீவப்புஸ்தகத்தில் இந்த முத்திரைகளுக்குள் பெயரெழுதப்பட்டுள்ள தெரிந்து கொள்ளப்பட்ட வர்களும் கூட வஞ்சிக்கப்படலாம் என்று இயேசு கூறினார். 24அவன் மிக சாமர்த்தியமுள்ளவன். புத்தி நுட்பம் வாய்ந்தவன். உண்மையான ஒன்று வருவதை அவன் காணும்போது அது வருவதற்கு முன்னால் அதை கவிழ்ப்பதற்குத் தன்னால் முடிந்த ஒவ்வொன்றையும் அங்கே எறிகிறான். கடைசி நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பு வார்களென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, உண்மையாகவே வரவிருக்கின்ற இந்த சகோதரன் இந்த மகத்தான செய்தியை பேசினவுடனே இவர்கள் தோன்றுவார்கள். அவனை ஜனங்கள் மேசியா என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் அவனோ, யோவான் ஸ்நானனைப் போல், 'நான் அவரல்ல'' என்று திட்டவட்டமாகக் கூறுவான். ஏனெனில் அவன் யோவானைப் போலவே வரவேண்டியவனாயிருக்கிறான். யோவான் அங்கே பிரசங்கிக்க வந்தபோது, ஜனங்கள், அவனிடம் ''நீ மேசியாவல்லவா? நீ அவரல்லவா?“ என்று கேட்டனர். அதற்கு அவன், 'நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சை களின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல, நான் தண் ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்' என்றான். அச் சமயம் இயேசு பூமியில் இருந்தாரென்பதை யோவான் நிச்சயமாக அறிந் திருந்ததனால் 'அவர் இப்பொழுது உங்கள் மத்தியில் இருக்கிறார்' என்று கூறினான். அந்த அடையாளம் அவர் மேல் இறங்கி வரும்வரையிலும், அவன் அவரை அறியாதிருந்தான். ஒளியானது புறாவைப்போல் செட்டைகளை விரித்து, அவர் மேலிறங்கி, அவரைப் பிரகாசிக்கச் செய்தபோது, ''அவர் அங்கே இருக்கிறார், அதோ அவர்'' என்றான். யோவான் மாத்திரமே அதைக் கண்டான் என்று நீங்கள் அறிவீர்கள். அவன் மாத்திரமே, அப்பொழுது உண்டான சத்தத்தைக் கேட்டான். அங்கு கூடியிருந்த வர்களில் வேறு யாரும் அதைக் கேட்கவில்லை. 25உண்மையான ஊழியக்காரன் எழும்பும் முன்பு, அநேகக் கள்ள ஊழியக்காரர்களைச் சாத்தான் தோன்றச் செய்து, ஜனங்களின் மனதைக் குழப்பச் செய்கிறான். சாத்தான் அதைச் செய்கிறான். சரியானது எது, தவறு எது என்பதைப் பகுத்தறிய முடியாதவர்கள் இடறிவிழுகின்றனர். ஆனால் தெரிந்து கொள்ளப்படுபவர்களோ இடறுவதில்லை. ஏனெனில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட முடியாதென்று வேதம் கூறுகிறது. கிறிஸ்து வருவதற்கு முன்பு அநேகக் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி தங்களைக் கிறிஸ்து என்று அழைத்துக் கொள்வார்களென்று வேதம் சொல்லுகின்றது. “இதோ அவர் வனாந்தரத்தில் இருக்கிறார் என்று ஜனங்கள் சொன்னால் அதை நம்பாதேயுங்கள். இதோ, அவர் அறை வீட்டுக்குள் இருக்கிறார் என்ற சொன்னால் நம்பாதேயுங்கள்.'' “ஏனெனில் சூரியன் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்'' பாருங்கள்? ஆம், அவர் - அவர்- அவர் தோற்றமளிப்பார் (Appear). அது உலகம் பூராவும் காணக்கூடிய (Universal) ஒரு சம்பவமாய் இருக்கும். இப்பொழுது ஏதோ ஒன்று சம்பவித்துவிட்டது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்போது, நீங்கள் பாருங்கள். இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள்... சபையானது தன் வீட்டிற்குச் சென்றவுடனே, எடுக்கப்படுதல் நிகழ்ந்தவுடன் இத்தகைய ஆள் மாறாட்டம் இருக்கும். 26இப்பொழுது எல்லாக் காலத்திலும் இந்த போலியான ஆள் மாறாட் டங்கள் இருக்கும். ஆனால் நமக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இல்லை ஐயா. தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டவன் வரும்போது, அவன் தீர்க்க தரிசியாயிருப்பான் என்றே நான் விசுவாசிக்கிறேன். நான் அதை உங்களுக்கு வேத வசனங்களினால் காண்பித்துக் கொண்டிருக்கிறேன். அவன் நிச்சயமாகவே தீர்க்கதரிசியாக இருப்பான். தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பெற்றிருப்பான். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வரும். அது முற்றிலும் சரி.. தேவன் தம் செயல்களை மாற்றுவது கிடையாது. நீங்கள் பாருங்கள். அவருக்கு வேறொரு சிறந்த முறை இருந்திருந்தால், அவர் அதையே உபயோகித்திருப்பார். அவர் ஆரம்பத்திலேயே தலைசிறந்த முறையைத் தெரிந்து கொள்வதனால் அவர் அதை ஒரு போதும் மாற்றுவதில்லை. சுவிசேஷத்தை அறிவிக்க அவர் வேண்டுமானால் சூரியனையோ சந்திரனையோ, அல்லது காற்றையோ தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் மனிதனைத் தெரிந்து கொண்டார். அவர் இதற்கென்று குழுக்களைத் தெரிந்து கொள்வதில்லை. தனிப்பட்ட நபரையே அவர் தெரிந்து கொண்டார். பாருங்கள்? 27ஒரே சமயத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் பூமியில் எப் பொழுதும் இருக்கவில்லை. பாருங்கள் ஒவ்வொரு மனிதனும் வித்தி யாசமானவனாய் இருக்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப் பட்டவன். ஆகையால் தேவன் ஒரே ஒரு மனிதனைத் தெரிந்துக் கொள்ளு கிறார். அவருக்கு ஒருவன் போதும். அவனை அவர் கரத்தில் ஏந்தி அவர் விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்யலாம். நோவாவின் நாட்களிலே; எலியாவின் நாட்களில், மோசேயின் நாட்களில் இருந்தது போல அவருக்கு ஒருவன் போதும். மோசேயின் காலத்தில் அநேகர் எழுந்தனர். தாத்தான், கோரா என்பவர்கள் அவனுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அவர்கள் எவ்விதம் செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 'எங்களிடையே நீ (மோசே) ஒருவன் மாத்திரம் பரிசுத்தவானல்ல' என்று கூற விரும்பினர். அப்பொழுது தேவன், 'நீங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து போங்கள். நான் பூமியைப் பிளந்து அவர்களை விழுங்கிப் போடுவேன்' என்றார். நீங்கள் பாருங்கள்? ஆகையால்... இஸ்ரவேல் ஜனங்கள் முறுமுறுத்தபோது, கர்த்தர் அவர்கள் எல்லாரையும் அழித்துப் போடுவதாகச் சொன்னார். ஆனால் மோசே, கிறிஸ்துவின் ஸ்தானத்தை வகித்து, அவர்களிரு வரிடையே நின்று, “ஆண்டவரே, இதைச் செய்யாதிரும்'' என்று மன்றாடினான். பாருங்கள்? உண்மையாகவே... மோசே இம்மத்தியஸ்த ஊழியத் திற்கென்று நியமிக்கப்பட்டிருந்ததால், அவர் மோசேயைக் கடந்து இஸ்ரவேல் ஜனங்களை அழித்துப்போடவில்லை. அவன் கிறிஸ்துவின் பாகத்தை அப்பொழுது ஏற்றிருந்தான். கிறிஸ்து மோசேக்குள் வாசம் செய்திருந்தார் என்பது முற்றிலும் உண்மையாகும். 28இப்பொழுது, தேவன் தம்மை இக்காலத்தில் நமக்கு வெளிப் படுத்துகிறபடியால் நாம் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். அந்த மகத்தான நாள் இப்பொழுது விடிந்து கொண்டிருக்கிறது, திறக்க ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வெளிச்சம் விட்டுவிட்டுப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. பரதீசி யிலுள்ள பறவைகள் பரிசுத்தவான்களின் இருதயங்களில் பாடத் தொடங்கிவிட்டன. அந்த நாள் சமீபித்துவிட்டது என்பதனை அவர்கள் அறிவார்கள். ஏதோ ஒன்று வெகு விரைவில் நிகழவிருக்கிறது. அது நிகழ்ந்தாக வேண்டும். “அவர் ஒன்றையும் செய்யாவிடில்...'' இப்பொழுது, வேதவாக்கியங்கள் யாவும் தேவ ஆவியினால் அருளப்பட்டிருப்பதால், அவை முற்றிலும் உண்மையானதாகவும் சத்தியமாகவும் இருக்கவேண்டும். வேறு வழியே இல்லை. ஆகவேதான் கத்தோலிக்க சபையின் நண்பர்களுடன் எனக்கு வேறுபாடு உண்டு. அது (வேதம்) மனிதனால் எழுதப்படவில்லை. அது தேவ ஆவியினால் ஏவப்பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். சிறு சிறு விஷயங்கள் அதனுடன் சேர்க்கப்பட்டன. அதனுடன் சேர்க்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேவனுடைய வார்த்தையை ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தி நோக்கும்போது, சேர்க்கப்பட்டவைகளில் முரண்பாடு காணப்படுவதால், அவைதாமாகவே அகன்றுவிடுகின்றன. 29இந்த தத்ரூபமும் சத்தியமுமான வேதவாக்கியங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று எங்கேயும் முரண்பாடின்றி, ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்துகின்றன. எழுதப்பட்ட வாக்கியங்களில் முரண்பாடு எதுவுமில்லாத ஒரு இலக்கியத்தையாவது எனக்குக் காண்பியுங்கள். ஆனால் வேதத்தில் எங்கேயும், எவ்வித முரண்பாடும் இல்லை. வேத விமரிசகர் (Critics), வேதத்தில் முரண்பாடு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவ்வித முரண்பாடுகளைச் சுட்டிக் காண்பிக்க நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் எதையும் காண் பிக்கவில்லை. காண்பிக்கத்தக்கவாறு எவ்வித முரண்பாடும் வேதத்தில் கிடையாது. மனித சிந்தை குழப்பமுற்றிருக்கும் காரணத்தால் முரண் பாடு உள்ளதாகத் தோன்றுகிறது. தேவன் குழப்பமற்றவர். அவர் என்ன செய்கிறாரென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அறிவார். கத்தோலிக்க சபை கூறுவதுபோன்று தேவன் உலகத்தை ஒரு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரென்றால், எந்த சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப்போகிறார்? நம்மிடையேயுள்ள கணக் கற்ற சபைகளைப் பாருங்கள். ஏறக்குறைய தொள்ளாயிரம் வித்தி யாசமான ஸ்தாபன சபைகள் நம்மிடையேயுண்டு. இப்பொழுது எப்படி... ஒரு ஸ்தாபனம் ஒருவிதம் போதிக்கின்றது. வேறொரு ஸ்தாபனம் வேறு விதம் போதிக்கின்றது. அவர்களிடையே என்ன ஒரு குழப்பம்! யார் என்ன வேண்டுமானாலும் செய்து, அதே சமயத்தில் உள்ளே பிரவேசிக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். நியாயந் தீர்க்க தேவனுக்கு ஒரு நியமம் (Standard) அவசியம் - அதுதான் அவருடைய வார்த்தை. 30கத்தோலிக்க சபையை மட்டும் நான் குறைகூறுகிறேனென்று நினைக்க வேண்டாம். பிராடெஸ்டெண்டுகளும் அதே நிலையில்தான் இன்றுள்ளனர். ஒரு கத்தோலிக்க பாதிரி என்னிடம், “திரு. பிரான்ஹாம் அவர்களே தேவன் சபையிலிருக்கிறார்,'' என்று கூறினார். அதற்கு நான், “ஐயா, தேவன் தமது வார்த்தையில் இருக்கிறார். அவர் வார்த்தையாய் இருக்கிறார்,'' என்றேன். ஆம் ஐயா. அவர், “நல்லது, அவர் அதில்... சபை பிழையற்றது,'' என்றார். நான், 'அவர் அவ்விதம் கூறவில்லை. ஆனால் வார்த்தைதான் பிழையற்றது என்று அவர் கூறியிருக்கிறார்,'' என்றேன். அவர், ''நாங்கள் அந்த ஞானஸ்நானத்தை அந்த வழியில் எடுக்க போதித்து வந்தோம். இன்னும் மற்றவற்றையும்...'' என்றார். நான், “எப்பொழுது?'' என்றேன். “முன்பு ஆதி நாட்களில்'' என்றார். “அதுதான் அந்த கத்தோலிக்க சபையாயிருந்தது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?” என்றேன். அவர், ''ஆம்'' என்றார். “அப்படியானால் நான் பழைமையான நாகரீகம் கொண்ட கத்தோலிக்கன்,'' என்று பதிலுரைத்தேன், மேலும் நான், ''நான் ஆதி சபை கொண்டிருந்த பழமையான முறைகளில் விசுவாசம் கொண்டுள்ளவன். நீங்கள் எல்லாவற்றையும் குழப்பியுள்ளீர்கள். நீங்கள் வேதத்திலுள்ள ஒன்றையும் போதிப்பதில்லை. ஸ்திரீகள் மரித்தவர்களுடன் பரிந்து பேசுதல், மாமிசம் உண்ணாமலிருத்தல் போன்ற போத கங்கள் வேதத்தில் காணப்படுவதில்லை. அத்தகைய போதகங்களை வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள்'' என்றேன். அதற்கு அவர் மாறுத்தரமாக, ''அவை வேதத்தில் காணப்பட வேண்டுமென்ற அவசியமில்லை. சபை அவைகளைக் கைக் கொள்ளக் கட்டளையிட்டால், அது ஆதாரப் பூர்வமானதாகும்'' என்றார். நான் உடனே, “யாராவது வேதத்திலுள்ளவைகளில் ஏதாவது ஒன்றைக் கூட்டினால் அல்லது குறைத்தால், அவனுடைய பாகத்தை தேவன் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவார் என்று வேதம் கூறி யிருக்கிறதே!'' என்று பதிலுரைத்தேன். ஆகையால் தேவனுடைய வார்த்தை முக்கியம் வாய்ந்தது. நான் அந்த வார்த்தையை விசுவாசிக் கிறேன். இப்பொழுது, ஆமோஸ் தீர்க்கதரிசியின் புஸ்தகமும் மற்றைய வேத வாக்கியங்களும் அவ்வாறு கூறினால்... 31இதைக் குறித்து ஞாபகங் கொள்ளுங்கள். நாம் இப்பொழுது அதன் விசேஷித்த பாகங்களைப் பார்த்து கொண்டு வருகிறோம். சற்று, நான்... நான் அந்த அறைக்குள் சென்று அபிஷேகம் என் மேல் வரும்போது அங்கு நடைபெறுவதையெல்லாம் என்னால் எழுத முடிந்தால், நான் ஒவ்வொரு முத்திரையைக் குறித்தும் மூன்று மாத காலம் செய்தி கொடுக்கமுடியும். ஆகையால் ஜனங்களை திணறச் செய்யாதபடிக்கு, அது என்னவாயிருக்கின்றது என்பதைக் காணும் படியாக, முக்கியமான பாகங்களை மாத்திரமே நான் பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். ஆனால், இருந்த போதிலும், நாங்கள் அவர்களைப் புண்படுத்தாததால், ஜனங்கள் இதை விசுவாசிக்கும்போது பக்குவப் படுவார்கள். நான் என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 32இப்பொழுது, இப்பொழுது இதை கவனியுங்கள். “தேவன் தம் முடைய தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று ஆமோஸ் கூறியுள்ளான். அவர் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று நாம் காண்கிறோம். ஆகையால் இப்பொழுது அவர் வெளிப்படுத்திக் கொண்டு வருபவைகளை அவர் செயல்படுத்த வேண்டும். நியாயந்தீர்க்க வருவதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் ஏதோ ஒன்றைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் இப்பொழுது வெளிப்படுவதனால் நாம் கடைசி நாட்களில் - அதாவது லவோதிக்கேயா சபையின் கால முடிவில் இருக்கிறோம் என்று அவை சாட்சி பகருகின்றன. ஏனெனில் இவை கடைசி நாட்களில்தான் வெளிப்பட வேண்டும். 33இப்பொழுது, இதைச் சற்று யோசித்துப் பாருங்கள், நாம் அறிய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் விரும்புவதை நன்றாகக் கிரகித்துக் கொள்ளுங்கள். 'கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யார்.'' என்பதை இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள். அவர் ஒன்றைச் செய்யுமுன்பு, அதை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர் அங்ஙனம் அதை வெளிப்படுத்தும்போது, ஏதோ ஒன்று சம்பவிக்க விருக்கிறது என்பது அதன் அர்த்தம். பாருங்கள், அது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 34நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் யாவும் கடைசி நாட் களில் கடைசி எக்காளம் தொனிக்கும் முன்பு, கடைசி சபையின் காலத் தில் அளிக்கப்படும் செய்தியின் முடிவில் வெளிப்பட வேண்டும். அது சரி. அதை நீங்கள் படிக்க வேண்டுமானால் வெளி 10:1-7 வசனங்களைப் படியுங்கள். சென்ற இரவு , மூன்று முறை அதை நான் குறிப்பிட்டேன், “ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், அவன் எக்காளம் ஊதப் போகிறபோது, தேவரகசியம் வெளிப்படும் நிறைவேறும்''. ஒரே ஒரு காரியம்தான் விடப்பட்டுள்ளது. ஏழு முத்திரைகள் கொண்ட புஸ்தகம் திறக்கப்படும்போது தேவரகசியம் முழுவதும் வெளியரங்கமாகும். அநேக வருடகாலமாக, அதில் அடங்கியுள்ள இரகசியங்கள் என்னவென்று ஜனங்கள் ஆராயத் தலைப்பட்டனர். வேதத்தின் பிரகார மாக, அப்பொழுது, நாம்... ஆனால் அவை கடைசி காலம் வரைக்கும் மறைக்கப்பட்டிருப்பதால் அவைகளை அவர்கள் புரிந்துகொள்ள வகை யில்லை. அடையாளங்களாக அவை அளிக்கப்பட்டுள்ளதால் அவை களின் அர்த்தமென்னவென்பதை கடைசி காலம் வரைக்கும் யாரும் புரிந்துகொள்ள இயலவில்லை. பாருங்கள்? அவைகளின் இரகசியம் இப் பொழுது வெளிப்படுவதன் காரணத்தால் நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பது ருசுவாகிறது. 35இப்பொழுது, அவர் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யமாட்டார் என்பதை நினைவு கூருங்கள். நீங்கள் அதை மறவாதீர்கள். அவர் அதை எளிமையான விதத்தில் நிகழ்த்து வதால் புத்திமான்களும் கல்விமான்களும் அதைக் காணக்கூடாமல் போகின்றனர் என்பதையும்கூட நீங்கள் மறக்கவேண்டாம். வேண்டு மாயின் மத். 11:25-26-ஐக் குறித்துக் கொள்ளுங்கள். “அவர் அதை வெளிப்படுத்தாமல் ஒன்றையும் செய்யார்'' என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவர் அதை எளியவழியில் வெளிப்படுத்துவதால், நுண்ணறிவாளர்களும், கல்விமான்களும் அதை இழந்து விடுகின்றனர். ஞாபகங்கொள்ளுங்கள், பாவம் முதன் முதலாக இவ்வுலகில் கிரியை செய்தபோது, வார்த்தைக்குப் பதிலாக ஞானம் விரும்பப்பட்டது. அதை இப்பொழுது மறந்து போகவேண்டாம். ஓ, இவை அனைத்துக்கும் நாம் தேவனுக்கு எவ்வளவாக நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்! 36இப்பொழுது, சம்பவிக்கும் காரியங்களை சற்று நோக்குங்கள். அவர் நமக்கு அறிவித்திருக்கிறவைகளை சற்று நோக்குங்கள். இக்கூடாரத்திலுள்ள ஜனங்களே, இந்தக் கூடாரத்துடனே வளர்ந்தவர்களே, நோக்கிப் பாருங்கள். இப்பொழுது ஒலிப்பதிவு செய்பவர்களைக் கேட்கப் போகிறேன்...! நல்லது. இதைத் தொடர்ந்து ஒலிப்பதிவு செய்யுங்கள். இதை நான் என் கூடாரத்தின் மக்களுக்குச் சொல்லுகிறேன். இங்கு தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காரியங்களில் ஏதாவது ஒன்று நிகழவில்லை என்று உங்களால் சுட்டிக் காண்பிக்க முடியுமானால் செய்யுங்கள் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். அவர் எனக்கு இந்த மேடையின் மீதோ, வேறெங்கோயோ அளித்தவைகளில் யாதொன்றாவது நிகழாமல் போகவில்லையென்று எவராலும் சொல்லமுடியாது. ஒரு மனித சிந்தை இவ்வளவு பரிபூரணமாக அமைந்திருக்க முடியுமா? ஒருக்காலும் முடி யாது. 37முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜூன் மாதம் அவர் நதியினருகில் ஒளியின் ரூபத்தில் தோன்றினபோது - நான் சிறு பையனாயிருக்கும் முதற்கொண்டு எனக்குத் தேவனுடைய சத்தம் கேட் பதையும் அந்த ஒளி தோன்றுவதையும் நான் கூறியிருக்கிறேன் என்பதை உங்களில் வயது சென்றவர்கள் அறிவீர்கள். எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஜனங்கள் எண்ணினர். யாராவது என்னிடம் இவையெல்லாம் சம்பவிக்கின்றன என்று கூறியிருந்தால் நானும் அவ் வாறே நினைத்திருப்பேன். ஆனால், இப்பொழுது அதைக் குறித்து வியப் படைய அவசியமில்லை. ஆனால் சபையோ 1933-ம் வருடம் முதற் கொண்டு அதைக்குறித்து வியப்படையவில்லை. அன்று நான் நூற்றுக் கணக்கானவருக்கு அந்த நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண் டிருக்கும் சமயம்... அப்பொழுது மார்ரா (Marra) என்னும் பையன் என்னிடம், 'பில்லி, ஜனங்களை நீர் தண்ணீரில் அமிழ்த்தவா (Duck) கொண்டு செல்கிறீர்?' என்று பரிகாசமாகக் கேட்டான் என்பதை நான் நினைவு கூருகிறேன். அந்த ஜிம் மார்ரா மரித்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு மாது அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவன் “அந்த ஜனங்களைத் தண்ணீரில் அமிழ்த்தப் போகிறீரா?'' என்று அவன் கேட்டான். அதற்கு நான் அவனிடம், ''இல்லை ஐயா நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறேன்'' என்று பதிலுரைத்தேன். 38ஞானஸ்நானம் பெறுவதற்கென குழுமியிருந்தவர்களில் ஒரு பெண்மணி, மற்றொரு பெண்மணியிடம் நான் தண்ணீரில் அமிழ்க்கப் பட்டால் பரவாயில்லை'' என்று அலட்சியமாகச் சொன்னாள். நான் அவளிடம், 'நீ அவ்விதம் கூறினதால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள நீ தகுதியற்றவள். நீ மனந்திரும்பி, திரும்பவும் வா' என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டேன். பாருங்கள்? அது விளையாட்டுக்குரியதல்ல. இது ஒரு கட்டளையால் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் சுவிசேஷமாகிய வார்த்தையாகும். நீங்கள் அதை அர்த்தமற்றவையென்றும், மூடத்தனம் என்றும் இப்பொழுது சற்று கூறுவீர்களானால், அதை (அர்த்தமற்றது, மூடத்தனம் என்பதை தமிழாக்கியோன்) வேறெங்காவது பொருத்திக் கொள்ளுங்கள். ஆனால், இது சம்பவிக்கும் என்றும், அது சரியாக என்னவாக இருக்கும் என்றும் வார்த்தையில் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகங்கொள் ளுங்கள். அவ்விதமே அது இங்கே உள்ளது. 39ஜனங்கள் ஞானஸ்நானம் பெற நதியின் கரையில் அன்று நின்று கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தான். தூரத்தில் அவன் வருகை ஒரு நட்சத்திரத்தைப் போல் தோற்றமளித்தது. அவன் அருகாமையில் வந்தபோது அந்த ஒளி மரகதம் போன்ற நிறம் கொண்ட தாயிருந்தது என்றெல்லாம் நான் உங்களிடம் முன்பே கூறியுள்ளேன். நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அது இறங்கி வந்து நதியின் மேல் நின்றது. அப்பட்டிணத்திலுள்ள வியாபாரிகள், ''இதுவென்ன?'' என்று கேட்டனர். அதற்கு நான், 'அந்தக் காட்சி எனக்காக அல்ல. நீங்கள் விசு வாசிப்பதற்கென்று உங்களுக்காக அளிக்கப்பட்டது'' என்றேன். பாருங்கள்? 'நான் சத்தியத்தை அறிவிக்கிறேன் என்பதை அறிவுறுத்தவே கர்த்தர் இது நேரிடச் செய்தார்'' என்றேன். அப்பொழுது நான் 21 வயது நிறைந்த வாலிபனாயிருந்தபடியால் அவர்கள் அதை விசுவாசிக் காமற்போயினர். ஏனெனில் ஒரு வாலிபனுக்கு இது நேரிடுவது மிகை யான காரியமாகும். அதன்பின் நான் சிந்திந்தித்துக்கொண்டிருந்தேன்... 40இங்கு அமர்ந்திருக்கும் நம் தர்மகர்த்தாக்களில் ஒருவரான சகோ. ராய் ராபர்ஸன், ஹூஸ்டன் பட்டிணத்தில் அந்தப் புகைப்படம் எடுக்கப் பட்டபோது அவர் அங்கிருந்ததை சில நிமிடங்களுக்கு முன்னால் எனக்கு ஞாபகப்படுத்தினார். அன்று நடந்த விவாதத்தின்போது நானும் அங்கிருந் தேன். சகோ. ராயும் அவருடன் கூட வேறொருவர் மாத்திரமே அன்று டேப் ரிக்கார்டர்களை வைத்திருந்தனர். அவை பழைய காலத்து மின்சார டேப் ரிக்கார்டர்கள். சகோ. ராய் ராபர்ஸனும் அவர் மனைவியும் இப்பொழுது, அங்கு அமர்ந்திருப்பதை காண்கிறேன். அப்பொழுது திருமதி ராபர்ஸன் வியாதிப்பட்டிருந்தார். சகோ. ராய் போரில் அனுபவம் வாய்ந்த ஒருவர். அவர் இரண்டு கால்களும் போர்க்களத்தில் காயப்பட்டன. அவர் மரித்தவர்போல கிடத்தப்பட்டார். அவர் சைனியத்தில் பெரிய ஒரு உத்தியோகஸ்தராக இருந்தார். ஜெர்மானிய துருப்புகள் அவர் உபயோகித்திருந்த டாங்கி யைத் (Tank) தாக்கி, அவரைக் காயப்படுத்தி குத்துயிராக்கினர். அவர் மரித்தவரைப்போல் அநேக காலம் கிடந்திருந்தார். நரம்புகள் பாதிக்கப் பட்டதால், அவர் இனி ஒருக்காலும் நடக்கமுடியாது என்று கூறினார்கள். ஆனால் இப்பொழுதோ அவர் என்னைக் காட்டிலும் வேகமாக நடக்கிறார். ஆனால் அது என்ன? அவர் ஹூஸ்டனில் முக்கியமான ஒன்றைக் கண்டு கொண்டார். அவர் தன் மனைவியைக் குறித்து என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அன்று அவர் பதிவு செய்த ஒலிநாடாவை இன்று ஆராதனை முடிந்தவுடன் உங்களுக்குப் போட்டுக் காண்பிப்பார் என்று நான் நம்புகிறேன். ஹூஸ்டனில் நடைபெற்ற ஆராதனையை அவர் தன்னுடைய பழைய மின்சார டேப்பில் பதிவுசெய்துள்ளார். வியாதி யாயிருந்த அவர் மனைவி ஹூஸ்டனில் நடந்த அந்த ஆராதனைக்குக் கொண்டுவரப்பட்டாள். அவள் வியாதிப்பட்டு அதிக விசனமுற்றவளாய், ஜன்னலின் அருகில் உட்கார்ந்துக்கொண்டு ஜெபம் செய்துகொள்வதற்கென, ஜனங் கள் செல்லும் வரிசையில் எவ்வாறாயினும் கலந்துகொள்ள ஜெபச்சீட்டைப் பெற வேண்டுமென்று அதிக ஆவல் கொண்டிருந்தாள். அதற்கு முன்பு அவர்களை நான் கண்டதேயில்லை, அவர்களும் என்னை அறிந்திருக்கவில்லை. அன்றிரவு அல்லது அடுத்த நாள் இரவு அல்லது வேறொரு நாளிலோ.... அது அன்றிரவுதான் என்று நான் நம்புகிறேன். அவ்வரி சையில் அவள் கலந்துகொண்டாள். அவள் மேடைமீது ஏறினவுடன் பரி சுத்த ஆவியானவர் அவளிடம், ''நீ இந்தப் பட்டிணத்தைச் சேர்ந்த வளல்ல, நீயூ ஆல்பனி (New Albany) என்னும் பட்டிணத்திலிருந்து வந்திருக்கிறாய். இன்று ஜன்னலின் அருகில் நீ உட்கார்ந்தவாறு, எப்படியும் ஜெபச்சீட்டு கிடைக்க வேண்டுமே என்று கவலை கொண்டிருந்தாய்'' என்று என் மூலம் அறிவித்தார். அநேக வருடங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் அந்த ஒலி நாடாவில் பதிவு செய்யப் பட்டுள்ளது. 41அந்தக் கூட்டத்தின் துவக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் அங்கே..... அப்பொழுது நிகழ்ந்த அந்தக் கூட்டங்களில் முதலாம் நாளன்று 3000 பேர் மாத்திரமே வந்திருந்தனர். அது பின்பு 8000 பேராகப் பெருகி, முடிவில் 30,000 பேர் கூட்டத்தில் கலந்து கொண்ட னர். நான் முதல் கூட்டத்தில் பேசினபோது, ''நான் ஏன் இதைச் சொல்லு கிறேன் என்று எனக்கே தெரியவில்லை'' அதுவும் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ''ஆனால் இது என் வாழ்க்கையில் நேர்ந்த முக்கி யமான காரியங்களில் ஒன்றாக இருக்கும். இக்கூட்டத்தில் இதுவரை யாரும் காணாத ஒரு மகத்தான சம்பவம் நிகழப்போகிறது'' என்று கூறினேன். எட்டு, ஒன்பது அல்லது பத்து நாட்களுக்குப் பின்னர், 30,000 பேருக்கு முன்பாக கர்த்தருடைய தூதன் தோன்றினான். அப்பொழுது புகைப்படமும் எடுக்கப்பட்டது. அது வாஷிங்டனில் தனி பிரசுர உரிமையைப் (Copyright) பெற்றிருக்கிறது. உலகிலேயே தெய்வம் மான ஒன்றைப் புகைப்படம் எடுத்தது இதுவே முதன் முறையாகும் நான் சில நேரங்களில், ஒருவர் மரணத்தினால் நிழலிடப்பட்டிகிறார். ஒரு கருத்த முகமூடி அவர் மேலிருக்கிறது. அவர் மரிக்கும் தருவவாயிலிருக்கிறார்“ என்று பகுத்தறிந்து கூறுவதை நீங்கள் கேட்டதுண்டு. 42நான் கிழக்கு பைன்ஸ் அல்லது தென் பைன்ஸ் (Southem line என்னும் இடத்தில் கடைசி நாள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயம், என்று நம்புகிறேன். ஒரு மாது மரிக்கும் தருவாயிலிருப்பதை நான் பத்து தறிந்து கூறினேன். அப்பொழுது அருகில் இருந்த பெண்மணியிடம் அதைப் புகைப்படம் எடு. சீக்கிரம் என்று ஏதோ ஒன்று கூறிற்று 'அதோ அது அங்குள்ளது. அந்த அறிக்கைப் பலகையில் தொங்கவிடபட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். சிறிது காலமாகவே அது அங்கே இருக்கின்றது. அந்தப் படத்தில் அவள் தலையை கருமை நிறமுள்ள நிழல் மூடியிருப்பதை நீங்கள் காணலாம். பரிசுத்த ஆவியானவர், நீ சுகமாகப்போகிறாய். கர்த்தர் உன்னை சுகப்படுத்திவிட்டார். புற்றுநோய் உன்னைவிட்டு அகன்றது என்று அறிவித்தவுடன், அந்தப் பெண்மணி வேறொரு புகைப்படம் எடுத்தால் அதில் அந்த கருமை நிறமுள்ள முகமூடி மறைந்து போயிருந்தது அதோ அது அங்கே உள்ளது. அவள் குணமானாள். பாருங்கள்? ஆகவேதான் பாருங்கள்? அந்த நாளின் நாழிகை என்னவாய் இருக்கிறது என்பதை தேவன் அறிவார் என்பதையே இது காட்டுகிறது. நாமோ அதை அறியோம் நாம் அவருக்கு கிழ்ப்படிய வேன்டியவர்களாய் மாத்திரமே! இருக்கின்றோம். இவ்விதம் பேசிக்கொண்டே போகலாம். முதலாம் முத்திரையை பற்றி அறிந்துள்ளதை இப்பொழுது நாம் ஒரு சில நிமிடங்கள் விமர்சனம் செய்து, இதனுடன் ஒருங்கிணைப்போம். 43முதலாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, சாத்தான் மத சம்பந்தமான ஒரு பராக்கிரமசாலியைக் கொண்டிருந்தான் என்று பார்த்தோம் அந்த வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்தவனை நீங்கள் கவனித்தீர்களா? அவ்விதம் சென்றது ஆதி சபையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், என்னே, வருடங்கள் முழுவது மாக அது அவ்விதமாகவே போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது அவ் விதம் இருக்க முடியாது. மீதியுள்ளவைகளையும், நீங்கள் சற்று கவனி யுங்கள். நாம் இவைகள் யாவையும் ஒன்றாய் பிணைக்கும்பொழுது, அது எங்கே உள்ளது என்பதை நீங்கள் அப்பொழுது நோக்கிப் பாருங்கள். பாருங்கள். இப்பொழுது, எல்லா முத்திரைகளின் இரகசியங்கள் என்ன வென்பதை இதுவரை அறியேன். ஆனால் ஒன்று மாத்திரம் அறிவேன். அவை யாவும் தேவனுடைய சத்தியமாயிருப்பதால், எல்லாம் சரிவர பொருந்த வேண்டும். அது சத்தியமாயிருக்கிறது. வெள்ளைக் குதிரையின் மேலேறியிருப்பவன் ரோம குருக்காளாட்சியின் சபை என்பது திண்ணம். 44யூதர்கள்தான் அந்திக்கிறிஸ்து என நம்புகிறவர்கள் உண்மைக்கு அநேக மைல்கள் அப்பாற்பட்டவராயிருக்கின்றனர். யூதர்களை அந்திக் கிறிஸ்துவாக நீங்கள் ஒருபோதும் கருத வேண்டாம். நாம் மனந்திரும்பி, காணியாட்சிக்குள் உட்பிரவேசிக்கத் தருணம் அளிக்கப்படுவதற்கென்ற நோக்கத்திற்காகவே அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டன. அந்திக்கிறிஸ்து புறஜாதியாயிருக்கிறான். -சத்தியத்தைப் போலி யாக ஆள்மாறாட்டம் செய்யும் ஒருவனாயிருப்பான். நிச்சயமாக. (Anti Christ) anti என்றால் “எதிரான” என்று பொருள்படும். வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் பராக்கிரமசாலியாய் மாறி, கடைசியில் சிங்காசனத்தில் அமர்த்தப்படுகிறான். அதன்பின் அவன் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட பின், முடி சூட்டப்படுகிறான். இப்பொழுது, அதன்பின், அவன்.... தேவனுக்குப் பதிலாக அவன் ஆராதிக்கப்படுகிறான். 45இப்பொழுது, நோக்கிப் பாருங்கள், அது வருவதற்கு முன்பாகவே... நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். யார் அவன்? ஒரு மனிதன் தோன்றுவானென்று பவுல் 2 தெசலோனிக்கேயர் 2:3-ல் உரைத்த அவன் யார்? அவன் ஏன் காலங்களின் வழியாய் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கண்டான்? பவுல் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தான். நிச்சயமாக. ஏன்... “ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி பிற்காலங் களில் சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்குச் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்” என்று கூறப்பட்டதன் காரணம் யாது? வஞ்சிக்கிற ஆவி என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் சபையில் காணப்படும் வஞ்சக ஆவி - குருவானவர்களின் வஞ்சக ஆவி, பிசாசின் கிரியைகள், சபையில் காணப்படும் மாய்மாலம். 46துணிகரமுள்ளவர்கள் இறுமாப்புள்ளவர்கள் சாமர்த்தியமுள்ளவர்கள், அறிவு படைத்தவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து (நாங்கள் கிரிஸ்தவர்கள், நாங்கள் ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்பவர்கள்) தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையையும், கிரியையும், வெளிப்பாடுகளையும் மறுதலிப்பவர்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு' பாருங்கள்? இப்பொழுது 'கவனியுங்கள். மேலும் பவுல், இப்படிப்பட்டவர்கள் பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் 'நுழைந்து (பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் பெண்பிள்ளைகள் அல்ல) பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, சுற்றித் திரிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் நுழைந்து அவர்களை 'வசப்படுத்திக் கொள்வார்கள்' என்றான். 47பற்பல இச்சைகள் - அப்படிப்பட்ட பெண்பிள்ளைகள் எல்லாவித சமுதாயத்திலும் நுழைந்து, விருப்பம்போல வாழ்க்கை நடத்தி நாங்கள் 'சபைக்கு செல்லுகிறோம். ஆகையால் மற்றவர்களைப்போல் நாங்களும் 'நல்லவர்கள் என்று கூறிக்கொள்வார்கள் - நடன கச்சேரிகள் களியாட்ட விருந்துகள், மயிரைக் கத்தரித்தல், வர்ணம் தீட்டிக்கொள்ளுதல் விருப்பம் போல் ஆடை உடுத்திக் கொள்ளுதல் போன்ற காரியங்களில் 'வாஞ்சையாயிருக்கின்றனர். என்றாலும், நாங்கள் பெந்தெகொஸ்தர். நாங்கள் மற்றவர்களைப்போல நல்லவர்கள்' என்று கூறுகின்றனர் ஓ! 'உங்கள் சொந்த கிரியைகளே உங்களை அடையாளம் காண்பிக்கின்றது கவனியுங்கள். மேலும் பவுல், இவர்கள் துர்புத்தியுள்ள மனுஷர், சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பவர்கள்'' என்றான். சத்தியம் என்பது என்ன? அதுதான் கிறிஸ்துவாகிய வார்த்தை. சத்தியத்தைக் குறித்து “ஓ... நீர். நீர் பெண்களை வசைபாடுபவர், நீர் பெண்களை வெறுக்கிறவன்,'' என்று அநேகர் சொல்லுகின்றனர். ''நீங்கள் இதைச் செய்கிறீர்கள். அதைச் செய்கிறீர்கள்'' என்று கூறுகிறீர்... '' இல்லை, ஐயா. அது உண்மையன்று. அது வெறும் பொய். நான் பெண்களை வெறுக்கிறவன் என்கின்றனர். இல்லை, ஐயா. அவர்கள் என் சகோதரிகள் அவர்கள் சகோதரிகளாய் இருந்தால். ஆனால் நான் அந்தக் காரியம்..... அன்பு கண்டித்து சீர்படுத்துகிறது. அங்ஙனம் சீர்ப்படுத்தாவிடில் அது அன்பல்ல. அது மாம்சப் பிரகாரமான (Phileo) அன்பு, தெய்வீக அன்பு (agapao), அல்ல. ஒரு அழகான பெண்ணைக் காணும்போது, மாம்சப் பிரகாரமான அன்பு ஒருக்கால் உங்களில் உண்டாகக் கூடும். ஆனால் தெய்வீக அன்பு வித்தியாசப்பட்டது. அந்த அன்பு கோணலான வைகளை நேராக்கி, தேவனை சந்திக்கச் செய்து, நாம் அவருடன் நித்திய காலமாக வாழச் செய்கிறது. பாருங்கள்? அது தொனித்த வழியில் நான் அதைக் கருதாமல் இருக்கலாம், ஆனால் நான்... நான் என்ன... நீங்கள் அறிவீர்கள். நீங்கள் புரிந்து கொண்டீர்களென்று நினைக்கிறேன். அது சரி. 48ஆனால், இப்பொழுது, ஞாபகங்கொள்ளுங்கள். மேலும் பவுல், “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் இவர்களுடைய மதிகேடு சீக்கிரத்தில் வெளிப்படும்'' என்கிறான். ஏன்? முக்கியமான ஒன்றைச் செய்ய கர்த்தர் மோசேக்குக் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், அவனால் கூடியமட்டும் உத்தமமாக அங்கு சென்றான். அவன் தன் கோலைத் தரையில் போட்டால் அது சர்ப்பமாக மாறுமென்று தேவன் அவனிடம் சொன்னார். அப்பொழுது என்ன சம்ப விக்கும் என்று அவனுக்குக் காண்பிக்கும்படி தேவன் அதைச் செய்தார். அவனும் உத்தமமாக அதைப் பின்பற்றி பார்வோனின் முன்னிலையில் தேவன் கட்டளையிட்டபடிச் செய்தான். அப்பொழுது அது சர்ப்பமாக மாறினது. அப்பொழுது பார்வோன், “இது மலிவான மந்திரவாதியின் தந்திரம்' என்று சொன்னான் என்பதில் சந்தேகமே இல்லை. அவன் தன்னுடைய யந்நேயையும் யம்பிரேயையும் வரவழைக்கிறான். ''நாங்களும்கூட இக்காரியங்களைச் செய்கிறோம்'' என்று கூறி, அவர்களும் தங்கள் கோல்களைத் தரையில் போட, அவை சர்ப்பமாக மாறின. இப்பொழுது, மோசேயினால் என்ன செய்ய முடியும்? 49அது என்ன? தேவனுடைய உண்மையான கிரியை ஒவ்வொன்றுக்கும் சாத்தான் அதற்கு ஒப்பான ஒரு போலியான ஒன்றை வைத்திருக்கிறான். அவர்கள் போலித்தனம் செய்து, ஜனங்களை வழித்தவறச் செய்கிறான். அப்பொழுது மோசே, ''நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆகையால் நான் போய்விடுவது நல்லது'' என்ற சொன்னான்? அவன் தேவனுடைய கட்டளையை முற்றிலும் உறுப்புக்கு உறுப்பு கீழ்ப்படிந்தவனாய் அங்கு அசையாமல் நின்றான். அதன்பின், நீங்கள் அறிந்து கொள்ளுகிற முதற்காரியம் என்ன வென்றால், மோசேயின் சர்ப்பம் மற்ற சர்ப்பங்களை விழுங்கியது. பாருங்கள்? அந்த மற்ற சர்ப்பத்திற்கு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது எவ்விடத்திற்குச் சென்றது? மோசே தன் கோலை எடுத்து, அதனுடன் வெளியே சென்றான். அக்கோலைக் கொண்டு அவன் அநேக அற்புதங்கள் செய்தான். இந்த கோலுக்குள் அந்த சர்ப்பம் இருந்தது. பாருங்கள்? அது ஆச்சரிய மல்லவா? ஆம், ஐயா. இப்பொழுது அந்திக்கிறிஸ்து படிப்படியாக வெளியரங்க மாகிறான். நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் கேள்விப்படும்பொழுது.... 50இப்பொழுது என் கத்தோலிக்க நண்பர்களே, ஒரு நிமிடம் அமைதி யாயிருங்கள். பிராடெஸ்டெண்டுகள், மற்றுமுள்ளவர்கள் அனைவரும் இப்பொழுது எந்நிலையில் உள்ளனர் என்பதை நாம் காணலாம். பாருங்கள். முதலாம் சபையைக் கவனியுங்கள். கத்தோலிக்க சபை தங்களை மூல சபை என்று அழைத்துக் கொள்வது ஒரு விதத்தில் சரியே. அவர்கள் அவ்விதமே இருந்தனர். கத்தோலிக்க சபையும் பெந்தெகொஸ்தே நாளில் தான் ஆரம்பித்தது. சபையின் சரித்திரம் அவர்கள் பெந்தெகொஸ்தே காலத்தில் ஆரம்பித்தது உண்மைதான் என்று நான் கண்டு பிடித்தேன். ஆனால் அவர்கள் அகன்று போகத் தொடங்கினர். அவர்கள் எங்கேயுள்ளனர் என்பதை நீங்கள் காணலாம். பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் தற்போதைய வேகத்தில் அகன்று செல்லுமானால், கத்தோலிக்க சபையைப் போன்று அதற்கு 2000 வருட காலம் அவசியமில்லை. இன்றிலிருந்து நூறு வருடங்களுக்குள்ளாக அவர்கள் கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மிகுதியாக அகன்று சென்றிடுவார்கள். அது உண்மை. 51ஆனால், இந்த வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்பவன் எப்படி என்று கவனியுங்கள். இரண்டாம் முத்திரையை தியானிப்பதற்கு அவசியமான சூழ்நிலையை உண்டாக்குவதற்காக இவைகளைக் கூறுகிறேன். இப்பொழுது வெள்ளைக் குதிரையின் மேலிருப்பவன் புறப்பட்டுச் சென்றபொழுது கவனியுங்கள்- அவன் மூன்று கட்டங்களில் கிரியை செய்கிறான். நான் நேற்று இரவு உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்தது போல, பிசாசும், தேவனைப்போன்று, மூன்று கட்டங்களில் காணப்படுகிறான். ஆனால், அந்த மூன்று கட்டங்களிலும் அதே பிசாசுதான். அவனுடைய மூன்று கட்டங்களையும் கவனியுங்கள். முதல் கட்டத்தில் அவன் வருவது ... பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மேல் ஊற்றப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றையும் பொதுவாக அனுபவித்தனர். தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மேல் தங்கியிருந்தார். அப்போஸ்தலர்கள் வீடுகள்தோறும் சென்று அவர்களுடன் அப்பம் பிட்டனர். அநேக அடை யாளங்களும் அற்புதங்களும் அப்போஸ்தலர்களால் அக்காலத்தில் செய்யப்பட்டன. அப்பொழுது முதலாவது நீங்கள் அறிவது என்னவெனில், சாத்தான் அவர்களிடையே ஒரு முறுமுறுப்பை உண்டுபண்ண ஆரம்பித்தான். 52அதன் பின்னர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த எளியவரும் அடிமைகளும் வெவ்வேறு பாகத்தில் சென்று அவர்கள் எஜமான்களுக்கு தேவனைக் குறித்து சாட்சி பகன்றனர். ஓ, சிலகாலம் கழிந்த பிறகு சைனியத் தலைவர்களும், வித்தியாசமான ஜனங்களும் வருகை தர ஆரம்பித்தனர். மற்றும் பல கெளரவம் வாய்ந்தவர்களும் இவர்கள் நிகழ்த்தும் அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்டு கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தனர். நல்லது. அதன்பின், அவன் (மேட்டுக் குடியினன் - தமிழாக்கியோன்) கிறிஸ்துவத்தை தழுவிக்கொண்டபொழுது, கிறிஸ்தவர்கள் எங்கு கூடினார்களோ அங்கே, பழைய இருளடைந்த அறைகளில் தங்கள் கைகளைத் தட்டி சத்தமிட்டு, அன்னிய பாஷையில் பேசி, செய்திகளைப் பெற்றுக் கொண்டார்களோ அங்கே சென்றான். ஏன், அவன் (அந்த கெளரவம் வாய்ந்தவன் - தமிழாக்கியோன்) தன் சக வியாபாரி, போட்டியாளன் (Competitior) 'அவன் இதை, இதைப் போன்றதை ஒருபோதும் விசுவாசிக்கமாட்டான்' என்பதால், அதை அவனால் அவர்களிடம் ஒருபோதும் கொண்டு செல்லவும் முடியாமல் போயிற்று. உண்மையாகவே முடியவில்லை. ஆகவே, அவன் அம்முறையை மாற்றி அமைக்க எண்ணினான். அதனால், அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, “இப்பொழுது நாம் சிறிது வித்தியாசமான ஒன்றை உருவாக்குவோம்'' என்று யோசிக்க ஆரம்பித்தனர். 53இயேசுவும் சரியாக தாமதமில்லாமல் வெளிப்படுத்தல் 2-ம் அதிகாரத்தில் முதலாம் சபைக்குச் செய்தியை அளிக்கும்போது, ''நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளின் நிமித்தமாக, நான் உங்களை சற்று எதிர்க்கிறேன்'' என்று கூறினார். நிக்கொலாய் என்பது “சபையின் மேல் ஜெயங்கொள்ளுதல்'' எனப்பொருள்படும். அதாவது, நாம் அனைவரும் ஒருவர் என்பதற்குப் பதிலாக, அவர்கள் ''பரிசுத்த மனிதன்'' என்னும் ஒருவனை சபையில் ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் ஒருவிதமான... ஏற்படுத்த விரும்பினர். அவர்கள் விட்டுவந்த அஞ்ஞான மதத்தின் மாதிரியின்படி கிறிஸ்தவ மார்க்கத்தையும் அமைக்கத் தலைப்பட்டனர். அதைச் செய்து முடித்தனர். இப்பொழுது கவனியுங்கள்.முதலாவதாக நிக்கொலாய்,, நிக்கொலாய் என்பது வேதத்தில் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றது ஏனெனில் அது கிறிஸ்துவின் மூல உபதேசங்களுக்கும் அப்போஸ்தலர் உபதேசங்களுக்கும் விரோதமாயிருந்தது. 54சில வருடங்களுக்கு முன்னால் ஒரு புகழ்வாய்ந்த மனிதன் நடத்தும் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அவருடைய பெயரை அறிவிக்க நான் விரும்பவில்லை. அவருடன் நான் கைகுலுக்கினேன் ஆகையால் நான் கூட்டத்திலிருக்கிறேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர், ஓ, உங்களுக்குத் தெரியுமா, தங்களை பெந்தெகொஸ்தேகாரர் என்று அழைத்துக்கொள்பவர்கள் இன்று நம்மிடையே 'உள்ளனர். அவர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அது சபை கட்டப்படுவதற்கென தற்காலிகமான சாரமாய் அமைந்த ஒன்றாகும் (Scaffold work) என்றார். வேதத்தை நன்கு படித்து அறிந்திருந்த அந்த பெருந்தன்மையுள்ள வயோதிபர் இவ்வாறு குறிப்பிடுவதைப் பற்றி நம்மால் கற்பனை செய்யவும் முடியவில்லை. அதன் கருத்து அந்த சொற்கள் பரிசுத்த ஆவியினால் உண்டானவையல்ல. நல்லது, அது எங்கேயும் பொருந்தாது. ஏனெனில் சாதாரண அறிவைப் பெற்றிருக்கும் மனிதனும்கூட அப்போஸ்தலர் செய்த கிரியைகள், அவை அப்போஸ்தலருடைய கிரியைகள் அல்லவென்றும், அவை அப்போஸ்தலர்களுக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் நடப்பித்த கிரியைகள் என்றறிவான். சபையின் காலங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, எவ்வாறு நான்கு ஜீவன்களான மத்தேயு, மாற்கு, லூக்கா யோவான் என்பவரின் சுவிசேஷ புஸ்தகங்கள் சூழநின்று மத்தியிலுள்ள அப்போஸ்தலருைய நடபடிகளின் புஸ்தகத்தைக் காவல் காக்ககின்றன என்று உதாரணப்படுத்தினோமல்லவா? மத்தேயு, மாற்கு, லூக்கா யோவான் எழுதின சுவிசேஷங்களின் விளைவினால் அப்போஸ்தலருடைய நடபடிகள் உண்டாயின. 55அதுதான் மரத்தில் தோன்றிய முதல் கிளையாகும். சம்பவித்ததும் அதுவேயாகும். அம்மரத்தில் வேறொரு கிளை தோன்றுமாயின், அப்பொளுது நடைபெறும் கிரியைகள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தைப் போன்ற வேறொரு புஸ்தகத்தில் எழுதப்படும். ஏனெனில், நீங்கள் பாருங்கள், ஒரே வகையான ஜீவன்தான் அவைகளில் காணமுடியும். ஆனால் இன்றைக்கு மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன், கிறிஸ்துவின் சபை, பெந்தெகொஸ்தே சபை என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஸ்தாபனங்களில் இந்த ஜீவன் காணப்படுகின்றதா? அதை ஒருக்காலும் நீங்கள் இத்தகைய ஸ்தாபனங்களில் காணமுடியாது. 56பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தில் இது சிறிதாகிலும் காணப்படு கின்றது என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அவர்கள் லவோதிக் கேயா சபையின் காலத்தில் தோன்றினவர்கள். அவர்கள் சத்தியத்தைக் கடைப் பிடித்திருந்தனர். ஆனால் இப்பொழுதோ அதைப் புறக்கணித்து விட்டனர். அவர்கள் வெதுவெதுப்பாக ஆனபடியால், தேவன் அவர்களைத் தம் வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போட்டார். இது சரியாக வேத பூர்வமானதாகும். வேதம் ஒருபோதும் பொய்யுரையாது. பாருங்கள்? அவைகள் எப்போதும் சத்தியமாய் இருப்பவையாகும். வேதம் உங்கள் சிந்தனைக்கு இணங்கவேண்டுமென்று நீங்கள் எண்ணவேண்டாம். அதற்கு மாறாக உங்கள் சிந்தனை எப்பொழுதும் வேத வாக்கியங்களுடன் ஒத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் தேவனுடன் நடைபோட முடியும். அதற்காக உங்கள் சிந்தனையை நீங்கள் எவ்வளவாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் சிந்தனை வேதத்துடன் இணைந்திருக்கட்டும். பாருங்கள்? 57பரிசுத்த ஆவி முதன் முறையாக மக்களின் மேல் விழுந்தபோது என்ன நிகழ்ந்ததென்று பாருங்கள். நல்லது. தேவன் முதன்முறை என்ன செய்தாரோ, அவ்வாறே ஒவ்வொரு முறையும் அவர் செய்யவேண்டும். இல்லையெனில், அவர் முதலில் தவறு செய்தார் என்று அர்த்தமாகிறது. பாருங்கள்? நாம் மானிடராகையால், தவறு செய்வதற்கு ஏதுவுண்டு . தேவனால் அது (தவறுவது) கூடாத காரியம். தேவனின் முதல் தீர்மானம் பரிபூரணமானது. அவர் செய்யத் தீர்மானித்திருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்த முறை இருக்க முடியாது. அதன் மேல் அவர் திருத்தல்கள் செய்யமுடியாது. ஏனெனில் அது ஆரம்பத்திலேயே பரிபூரணமாயிருக்கின்றது. இல்லையெனில், அவர் முடிவற்றவர் (infinite) அல்ல. அவர் முடிவற்றவராயிருந்தால், அவர் எல்லாமறிந்தவராயிருத்தல் வேண்டும் (Omniscient). அவர் எல்லா மறிந்தவராயிருந்தால், அவர் சர்வ வல்லமை பொருந்தினவராய் (Omnipotent) இருத்தல் வேண்டும். ஆமென்! அவர் தேவனாயிருப்ப தற்கு இத்தகைய தன்மைகளைப் பெற்றிருத்தல் அவசியம். பாருங்கள். அவர் பின்னர் அதிகம் அறிந்து கொண்டார்'' என்று நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகம் அறிந்துகொள்ள முடியாது. அவரே ஞானத்தின் ஊற்றாவார். பாருங்கள்? 58நமக்குள்ள ஞானம் சாத்தானிடமிருந்து தோன்றினது. ஏதேன் தோட்டத்தில் ஏவாள் விசுவாசத்துக்குப் பதிலாக ஞானத்தைத் தெரிந்து கொண்டாள். அந்த ஞானத்தை நாம் அவளிடமிருந்து சுவீகரித் துள்ளோம். இப்பொழுது வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் அந்திக் கிறிஸ்து என்று முதலில் அழைக்கப்படுகிறான். இரண்டாம் கட்டத்தில் அவன் கள்ளக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் அதுவரை மக்களிடையே காணப்பட்ட ஆவி அப்பொழுது ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறது. வெள்ளைக் குதிரையின் மேலேறியிருந்தவன் புறப்பட்டுச் சென்ற போது அவனுக்குக் கிரீடமில்லை என்பது நினைவிருக்கிறதா? பின்பு, அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகிறது. ஏன்? அவன் தொடக்கத்தில் நிக்கொலாய் (Nicolaitane Spirit) ஆவியாயிருந்து, பின்னர் ஒரு மனித னுக்குள் வாசம் செய்து, சிம்மாசனத்தில் வீற்றிருந்து, கிரீடம் சூட்டப் படுகிறான். அச்சிம்மாசனத்தில் அவன் வெகுகாலம் வீற்றிருந்தான் என்பதை முத்திரைகள் உடைக்கப்படுவதில் நாம் பார்க்கலாம். வெகுகாலம் கழிந்த பின்னர், சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியே உதைத்துத் தள்ளப்பட்டான். அவன் கீழே வந்து, வேத வாக்கியங்களின்படி, தன்னை அரியணையிலமர்த்திக் கொண்டான். அவன் அந்த மனிதனுக்குள் தன்னை அரியணையிலமர்த்திக் கொண்டு (enthroned himself) மிருகமாகிறான் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவன் அதே மனிதனுக்குள் புகுந்துகொள்கிறான். அப்பொழுது அவன் மிருகமென அழைக்கப்படுகிறான். அவன் மிகுந்த வல்லமை கொண்டவனாய், மேலான வல்லமை கொண்டவனாய், அற்புதங்கள் அநேகம் செய்து, யுத்தத்தில் அநேகரைக் கொன்றுபோடுவான். ஆம், ரோமாபுரி தன்னாலியன்றவரை இவை அனைத்தையும் செய்யும், அது உண்மை . அவன் கொடூரமான ரோம தண்டனையை அநேகருக்கு விதித்து அவர்களைக் கொன்றான். ஓ, இப்பொழுது சில வேத வாக்கியங்களைப் படிக்க முடிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் ரோம தண்டனை விதிக்கப்பட்டு மரித்தார் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். 59அடுத்த பெரிய வெள்ளிக்கிழமை பகலன்று நான் பிரசங்கிக்கத் தீர்மானித்திருக்கும் செய்தி, 'அங்கே அவர்கள் அவரைச் சிலுவை யில் அறைந்தார்கள்' என்னும் தலைப்பைக் கொண்டதாயிருக்கும், பாருங்கள் 'அங்கே' - உலகத்திலேயே பரிசுத்தமான, மதசம்பந்தமான காரியங்களில் ஈடுபட்டிருந்த ஸ்தலம் எருசலேம். 'அவர்கள்' - உலகி லேயே மிகவும் பரிசுத்தமுள்ளவரென்று கருதப்பட்ட யூதர்கள், 'அவரை'இதுவரை வாழ்ந்தவர் எல்லாரிலும் மிகவும் மகத்தானவர். 'சிலுவையில்றைந்தார்கள்' ரோமாபுரி கொண்டிருந்த மிகக் கொடூரமான தண்டனை. அங்கே அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். ஓ.... என்னே! வியாபாரிகளின் சங்கத்தில் நான் இச்செய்தியை அளிக்கும்போது, தங்கள் நிலையை அவர்கள் அறிந்துகொள்ள தேவன் எனக்கு உதவி செய்வாராக! சரி. இப்பொழுது, வித்தியாசப்பட்டவர்கள் என்பதற்காக அல்ல, அவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக அல்ல. அவர்கள் பிரசுரிக்கும் வியாபாரிகளின் பத்திரிகை' (Business Men's Journal)யில் பரிசுத்த பிதாக்களைக் குறித்தும், முக்கியஸ்தர்களைக் குறித்தும் அவர்கள் எழுதுபவை அனைத்தும் அர்த்தமற்றவை என்பதை அறிவுறுத்தவே. கிறிஸ்தவர்கள் எந்த ஒரு மனிதனையும் பிதா' என்று அழைக்கக்கூடாது. அவர்கள் அதைத் தொடங்கினர். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு நான் ஆவிக்குரிய வழிகளில் உதவி செய்ய முயன்றிருக்கிறேன். இந்த பிரசங்கம் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி நாடாக்கள் அங்கு செல்கின்றன என்பதைக் கவனிக்கவும். நான் அதை முடித்து விட்டேன். ஆகையால் இனிமேல் அவர்களுக்கு நான் நிச்சயமாக புத்திமதி கூறப்போவதில்லை. அது உண்மை . முதலாவது, கிறிஸ்துவை நினைவுகூறுங்கள். 60முதலாவதாக, நிக்கொலாய், அந்த நிக்கொலாய் கூறினது என்ன? அக்காலத்தில் மக்கள் கூச்சலிட்டு, கைகளைத் தட்டிப் பாடி, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, இகழ்ச்சிக்குரியவர்போல் காணப்பட்டு, பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்ந்தது போன்று, குடிகாரரைப் போல் நடந்து கொண்ட கூட்டத்திலிருந்து விலகவேண்டுமென்று கூறினது. இதை கெளரவம் வாய்ந்த அவர்கள் இதைச் சகிக்க முடியாமல் அவர்களிடமிருந்து பிரிந்து போக விழைந்தனர். அவர்கள் குடிகாரரென்று அவர்கள் அழைத்தனர். அந்த மேட்டுக் குடியினர்... கவனியுங்கள். இதைத் தவறவிடவேண்டாம். இது உங்களுக்கு முட்டாள்தனமாக தொனித்தாலும், இது சத்தியமாய் உள்ளது. அந்த கெளரவம் வாய்ந்தோர் அங்கு வர ஆரம்பித்தபொழுது, அவர்களால் தங்களைத் தாழ்த்திக் கொண்டு அங்ஙனம் பணிந்து நடந்து கொள்ள முடியவில்லை. தேவன் தம்மைப் பணிவான நிலைக்குத் தாழ்த்துவதனால் அவர் மகத்தானவராகக் கருதப்படுகிறார். அதுதான் அவரை மகத்தானவராக்கு கின்றது. அவரைக் காட்டிலும் மகத்தானவர் யாருமில்லை. ஆனால் எந்த மனிதனும் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாத அவ்வளவு பணிவான நிலைக்கு அவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டார். அவர் பரலோகத்தின் ராஜாவாயிருந்தார். ஆனால் பூமியிலேயே மிகவும் எளிமையான பட்டிண மாகிய எரிகோவுக்கு அவர் வந்தார். அங்கு மிகவும் குள்ளனான சகேயு வும்கூட கீழே குனிந்து தம்மைக் காணத்தக்கவாறு அவர் தம்மை அந்த நிலைக்குத் தாழ்த்திக் கொண்டார். அது சரிதானா? அது சரி. அவர் ''மந்திரவாதியென்றும், பிசாசு என்றும், பெயல்செபூப்“ என்றும் மிகவும் மோசப் பெயர்களால் அழைக்கப்பட்டார். உலகம் அவரை அவ்வாறு தான் எண்ணியிருந்தது. அவர் கொடூரமான மரணம் எய்தினார். எல்லா ஸ்தாபனங்களாலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். அவருக்குத் தலை சாய்ப்பதற்கும் இடமில்லாமல் இருந்தது. 61ஆனால் தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த் தினதால் இப்பொழுது அவர் பரலோகத்தைக் காண, குனிந்து பார்க்க வேண்டியதாயிருக்கிறது. தேவன் எவ்வளவாய் எளிமையில் உள்ளார் என்பதைக் காணுங்கள். பாருங்கள்? தேவன் அவருக்கு மகத்தான நாமத்தையளித்து, அவர் இப்பொழுது வானோர், பூதலத்தோர் இவர்களின் நாமக்காரணராயிருக்கிறார். வானோரின் குடும்பங்களும் பூதலத் தோரின் குடும்பங்களும் 'இயேசு'வென்று பெயரிடப்பட்டுள்ளன. முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும்படிக்கும் நாவுகள் யாவும் - இங்குள்ளவரும், பாதாளத்திலுள்ளவரும் - அவரை கர்த்தர் என்று அறிக்கை பண்ணும்படிக்கும், அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்றிருக்கிறார். பாதாளம் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட வேண்டும். எல்லாமே அவருக்கு முன்பாக பணிய வேண்டும். பாருங்கள்? முதலில் அவர் எளிமையுள்ளவராயிருந்து பின்னர் மகத்தான ஸ்தானத்திற்கு தேவனால் உயர்த்தப்படுகிறார், பாருங்கள்? தேவன் உயர்த்தட்டும். ''தன்னைத் தாழ்த்துகிறவனெவனும் உயர்த்தப்படுவான்.'' பாருங்கள்? இப்பொழுது இந்த நிக்கொலாய் ஆவி ஞானத்தைப்பெற்று சாமார்த்தியமுள்ளதாய் இருக்க விரும்பியது என்று நாம் காண்கிறோம். ஏவாள் ஞானத்தைப் பெற்று தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் ஞானத்தினால் ஆலோசனை செய்தது போன்று, இந்த ஆவியும் செய்தது. சபையும் அதைப் பின்பற்றத் தொடங்கினது. அது என்ன? 62இப்பொழுது, நம் சபையை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அதே போல, நம்மில் சிலர் உண்மையாகவே ஆவியினால் நிரப்பப்படாதவர்களைப் போன்றவர்களாக இருப்பதாக உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள..... இப்பொழுது, நம்முடைய நகராண்மைக் கழகத் தலைவரிடம் நமக்கு எந்த விரோதமும் கிடையாது. எனக்கு திரு. பாட்டார்ப் (Bottorff) அவர்களைத் தெரியாது என்றே நினைக்கிறேன். அவர் இன்னும் நகராண்மைக் கழகத் தலைவராய் இருக்கின்றாரா, திரு. பாட்டார்ப்? பாருங்கள், எனக்குத் தெரியவில்லை..... திரு.பாட்டார்ப் என் சிறந்த நண்பராவார், பாருங்கள். இந்த பட்டிணத்தின் நகராண்மைக் கழகத் தலைவரும் (Mayor) போலீஸ் அதிகாரிகளும் இதன் அங்கத்தினராகச் சேர்ந்தால், முதலாவதாக நம் செயற்குழுவையும் மற்ற அங்கத்தினரையும் சந்தித்து, ''இப்பொழுது, என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? “இவையெல்லாம் வித்தியாசமாயிருக்க வேண்டும்'' என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு எண்ணம் தோன்றும். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல் இருந்து, பிரசங்க பீடத்தின் பின்னாலுள்ள மனிதன் உண்மையாகவே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாலும், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம் என்னவெனில், அவர்களு டைய விருப்பத்திற்கு இணங்க நேரிடும். ஒருவேளை இது இந்தத் தலை முறையில் இல்லாவிடினும், அடுத்த தலைமுறையில் ஒருவேளை நேரிடலாம். 63அவ்வாறே முதலாம் சபையின் காலத்திலும் தொடங்கினது. பாருங்கள்? ஏன் அவர்கள் கூறுவது நியாயமாய்த் தோன்றுகின்றது'' என்று ஜனங்கள் கூற முற்பட்டனர். நீங்கள், நீங்கள் செவி கொடுப்பீர்கள். ஒரு மனிதன் இங்கு வந்து, ''இந்த சபை சிறியதாயிருக்கிறது. நாம் இங்கு ஒரு பெரிய சபையைக் கட்டுவோம். நான் உங்களுக்கு ஒன்றை இங்கு கட்டித் தருகிறேன். அது... அதன் மதிப்பு ஐந்து இலட்சம் டாலர்களாக இருக்கும். அது இவ்விடத்தில் கட்டப்படும். அதற்கு பணம் சேமிப்பதற்கென நான் வானொலி மூலம் அறிக்கை விடுக்கிறேன்'' என்று கூறினார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அதைச் செய்யும் பொழுது, அவர்கள் வெட்டுவதற்கு ஒரு கோடாரியைப் பெற்றுக் கொண்டது போலாகும்; அங்ஙனமாயின், தொண்ணூறு சதவிகிதம் அவர் தன்னயமான சிரத்தை கொண்டுள்ளார் என்பதை முதற் காரியமாக நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். “சகோ.ஜான் டோ (John Doe) அவர்கள் தான். இதைக் கட்டுவதற்கு நிதி வசூலித்தார். ஆகவே, நாம் அவருக்கு விரோதமாய் பேசமுடியாது.'' பாருங்கள்? பின்னர் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாத ஒரு ரிக்கி (Ricky) வேத பள்ளியிலிருந்து கொண்டு வரப்பட்டு போதகனாக நியமிக்கப்படுவான். எப்படி ஒரு ஹாட்டன்டாட் (Hottenlot) (தென் ஆப்பிரிக்கா பழங்குடி இன வகையைச் சார்ந்தவர்தமிழாக்கியோன்) எகிப்தில் அரசகுமாரனைப் பற்றி அறியாதிருக்கின்றானோ அதே போன்று. இப்போதகன் அம்மனிதனின் விருப்பத்திற் கிணங்குவான். ஏனெனில் அவர் போதகனுக்கு ஒரு புதிய மோட்டார் வண்டி வாங்கிக் கொடுத்திருப்பார். அல்லாமல், போதகன் விரும்பிய யாவையும் அவர் வாங்கிக் கொடுப்பார். 64இப்பொழுது, அது சரியாக இவ்விதமாகவே ஆரம்பித்தது. சரி. ஞானம், சாமர்த்தியம் இவ்விரண்டையும் கூர்ந்து நோக்குங்கள். ஆதி சபையின் காலத்தில் சபைக்குள் நுழைந்தவர்கள், அவர்கள், ''இப்பொழுது, இங்கே கவனியுங்கள், இது மெச்சத்தகுந்ததல்லவா? பெண்மணிகள் மயிரை எப்படி வைத்திருந்தால் என்ன? அதில் என்ன வித்தியாசமுள்ளது?'' என்று கேட்டனர். ஆனால் வேதம் அதில் வித்தி யாசம் உள்ளதாகத்தான் கூறுகிறது. நூற்றுக்கணக்கானவைகள் இருந்த போதிலும், இந்த ஒரு காரியத்தைப் (பெண்கள் மயிரைக் வைத்திருத்தல்தமிழாக்கியோன்) பாருங்கள்? அதில் வித்தியாசம் உண்டு. தேவன் அதில் வித்தியாசம் உண்டு என்றால், அதில் நிச்சயமாக வித்தி யாசமுண்டு. 65ஆனால், நீங்கள் பாருங்கள், அவ்விதமான வித்தியாசம் சபையில் தர்மகர்த்தாக்களின் குழு, உதவியாளர், மற்றவரால் ஆரம்பிக்கப்பட்டால் முதலில் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது என்னவெனில், போதகன் அதை ஆட்சேபித்து வெளியேற வேண்டும். அல்லது அதை ஆமோதித்து அங்கு நிலைத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். பாருங் கள், சபையின் மக்கள் தாம் அதற்கு சம்மதம் தெரிவித்து அதை சபையில் நுழைத்தனர். சரி. இப்பொழுது கவனியுங்கள், இந்த நிக்கொலாய் ஆவி, கெளரவம் வாய்ந்தவர்கள் அங்கத்தினராயிருந்த சபையில் அசைவாடத் தொடங் கினது. அதிக பணமும் அவர்களால் சபைக்குக் கிடைத்தது. ஆகையால் மக்கள் இவர்கள் சொற்கேட்டு பணிந்தனர் - பிசாசின் குரூரத் தன்மை . ஏவாளும் இதைத்தான் ஏதேன் தோட்டத்தில் செய்தாள். இப் பொழுது, அதைக் கேளுங்கள். அது உண்மை . கவனியுங்கள், ஆதாமின் சரீரப்பிரகாரமான மணவாட்டியான ஏவாள் ஆதாமின் மனைவியாவதற்கு முன்பு பிசாசின் உபாயத்திற்குப் பணிந்தாள். அவள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் ஞானத்தை உபயோகித்தாள். ஆதாம் ஏவாளுடன் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு முன்னமே சாத்தான் அவனைத் தோற்கடித்தான். அது உண்மை . நான் பிரசங்கித்த 'மணவாட்டி மரம்' (The Bride Tree) என்னும் என் செய்தியைக் கேட்ட துண்டா ? அது இதைப் போதிக்கிறது. பாருங்கள், சரி. இப்பொழுது கவனியுங்கள். அங்கே ஏவாள் ஞானத்திற்குப் பணிந்தாள். இப்பொழுது, அவன், சாத்தான், அதை காரணிக்க முயற்சித்தான். அவள் சாத்தானிடம், 'கர்த்தர் இவ்விதம் உரைத்திருக்கின்றாரே...' என்றாள். அவன், ''அவர் நிச்சயமாக அவ்விதம் சொல்லியிருக்கவே மாட்டார். பாருங்கள்? நீ ஞானத்தைப்பெற விரும்புகிறாய். சிலவற்றை அறிந்து கொள்ள நீ விரும்புகிறாய். ஊமைக் குழந்தையைப்போல் ஏன் இருக்கிறாய்? பார் நீ சிலவற்றை அறிந்து கொள்ளவேண்டும்'' என்றான். அது சாத்தானே அல்லவா! ஓ, என்னே! 66அது இந்த நாகரீகமான சிலவற்றைப் போன்றதல்லவா? பாருங் கள், அவர்கள், ''ஓ... அவர்கள் பரிசுத்த உருளையர் கூட்டம். அவர்கள் மேல் எந்த கவனமும் செலுத்த வேண்டாம். நீங்கள் பாருங்கள். அங்கு போகவேண்டாம். பாருங்கள்?'' என்கின்றனர். இப்பொழுது, மானிட வர்க்கத்தின் முதலாம் மணவாட்டி, தேவனுடைய வார்த்தையை அரணாகக் கொண்டிருந்தாலும், கணவனுடன் சேருவதற்கு முன்பு சாத்தானின் பொய்க்குச் செவிகொடுத்து கிருபையினின்று விழுந்து போனாள். தேவனுடைய வார்த்தையின் பின்னால் மறைந்திருந்தால், அவள் ஒருக்காலும் விழுந்திருக்கவே மாட்டாள். இது மாம்சப் பிரகாரமான மணவாட்டிக்கு நேரிட்டது என்பதைக் கவனியுங்கள். அவளுக்குக் கொடுக்கப்பட்ட சாபமென்ன? தேவனுடைய வார்த்தையின் பின்னிருந்து வெளியே வந்ததற்காக, அவளுக்கு கொடுக் கப்பட்ட உண்மையான சாபம் என்ன? அவள் தேவனுடைய வார்த்தையை 98 சதவிகிதம் விசுவாசித்தாள். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் நீங்கள் ஒன்றை (வார்த்தையை - தமிழாக்கியோன்) விட்டு விட்டால்... பாருங்கள்? அவள் முதலில் கர்த்தர் கூறிய அனைத்தையுமே விசுவா சித்தாள். ஓ, நிச்சயமாக. அவர் கூறின யாவையும் அவள் சாத்தானுக்குத் தெரிவித்தாள். சாத்தானும் அது சரியென்று ஆமோதித்தான். குறி வைத்து சுடும்போது துப்பாக்கி சற்று அகன்று போனால் எவ்வாறு குறி தவறிவிடுமோ, அதுபோன்று சாத்தானும் உங்களை ஏதாவது ஒன்றில் மடக்கி வார்த்தையிலிருந்து சற்று அகலும்படி செய்கிறான். பாருங்கள்? அவன் விரும்புவதெல்லாம் அது ஒன்றே. அவ்வளவே. இப்பொழுது, ஏவாள் தேவன் கூறின வார்த்தையைப் பெரும்பாலும் விசுவாசித்தாள். என்றாலும் அவள் தவறி விட்டாள். 67இப்பொழுது, சிறிது விவேகத்தை ஏற்றுக் கொண்டு ஏவாள் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்ததன் விளைவு... நல்லது... “ஸ்திரீகளைக் குறித்து என்ன?'' அல்லது ”நீர் ஏன் பெண்களைக் குறித்து எப்பொழுதுமே குறைகூறிக் கொண்டிருக்கிறீர்?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஏதாவது ஒரு சிறிய காரியமாயிருந் தாலும், “பரிசுத்த ஆவியைப் பெறுவதன் அடையாளம் அன்னிய பாஷை பேசுவது என்று சொன்னாலும் அல்லவென்று சொன்னாலும் அதில் என்ன வித்தியாசமுள்ளது?'' என்றும் நீங்கள் கேட்கலாம். உண்மையாக அதில் வித்தியாசமுண்டு. நீங்கள்... அவையெல்லாம் இக்காலத்தில் சரிபடுத்தப்பட வேண்டும். ஏழு சபையின் காலங்கள்தோறும் இவையனைத்தும் யூகிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தேவனே அதைப் பேசுகின்ற நேரம் வந்துள்ளது. அவர் அதைப் பேசுவது மட்டுமல்ல, தேவனே உண்மையை விளக்கிக் காண்பித்து அதை உறுதிப்படுத்தி நிரூபிக்கிறார். அது உண்மை . அவ்வாறு செய்யாவிடில் அவர் தேவனல்ல. அவ்வளவு தான். தேவன் தம் வார்த்தையை ஆதரிக்க வேண்டும். 68இப்பொழுது கவனியுங்கள். மாம்சப் பிரகாரமான ஸ்திரீ தான் தேவனுடைய வார்த்தையின் பின்னால் நின்று கொண்டிருப்பதற்கு பதிலாக, தேவன் அவளுக்குச் செய்யக் கூறினதைச் செய்வதற்குப் பதிலாக, அவள் தான் ஞானமடைய விரும்பி, சாத்தானுடைய விவேகத் திற்குச் செவி கொடுத்தாள். மானிட வர்க்கத்துக்கு மரணத்தை இழைத் தாள். அவள் ஞானத்தை விரும்பினாள். ஞானமாயிருக்க அவள் விவே கத்திற்கு செவி கொடுத்ததால், முழு மானிட வர்க்கத்தையே இழந்தாள். பாருங்கள்? இப்பொழுது, இந்த நேரத்திலே, ஆவிக்குரிய ஸ்திரீயும் - கிறிஸ்துவின் மணவாட்டி ஆதி அப்போஸ்தல சபையுடன் பெந்தெகொஸ்தே நாளில் தோன்றி நிசாயாவின் மாநாட்டில் தேவனுடைய வார்த்தையை இழந்து போனாள். லீ! (Lee) அது சரியென்று உமக்குத் தெரியுமா? நிசாயா மாநாட்டில் அவள் ஆவிக்குரிய பிறப்புரிமையை விற்றுப் போட்டு கான்ஸ்டன்டைன் அரசனின் பிரம்மாண்டமான ஆலயங்களை யும், அவன் அவர்களுக்கு அளித்த காரியங்களையும், ரோமாபுரி ஏற்படுத்தின கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டாள். நான் கூறுவது கத்தோலிக்கர்களை புண்படுத்தும். ஆனால் பிராடெஸ்டெண்டுகளும், அதையே செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் வேசியின் குமாரத் திகளென வேதத்தில் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு வரும் சரியாக அப்படியே உள்ளனர். எவ்வித சாக்கு போக்கும் கிடையாது. 69ஆனால் அவர்களைச் சேராத ஒரு சிறு கூட்டம் மணவாட்டியின் ஸ்தானத்தை எப்பொழுதும் வகித்து வந்துள்ளது. கவனியுங்கள். ஆம், அவள் கணவன் அவளை சேரும் முன்புபிறப்புரிமைகளை இழந்தாள், பாருங்கள் - அவளுக்குக் கலியாணம் ஆகும் முன்பு - அவள் தன் கற்பை இழந்து போனாள், பாருங்கள்? லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவள், “நான் அரசியைப் போல் இருக்கிறேன். எனக்கு ஒன்றும் தேவையில்லை, நான் திரவிய சம்பன்னன். எனக்கு ஒரு குறைவுமில்லை” என்று சொல்வது உங் களுக்கு நினைவிருக்கலாம். “ஓ... நான்தான் பரிசுத்த சபை. முழு உல கமே என்னை நோக்கிப் பார்த்து என் பேரில் சார்ந்திருக்கிறது. நாங்கள் இந்த வழியாய் இருக்கிறோம்'' என்று அவள் கூறுகின்றாள். முழுகாலமே (லவோதிக்கேயா-தமிழாக்கியோன்) அவ்விதம் கூறுகின்றது. ஆனால் தேவனோ அவளை நோக்கி, 'நீ நிர்பாக்கியமுள்ளவளும், பரிதபிக்கப்படத்தக்கவளும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியு மாயிருப்பதை அறியாமல் இருக்கிறாய்' என்கிறார். அதுதான் அவளது நிலைமை. இக்கடைசி நாட்களில் அவளுடைய நிலைமை அவ்வாறாக இருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் கூறியிருப்பதால், அது நிச்சயமாக அவ்வாறே இருக்க வேண்டும். வேறு எந்த விதத்திலும் அதைக் காண முடியாது. அது அவ்விதமே இருக்கின்றது. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, அவள் ஆதியிலே அங்கே தன்னுடைய பிறப்புரிமைகளை, தேவனுடைய வார்த்தையின் கற்பின் உரிமையை விற்றுவிட்டபோது, அவள் என்ன செய்தாள்? ஏவாள் பாவத்தில் விழுந்தபோது, அவள் சிருஷ்டியை இழந்தாள். சர்வ சிருஷ்டியுமே அவளுடன் பாவத்தில் விழுந்தது. இப்பொழுது கவனியுங்கள், சபையும், தேவனுடைய வார்த் தையும் அவருடைய ஆவியையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ரோம சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதனால், அன்று முதல் நிறுவப்பட்ட எல்லா ஸ்தாபனங்களும் சபிக்கப்பட்டு அதனுடன் பாவத் தில் விழுவதைத்தவிர வேறு வழியில்லை. 70ஒரு கூட்டம் மக்கள் ஒரு விஷயத்தைக் குறித்து ஆலோசிக்கும் போது, ஒருவன் ஒரு விதமாகவும் வேறொருவன் வேறு விதமாகவும் சிந்திப்பான். இவையெல்லாவற்றையும் ஒன்றுபடுத்தும்போது, அதன் விளைவு குழப்பம்தான் அதுதான் சரியாக நிசாயா மாநாட்டில் நடைபெற்றது. அதுவே தான் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கிறிஸ்து சபை ஸ்தாப னத்தார், இன்னும் ஏனைய ஸ்தாபனத்தார் அனைவரும் செய்தனர். ஸ்தாப னத்தைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பெற்றிருப்பினும், அவனுடைய ஸ்தாபனத்தின் கொள்கைகள் கூறுவதையே பிரசங்கிக்க வேண்டும். இல்லையேல் அவன் விரட்டி யடிக்கப்படுவான். நான் கூறுவது தவறு என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியாது. நானும் ஸ்தாபனத்தில் இருந்திருக்கிறேன். ஆகை யால் அங்கு நடப்பவை எனக்கு நன்றாகத் தெரியும். அது சரியாக அவ்விதமே சம்பவித்ததால், அவை யாவுமே சபிக்கப்பட்டுள்ளது. 'என் ஜனங்களே, அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமல் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்' என்று தூதன் உரைத்ததில் வியப்பொன்று மில்லை. ஏனெனில் அவள் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய பிறப்புரிமையையும், கற்பையும் அவள் விற்றுப்போட்டதால் தேவ கோபாக்கினை அவள் மேல் தங்கியுள்ளது. பாருங்கள்? ஆனால்... ஓ, என்னே! ஆகையால் அவள் துன்பப்படவேண்டும். 71ஆனால் ஞாபகங் கொள்ளுங்கள். ஆயினும் இத்தகைய நிலைமை யிலும்கூட, கடைசி காலத்தில் அவளுக்கு எல்லாவற்றையும் திரும்ப அளிப்பதாக கர்த்தர் யோவேல் 2:25-ல் (வேண்டுமானால் அவ்வசனத் தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்) வாக்களித்துள்ளார். ''பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது. வெட்டுக்கிளி விட்டதை பச்சைக்கிளி தின்றது. பச்சைக்கிளி விட்டதை முசுக் கட்டைப்பூச்சி தின்றது.'' இவ்விதம் ஒவ்வொரு பூச்சியும் சபையைத் தின்று போட்டு முடிவில் அடிமரம் மாத்திரம் மீந்திருக்கிறது கவனியுங்கள்! ரோமர்கள் விட்டதை லூத்தரன் ஸ்தாபனத்தார் தின்றனர். லூத்தரன்கள் விட்டதை மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தார் தின்றனர். மெதோடிஸ்டுகள் விட்டதை பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் தின்று, முடிவில் அடிமரம் மாத்திரமே எஞ்சியுள்ளது, பாருங்கள். 72நீங்கள் அது என்ன என்று அறிவீர்களா? முசுக்கட்டைப் பூச்சி, வெட்டுக்கிளி இவையாவும் ஒரே பூச்சி தன் வளர்ச்சியில் வித்தியாச மான நிலையை அடைதலாகும் என்று நாம் புத்தகங்களின் வாயிலாக அறியலாம். அந்த குறிப்பை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முத்திரை களுக்கு வாருங்கள். ஒரே பூச்சிதான் வித்தியாசமான நிலைகளில் காணப் படுகின்றது என்பதை நாம் முத்திரைகளை ஒன்றன்பின் ஒன்றாக சிந்திக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஒரே பூச்சி தன் வளர்ச்சியில் நான்கு வித்தியாசமான நிலைகளை அடைகின்றன. முத்திரைகளிலும் ஒரே ஆவி நான்கு வித்தியாசமான கட்டங்களில் காணப்படுகின்றது. ஒன்று தின்னாமல் விட்டதை, மற்றொன்று தின்று, முடிவில் அடிமரம் மாத்திரம் உள்ளது. ஆனால் யோவேல், ''நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக் கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (என்று கர்த்தர் உரைக் கிறார்)“ என்கிறான். (யோவேல் 2:25). அது என்ன? கர்த்தர் அதை எவ்விதம் செய்யப்போகிறார்? அது கிறிஸ்துவின் போதனைகளுக்கு விரோதமான அந்திக்கிறிஸ்துவாகத் தோன்றி தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபனத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. காலங்கள் கடந்து போகுந்தோறும், வேதம் கூறியவாறு சீர்திருத்தக்காரரும் அதில் ஈடுபட்டனர். 73ஆனால் கடைசி நாட்களிலே எக்காளம்... “ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் (வெளி. 10:1-7). அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்'' என்று வேதம் உரைக்கிறது. சூளையைப்போல் எரியும் பெரிதும் பயங்கரமான நாள் வருவதற்கு முன்னே கர்த்தர் எலிசா தீர்க்கதரிசியை அனுப்புவாரென்றும், அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை, பிதாக்கள் கொண்டிருந்த மூல அப்போஸ்தல- பெந்தெகொஸ்தே- விசுவாசத்திற்கு திரும்பக் கொண்டு வருவான் என்றும் மல்கியா 4-ம் அதிகாரம் வெளிப்படையாகக் கூறுகிறது. அந்த வாக்குத்தத்தம் நமக்களிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாம் வாழ்வது கடைசி நாட்களாயிருக்குமானால், ஏதோ ஒன்று இப்பொழுது சம்பவித்தாக வேண்டும். பாருங்கள்? அது இப்பொழுது நிகழ்ந்து கொண்டு வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சாத்தானின் திரித்துவத்தைக் கவனியுங்கள். ஒரே ஆள் ஒன்றன் பின் ஒன்றாக மனிதனுக்குள் வாசம் செய்கிறான். சபையைத் தின்ற பூச்சிகளும் அவ்வாறே ஒன்றன் பின் ஒன்றாக மாறுகிறது. நிக்கொலாய்“அந்திக்கிறிஸ்துவின் ஆவி, '' போப்பாண்டவர் - ”கள்ளத்தீர்க்கதரிசி'' ''மிருகம்'' - பிசாசே மனிதனுக்குள் வாசம் செய்தல். அவனால் செய்ய முடியாது.... 74இப்பொழுது, இதை நீங்கள் மனதில் கொண்டால், குதிரையின் மேல் சவாரி செய்பவர்களும் ஒன்றபின் ஒன்றாக அந்நிலையையடை வதைக் காணலாம். பாருங்கள்! நான் உங்கள் முன்னிலையில் இதை ஒரு படமாக சித்தரிக்க முயல்கிறேன். கரும்பலகையில் வரைந்தால், இதை நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்துக்கொள்ளலாம். பாருங்கள், நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். 75முதலாவதாக, இப்பொழுது, இதை ஞாபகங்கொள்ளுங்கள் அவன் “அந்திக்கிறிஸ்துவின் ஆவியாய் இருக்கிறான். யோவானும், ''பிள்ளைகளே, அந்திக்கிறிஸ்துன் ஆவி இப்பொழுதே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்துக்கொண்டு வருகிறது'' என்றான். பாருங்கள்! அப்பொழுதே வித்து முளைக்கத் தொடங்கினது. அடுத்த சபையின் காலத்தில் ”அது வழக்காக'' (பேச்சாக), அடுத்த சபையின் காலத்தில் அது ''போதகமாக மாறி, அதற்கடுத்த சபையின் காலத்தில் அவள் “முடிசூட்டப்படுகிறாள். இது மிகவும் வெளிப்படையாய் அமைந்திருக்கவில்லையா? பாருங்கள்? பாருங்கள், அவ்விதமே அவன் வருகிறான். இப்பொழுது, முதலாவதாக, அவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவி'' என்று (எவ்விதம்?) அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் இருந்தான். அதுதான் அதைத் துவக்கியது. அந்திக்கிறிஸ்துவின் ஆவி தேவனுடைய வசனத்துக்கு விரோதமாய் முழுமையாய்க் கிரியை நடப்பித்து, மக்களை வசனத்திலிருந்து விலகும்படிச் செய்தது. ஏவாள் காயீனை கண்டிக்காத்தனால் இது ஏற்பட வில்லை. பாருங்கள்? அதைச் செய்தது அதுவல்ல. முதலாவதாக, ஏவாள் தேவனுடைய வார்த்தையினின்று திருப்பப்பட்டாள். அவள் வார்த்தையிலிருந்து திரும்பினாள். அதுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம். தேவனுடைய வார்த்தையை விட்டகன்று ரோமாபுரியின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக ஜீவனுள்ள தேவனுடைய சபைகிறிஸ்துவின் மணவாட்டி - ஆவிக்குரிய விபச்சாரம் செய்தாள். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் சம்பவித்தது என்ன? எல்லா ஸ்தாபனங்களும் அவ்விதமே செய்தன. 76இப்பொழுது, ஆனால் கடைசி நாட்களிலே திரும்ப அளிப்பதற்கு ஒரு வழி உண்டாக்குவேன் என்று அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஆதியிலே கர்த்தருடைய வார்த்தை பூமியின்மேல் எவ்விதம் விழுந்ததோ, ஓ, அப்படியே 'வார்த்தைக்கு எதிரானதிலிருந்து“ ஆதி நிலைக்குத் திருப்புவார். தேவனுடைய ஆவியினாலே அபிஷேகம் பெற்ற இந்த மனிதன் என்ன செய்ய வேண்டியவனாயிருக்கிறான்? அவன், ”பிள்ளை களின் விசுவாசத்தை பிதாக்களின் விசுவாசத்திற்குக் கொண்டு வருகிறான்''. அவன் இவ்விதமாகத்தான் திரும்ப அளிப்பான். தேவனுடைய வார்த்தையை அது இங்கு உள்ளபடி அதன் ஸ்தானத்தில் பொருத்தும்போது, அது முன்பு செய்த கிரியைகளையே இப்பொழுதும் செய்யும். “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்று இயேசு கூறியுள்ளார். சில கிரியைகளை நடப்பிக்க அவர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டபோது அவர், 'பிதாவானவர் காண்பிக்கிறதை மாத்திரம் நான் செய்கிறேன். அதை நான் முதலில் காணாமல் எதையும் செய்வதில்லை. பிதாவானவர் செய்யக் காண்கிற தெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் நான் செய்யமாட்டேன். பிதாவானவர் எவைகளைச் செய்கிறாரோ அவைகளை நானும் அந்தப்படி செய்வேன்'' என்று சொல்லியிருக்கிறார். பாருங்கள்? நீங்கள் அதைக் காணவில்லையா? ஒரு பத்திரிகையைப் படிப்பது போன்று அவ்வளவு தெளிவாய் இது காணப்படுகிறதல்லவா? பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது அவன் ஆரம்பத்தில் அந்திக் கிறிஸ்துவின் ஆவியாயிருந்தான். 77இப்பொழுது, அவன் ஆவியில் மட்டும் அந்திக் கிறிஸ்துவாய் இருக்க முடியாது. அதன்பின் அவன் அந்திக்கிறிஸ்துவாகிறான். அந்திக் கிறிஸ்துவின் ஆவி போதிப்பதையே போதிக்கும் ஒரு மனிதனை அந்த ஆவி ஆட்கொண்டு, அந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவிக்கு, அவன் ''கள்ளத்தீர்க்கதரிசியாகிறான். அப்படியானால் ஸ்தாபனத்தில் அங்கத் தினனாயிருப்பவனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அதைக் குறித்து நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அது சரி. இப்பொழுது முடிவாக அவன் ''மிருகமாக' மாறுகிறான். இப்பொழுது, பொறுத்திருங்கள், நாம் சிறிது நேரத்திற்குப் பிறகு, அதைக் காணப் போகிறோம், பாருங்கள். அது சரி. இப்பொழுது, சாத்தானின் திருத்துவம் இவ்வாறு உள்ளது; எல்லா நேரத்திலும் அது சாத்தானேதான். சாத்தான், “அந்திக்கிறிஸ்துவின் ஆவி.'' அந்திக்கிறிஸ்துவின் ஆவி ''கள்ளத்தீர்க்கதரிசி”க்குள் குடி கொள்ளுதல். அதன்பின் அவன் 'மிருகமாக' வருகிறான். பாருங்கள்? அந்திக்கிறிஸ்துவுக்குள் ஒரு பிசாசாக அல்ல (demon) சாத்தான் தாழத் தள்ளப்படும்போது, அந்தப் பிசாசு இருந்த இடத்தை அவன் எடுத்துக் கொள்ளுகிறான். அதன்பின் அந்த பிசாசு (devil) மனிதனுக்குள் குடி கொள்கிறான். அது மீண்டும் மீண்டும் தன்னையே காண்பித்துக் கொள் கிறது. 78யூதாஸ் காரியோத்தும் அப்படிப்பட்டவனாய் இருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் கிறிஸ்துவுக்கு விரோதமாயிருந்தவர்களில் ஒருவனா? ஏன், அவன் பொக்கிஷதாரியாக இருந்தான். அவருடன் அவன் நடந்து சென்றான். நிச்சயமாக அவர்களுடனேயே அவன் நடந்து சென்றான். அவர்கள் செய்தது போன்று அவனும் பிசாசுகளைத் துரத்தினான். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு இம்மானுவேலானார். இயேசு தேவ குமாரனாயிருந்தது போன்று யூதாஸும் கேட்டின் மகனாயிருந்தான் - ஒன்று தேவன் வாசம் செய்தல்; மற்றொன்று பிசாசு வாசம் செய்தல். இயேசுவின் காலத்தில் மூன்று சிலுவைகளைத் தான் சிலர் நினைவு கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அப்பொழுது நான்கு சிலுவைகள் இருந்தன. கொல்கொதாவில் மூன்று சிலுவைகள் இருந்தன என்று காண்கிறோம். மத்தியில் இயேசு தொங்கினார். அவர் வலது பாரிசத்தில் ஒரு கள்ளனும் இடது பாரிசத்தில் வேறொரு கள்ளனும் தொங்கினர். கவனியுங்கள், ஒரு கள்ளன் இயேசுவிடம் (இயேசு-வார்த்தை யென்பது உங்களுக்குத் தெரியும்) ''நீர் வார்த்தையாயிருந்தால், உம்மை ஏன் நீர் இரட்சித்துக் கொள்ளக்கூடாது? அதைக் குறித்து ஏதாவது ஒன்று நீர் செய்யக்கூடாதா?'' என்று கேட்டான். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. அந்த பழைய பிசாசுகள் வந்து, ''நீர் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டிருந்தால், இங்குள்ள குருடனின் கண்களை ஏன் திறக்கக்கூடாது?'' “கூடுமானால் எங்களை குருடாக்கும், கூடுமானால் எங்களை குருடாக்கும்'' என்று கூறு வதை நீங்கள் கேட்டதில்லையா? அதே பழைய பிசாசுதான் அது. பாருங்கள்? ”நீர் சிலுவையிலிருந்து இறங்கி வாரும், அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்“ என்றும், ''நீர் தேவனுடைய குமாரனானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி செய்யும்'' என்றும் சொன்ன அதே பிசாசுதான் இதுவும். 79அவர்களைவிட்டு அகன்று செல்லுங்கள். பாருங்கள்? இல்லை. இயேசுவும் அதையே செய்தார். அவர்களுக்காக அவர் கோமாளித்தனம் செய்யவில்லை. அவர் முகத்தை அவர்கள் ஒரு கந்தைத் துணியால் மூடி, விலை மதிக்கமுடியாத அவர் கண்களை இவ்விதமாக மறைத்து, ஒரு கோலினால் அவர் தலையில் அடித்து, ''நீர் தீர்க்கதரிசியானால் உம்மை அடித்தது யாரென்று இப்பொழுது சொல்லும்'' என்றனர். அவர்கள் கோலை ஒரு வருக்கொருவர் மாற்றிக் கொண்டனர். ''உம்மை அடித்தது யாரென்று சொன்னால், அப்பொழுது நீர் தீர்க்கதரிசியென்று நாங்கள் விசுவாசிப்போம்'' என்றனர். அவர் வாயைத் திறவாது மௌனமாய் அங்கே அமர்ந்திருந்தார். பாருங்கள்? அவர் அப்பொழுது கோமாளித்தனம் செய்யவில்லை. பிதாவானவர் காண்பிப்பதை மாத்திரமே அவர் செய்கிறார். பாருங்கள்? இக்காலத்தில் அவர்கள் என்ன செய்தாலும் செய்யட்டும். அதற்குரிய பலனை அனுபவிக்கும் சமயம் வரப்போகின்றது. ஆகையால் கவலை கொள்ளவேண்டாம். ஆம், ஐயா. இப்பொழுது, அவர்கள் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டார்கள். ஆனால் வல்லமை அப்பொழுது அவரிடமிருந்து புறப்படவில்லை. 80ஆனால் ஒரு ஏழை ஸ்திரீ சுகமாக வேண்டுமென்று கருதி அவர் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவர் திரும்பிப் பார்த்து, 'என்னைத் தொட்டது யார்?' என்று கேட்டார். ஊம்... என்னே வித்தியாசமான தொடுதல்! நீங்கள் எவ்வாறு அவரைத் தொடுகிறீர்கள்நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் எவ்விதம் தொடுகிறீர்கள், எத்தகைய விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் - என்பதை அது சார்ந்தது. இப்பொழுது நீங்கள் காண்கிறீர்களா? இப்பொழுது, சாத்தான்.... அவனே அந்திக்கிறிஸ்துவின் ஆவி யிலிருந்து இப்பொழுது கள்ளத் தீர்க்கதரிசிக்குள் குடிகொள்கிறான். யூதர்களின் காலத்தில், ஆதி சபையின் மத்தியில் அவன் “அந்திக் கிறிஸ்து” வாயிருந்தான். இருண்ட காலங்களில் அவன் உலகத்திற்கு ''கள்ளத் தீர்க்கதரிசியாக'' வருகிறான். ''அவளுடைய அக்கிரமத்தின் கோப்பையுடன்'' அவளை அங்கே காண்கிறீர்களா? இப்பொழுது, அது சபையின் காலத்திற்கு ஆகும். 81ஆனால் சபையானது வீட்டிற்குச் சென்றபிறகு, அவன் மிருக மாகிறான். அந்த வலுசர்ப்பமாகிய பிசாசே மிருகமாகிறான். ஓ, என்னே! நான் என்ன கருதுகிறேன் என்று உங்களால் காண முடிகின்றதா? அவன் அப்பொழுது தன் ஜனங்களுக்குள் குடிகொள்கிறான். அவன் தன் வல்லமையினால் கட்டப்பட்ட ஜனங்களைக் கொண்டிருக்கிறான். அந்தக் கள்ளத் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் அவர்களைச் சரியாக அதற்குள் கொணர்கிறது. “அவர்கள் பொய்யை விசுவாசித்து ஆக் கினைத் தீர்ப்படையும்படி கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்குக் கொடுப்பார்... தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பார்கள்.'' தேவனும் தம் ஸ்தலத்தில் திரித்துவத்தில் கிரியை செய்கிறார்நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலம் அவர் ஜனங்களுக்குள் வாசம் செய்தல். கிறிஸ்துவைப் போலவே, சாத்தானும் தன்னை திருத்துவத்தில் வெளிப்படுத்துகிறான். ஓ... சாத்தான் தானே வாசம் செய்தல். இப் பொழுது கவனியுங்கள், சாத்தான்... 82இயேசு மனிதருக்குள் வாசம் செய்யும்போது கிறிஸ்துவுக்குள் ளிருந்த அதே ஜீவன் அப்பொழுது அந்த நபருக்குள் வருகிறது. ஒரு திராட்சைச் செடியிலுள்ள ஜீவனையெடுத்து அதை பூசணிக் காய்க் கொடியில் புகுத்தினால் என்னவாகும்? அதில் இனி ஒரு போதும் பூசனிக்காய் காய்க்காது. அது திராட்சைப் பழங்களைக் கொடுக்கும். ஒரு பீச் மரத்தின் ஜீவனையெடுத்து அதை பேரிக்காய் மரத்தில் புகுத்தினால் என்னவாகும்? அது பேரிக்காய் அளிக்குமா? இல்லை. அது 'பீச்' பழத்தையே கொடுக்கும். ''உங்களிலுள்ள ஜீவன் நீங்கள் யாரென்பதை வெளிப்படுத்துகிறது,'' பாருங்கள்? மனிதர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாகக் கூறிக் கொண்டு அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலிப் பார்களானால் அவர்களில் ஏதோ தவறுண்டு என்று அர்த்தமாகிறது. பரிசுத்த ஆவியானவர் தாம் அந்த வார்த்தையை எழுதியுள்ளார். ''என் ஆவி ஒருவனுக்குள் இருந்தால், என் கிரியைகளை அவனும் செய்வான்' என்பதாய் இயேசு சொல்லியிருக்கிறார். நீங்கள் அதை வாசிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது யோவான் 14:12-ல் காணப்படுகின்றது. ஆம். அது சரி. “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க் கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்''. பாருங்கள்? அவர் அம் மனிதனைப் பரிசுத்தமாக்கி, சுத்திகரித்து, தேவனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவானாகும்படி செய்கிறார். அந்த துளி மை வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்து, பிளவின் மற்ற எல்லைக்கு அவனைக் கொண்டு செல்கிறது. பாருங்கள்? 83இப்பொழுது கவனியுங்கள், சாத்தான் தன் பிரஜைகளுக்குள் குடி கொள்ளும்போது, அவன் செய்த கிரியைகளை அவர்களும் செய் கின்றனர். உங்களுக்குப் புரிகின்றதல்லவா? அவன் என்ன செய்தான்? ஒன்றும் அறியாத பெண்ணிடம் (ஏவாளிடம்) அவன் வந்து அவளை ஏமாற்றினான். அதைத்தான் சில பிசாசுகள் இன்றைக்கும் செய்கின்றன. ஊழியத்தை அப்பொழுதுதான் தொடங்கியிருக்கும் ஒரு போதகனிடம் அவர்கள் சென்று, ''எங்களுடன் சேர்ந்துவிடுங்கள்“ என்று அழைப்பு விடுக்கின்றனர். ஊம்! ... ஊம்! ... அதே பிசாசின் கிரியைதான் அது. இப்பொழுது, நான் கூறுவது உண்மையாகும். சாத்தான் தன் சபைக்குள் பிசாசாக குடிகொள்ளும்போது, அவர்கள்தான் கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் சாத்தான் ஆதிமுதல் கொலைகாரனும், பொய்யனும், கள்ளனுமாயிருக்கிறான். பாருங்கள், அது சரி. சாத்தான் அவன் ஜனங்களிடையே வாசம் செய்து, அவர்களுக்கு ஞானத்தையும் சாமார்த்தியத்தையும் அளிக்கிறான். அவன் சாமார்த்தியமாய் புத்தி நுட்பமாய் இருப்பது அவனுடைய கடமை ஆகும். அவன் சாமார்த்தியசாலியாய் இருக்கிறான். கூர்மையான அறிவு படைத்தவர்களுடன் தேவன் எப்போதாவது தொடர்பு கொண்டிருந்தார் என்பதை நீங்கள் வேதத்திலிருந்து எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அறிவு படைத்தவர்கள் தாம் பிசாசினால் பீடிக்கப்படுகின்றனர் என்பதை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். இது உத்திரவாதமுள்ள ஒரு வாக்கு மூலம். ஆனால் அது முற்றிலும் உண்மையாகும். ஆபேலின் சந்ததியை யும் காயீனின் சந்ததியையும் - நீங்கள் எடுக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அந்த பதினான்கு சந்ததிகளை- நீங்கள் ஆராய்ந்து, எது ஞானம் படைத்த சந்ததியென்றும், எது தாழ்மையுள்ள சந்ததி யென்றும் கண்டுகொள்ளுங்கள். ஊம்... 84இயேசு ஏன் புத்திமான்களைத் தெரிந்து கொள்ளவில்லை? அவர் மீன் பிடிப்பவர்களையும், கையெழுத்து போடக்கூட அறியாதவர்களையும் தன்னுடைய சபையின் தலைவராகத் தெரிந்துக்கொண்டார். அது சரி. ஞானம் என்பது ஒன்றுமற்றது. அது கிறிஸ்துவுக்கு விரோதமாய் அமைந்துள்ளது. உலக ஞானம் எப்பொழுதும் கிறிஸ்துவுக்குப் பகையாயிருக்கிறது. வேதபள்ளிகளை நிறுவ இயேசு ஒருக்காலும் நம்மிடம் கூறவில்லை. வேதப் பள்ளிகள் வைத்திருக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர் “தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கியுங்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று மாத்திரமே கூறினார். 'விசுவாசிகளை பின் தொடரும் அடையாளங்களாவன'' என்று அவர் கூறி, என்னென்ன அடையாளங்கள் காணப்படுமென்று அவர் குறிப் பிட்டுள்ளார். அதாவது, 'நீங்கள் எல்லா தேசங்களிலும் தேவனுடைய வல்லமையை இவ்வடையாளங்களின் மூலம் நிரூபித்துக் காண்பி யுங்கள்'' என்று அவர் சொன்னார். இப்பொழுது கவனியுங்கள், தேவனுடைய வார்த்தையைக் குதர்க்கமாக அர்த்தம் செய்து, ஜனங்கள் வார்த்தையை நிராகரிக்கச் செய்து, ஞானத்தை மக்களிடையே புகுத்துவதே சாத்தானின் தொழிலாகும். ஓ... என்னே ! ஓ! அதன் பின்னர் தேவ வசனத்தைப் புறக்கணித்த தன் பிரஜைகளுக்கு அவன் அடையாளம் போடுகிறான். இப்பொழுது அதை .... சற்று நேரம் எனக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை. பழைய ஏற்பாட்டிலிருந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன். அது வார்த்தையில் உள்ளது. நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் குழப்பமுற்றுச் செல்லக் கூடாது. 85பழைய ஏற்பாட்டின் காலத்தில், அடிமைத்தனத்திற்கு விற்கப் பட்ட ஒருவன்... ஐம்பது வருடங்களில் ஒரு முறை யூபிலி வருகின்றது. நாற்பத்தொன்பதாவது வருஷம், அதன்பின் யூபிலி வருஷம் வருகின்றது. ஒரு அடிமையானவன் இதைக் கேட்டு விடுதலை பெற விருப்பங்கொண்டால் விடுதலையாகலாம். சுதந்தரமாவதற்கு எதுவும் அவனைத் தடைசெய்ய முடியாது. அவன் தான் வேலை செய்யும் கருவியை எறிந்துவிட்டு, “இவ்வளவு நாட்கள் அடிமையாயிருந்தேன், நான் என் வீட்டிற்குப் போகிறேன்'' என்று கூறலாம். அந்த யூபிலி வருடத்தில் எக்காளம் முழங்கும். அது சரி. ஆனால் அடிமையானவன் விடுதலையாவதற்கு விருப்பங்கொள்ளாமல் தன் எஜமானனுடன் திருப்தி கொண்டிருந்தால், அவனை அவர்கள் ஆலயத்திற்குக் கொண்டு செல்வர். அவன் எஜமானன் ஒரு கம்பியை (Awl) எடுத்து, அது என்னவென்று நீங்கள் அறிவீர்கள், எடுத்து அவன் காதைக் குத்தி ஒரு துவாரத்தைப் போடுவான். அவன் இனி ஒருபோதும் விடுதலையாக முடியாதென்றும், அவன் வாழ்நாள் முழுவதும் தன் எஜமானனைச் சேவிக்க வேண்டுமென்பதற்கும் அதுவே அடையாளம். அது சரியல்லவா? அதன் பிறகு எத்தனை யூபிலி வருடங்கள் தோன்றி, எது நிகழ்ந்த போதிலும் எக்காளம் முழங்கினாலும் அவன் விடுதலையாக முடியாது. ஏனெனில் விடுதலையின் பிறப்புரிமையை அவன் விற்றுப் போட்டு விட்டான். 86அவ்வாறே, ஒருவன் சுவிசேஷமாகிய சத்தியத்தைப் புறக் கணிக்கும்போது, சாத்தான் அவனுக்கு அடையாளமிடுகிறான். எங்கே? அவன் காதில் சத்தியத்தைக் கேட்கக் கூடாதவாறு அவனைச் சாத்தான் செவிடாக்குகிறான். அதுதான் அவன் முடிவு; அவன் சத்தியத்தைக் கேட்க மறுத்தால் சாத்தானுடைய குழுவில்தான் அவன் நிலைத்திருக்க வேண்டும். இல்லை. “சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்'' (யோ. 8:32). ஆம், சத்தியம் விடுதலையாக்குகிறது. அவர்கள் வரும்போது தேவன் தம்முடையவர்களை அடையாள மிடுகிறார். தேவன் தாம் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையை அவர்கள் மூலம் நிரூபிப்பதால் அவர் தம்முடையவர்களை அடையாளமிடுகிறார். அது சரியாக யோவான் 14:12 ஆகும். இன்னுமொன்றை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அது மாற்கு 16 ஆகும். ''விசுவாசிக்கி றவர்களைப் பின் தொடரும் அடையாளங்களாவன'' என்று இயேசு சொன்னார். 87நாம் ஒரு நிமிடம் அதை எடுப்போம். அவர் அதைக் கேலியாகக் கூறினாரா? (சபையார் 'அல்ல' வென்று பதிலளிக்கின்றனர் - ஆசி). அல்லது சிலர் கூறுவது போன்று அவர் அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் அதை அளிக்கிறாரா? (சபையார் 'இல்லை' என்கின்றனர் - ஆசி). அதன் முன் வசனத்தைச் சற்று கவனியுங்கள். ''நீங்கள் சென்று...'' எங்கே? (சபையார் “உலகெங்கிலும்'' என்று கூறுகின்றனர் -ஆசி) ''உலகெங்கிலும்” “ இந்த சுவிசேஷத்தை ...'' என்ன ? (சர்வ சிருஷ்டிக்கும்) ”சர்வ சிருஷ்டிக்கும்'' அந்தக் கட்டளையில் மூன்றில் ஒரு பாகத்தைக்கூட நாம் இதுவரை நிறைவேற்றி முடிக்கவில்லை. 'இந்த சுவிசேஷம் உலகின் எல்லா பாகங்களிலும் சர்வ சிருஷ்டிக்கும் எங் கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவ்வடையா ளங்கள் பின் தொடரும்'' என்பதாகும். விசுவாசிக்கிறவர் அனைவருமே இவ் வடையாளங்களைச் செய்வார்கள் - ஒரு சிலருக்கு மாத்திரமல்ல. ஒருமுறை ஒருவர் என்னிடம், “சுகமாக்கும் வரங்களை தேவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே அருளினார்'' என்றார். ஓ, அவர் அதைச் சொல்லக் கேட்டவர்கள் இங்கு அநேகருண்டு. ஆனால் சில நிமிடங்களுக்குள்ளாக போதுமான அளவுக்கு அவருக்குப் பதி லளிக்கப்பட்டது. 88ஆகவே ''உலகின் எல்லா பாகங்களிலும், சர்வசிருஷ்டிக்கும் இவ்வடையாளங்கள் காணப்படும்'' என்பதைக் கவனியுங்கள். அவிசுவாசமென்னும் சாத்தானின் அடையாளத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளாதீர்கள். இப்பொழுது, அவனும் செய்ய முடிந்தால், அவன் அதை இன்றிரவே உங்கள் மேல் போடுவான். அவன் உங்களை சுவற்றிக்கு நேராக நிறுத்தி, உங்கள் காதுகளைக் குத்திப்போடுவான். நீங்களும் கூட்டத்திற்கு வெளியே சென்று, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது'' என்று சொல்வீர்கள். வீட்டிற்குச் சென்று படித்துப் பாருங்கள், உத்தம இருதயத் துடன் ஜெபம் செய்யுங்கள். ஏனெனில், இந்த காலத்திலேயே, இந்த புனித நேரத்தில் எல்லாமே வேத பூர்வமாக பரிபூரணமாய் அமைந்துள் ளன. அநேக வருடங்களாக நிகழ்ந்தவை நிரூபிக்கப்பட்டு, சரியாக இங்கு வந்துள்ளது. இதுவே அந்த நேரம். இதுதான் அந்தக் காலம். ஆகவே இப்பொழுது, அவன் உங்கள் காதுகளைத் துளைத்து அவிசுவாசமென்னும் அடையாளத்தைப் போட அனுமதிக்க வேண்டாம். பாருங்கள்? அவன் ஆரம்ப முதல் அவிசுவாசியாயிருக்கிறான். அவன் ஆதியிலே சந்தேகங்கொண்டான். சரி. ஓ, விட வேண்டாம்.... அவன் வேத வாக்கியங்களை தன்னுடைய அறிவினால் புரட்டவும் குதர்க்கமான அர்த்தம் அளிக்கவும் அனுமதிக்க வேண்டாம். நீங்கள் தாழ்மையுள்ள வர்களாய், தேவன் இவ்விதம் உரைத்துள்ளார். அத்துடன் அது முடிவு பெற்று விட்டது' என்று சொல்லுங்கள். இப்பொழுது, ஓ..... 89நமக்கு நேரம் மிகவும் தாமதமாவதால், நாம் இங்கே நிறுத்தி, துவக்குவோம். இப்பொழுது இரண்டாம் முத்திரையைக் கவனிப்போம். அடிக்கப் பட்டு உயிரோடெழுந்த ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத் திரையைத் திறந்தபோது, காளைக்கொப்பான இரண்டாம் ஜீவன், முத்திரையினுள் அடங்கிய இரகசியம் என்னவென்று வந்து பார்' என்றது. பாருங்கள்? இப்பொழுது நாம் அதைப் பெறுகிறோம். ஆட்டுக் குட்டியானவர் மாத்திரமே ஒவ்வொரு முத்திரையையும் திறக்க வேண்டும் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். இரண்டாம் ஜீவனானது... வரிசைக் கிரமமாக நாம் பார்க்கும்போது, இதை நாம் சபைக் காலங்களில் இதையே கண்டோம். இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பானது என்று அறியலாம். முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்தது. ஆட்டுக்குட்டியானவர் முத்திரையைத் திறந்தவுடனே காளைக் கொப்பான ஜீவன், 'வந்து பார்' என்றது. யோவானும் அதைக் காணச் சென்றான். அவன் சென்றபோது என்ன சம்பவித்தது? அவன் இப்பொழுது என்ன கண்டான் என்று காண்போம். அது வந்து பார்“ என்றது. அங்கு ஒரு இரகசியமானது ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாக முத்திரிக்கப்பட்டதாய் இருக்கின்றது. அது என்ன என்று நாம் காண்போம். 90அவன் சென்றபோது ஒரு சிகப்பான குதிரை புறப்பட்டதைக் கண்டான். என்ன? எனக்குத் தெரிந்தவரை அவன் கையிலிருந்த பெரிய பட்டயம்...... இன்னும் அடுத்த பதினைந்து, இருபது நிமிடங்களில் நாம் மூன்று காரியங்களைப் பார்க்க வேண்டும். நாம் இங்கு படித்து, அவர் இங்கே என்ன கூறுகிறார், வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்க லாம். 4-ம் வசனம். “அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது (முதலாம் குதிரை வெள்ளை நிறமுடையதாயிருந்தது); அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரை யொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது” (வெளி. 6:4) 91இது அடையாளச் சின்னமாயுள்ளது. அதை நாம் உற்று நோக்க வேண்டும். ஆனால், எனக்குத் தெரிந்தவரை, நான் இப்பொழுது அறிந்துள்ள மட்டும், நீங்கள் பாருங்கள்? இயேசுவும் மத்தேயு 24-ல் இதையே தீர்க்கதரிசனமாக உரைத்தார். பாருங்கள்? 'யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். ஆனாலும் முடிவு உடனே வராது பாருங்கள். முடிவு உடனே வராது'' என்றார் பாருங்கள் அவர்கள் இயேசுவை மூன்று கேள்விகள் கேட்டனர். பாருங்கள்? அவரும் அந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலுரைத்தார். இங்குதான் ஏழாம் நாளை ஓய்வுநாளாக ஆசரிப்பவர்கள், “அந் நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! நீங்கள் ஓடிப்போவது ஓய்வு நாளில் சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள் (ஏனெனில் பட்டிணத்தின் வாசல்கள் ஓய்வு நாளில் மூடப்பட்டிருக்கும்)” போன்ற இயேசுவின் சொற்களைப் படித்து குழப்ப முறுகின்றனர். என்னே, அதற்கும் (ஏழாம் நாள் ஆசரிப்பவர்களின் கூற்றுக்கும் - தமிழாக்கியோன்) அவர்கள் (சீஷர்கள் - தமிழாக்கியோன்) கேட்ட கேள்விகளுக்கு இயேசு உரைத்த இப்பதிலுக்கும் யாதொரு தொடர்புமில்லை. பாருங்கள்? 92அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஆனால் அவர் கூறின பதில் யாவும் கடைசி காலத்திற்குரியவையல்ல. 'நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்' என்றார். நாம் இங்கு இந்த ஒன்றின்மேல் ஆராய்ந்து கொண்டிருக் கிறோம். இன்னும் சில இரவுகளில், நாம் மற்றவற்றிற்கு வருவோம். கவனியுங்கள், “நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். இது யாவும் முடிவல்ல... பாருங்கள் அதன்பின் அவர்கள் மறுபடியுமாக திரும்பி... ”உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்'' என்றும் அவர் கூறினவை கடைசி காலத்தைப் பற்றியவையல்ல. அவர்கள் இந்த உலகத்தின் முடிவைக் குறித்து அவரிடம் கேட்டனர். அவர் அவர்களிடம் அந்த நேரத்தைக் குறித்து பேச விருந்தபோது.... பாருங்கள் அவர்கள் மூன்று கேள்விகள் கேட்டனர்- “இவை எப்பொழுது சம்பவிக்கும்'' ''ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி அழிக்கப்படும் நாள் எப்பொழுது வரும்?” அதற்கு அடையாளம் என்ன? உம்முடைய வருகை எப்பொழுது இருக்கும்! 'உலகத்தின் முடிவு எப்பொழுது வரும்?'' “உலகத்தின் முடிவைக்' குறித்த கேள்விக்கு அவர் பதிலுரைக்கும் போது... ''அத்திமரம் துளிர்விடும்போது... நேரமானது சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறது என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார். இதைக் குறித்த வெளிப் பாடில்லாத ஒரு அவிசுவாசி இதை வித்தியாசமாக அர்த்தங்கொள்கிறான். பாருங்கள்? 'இந்தச் சந்ததி'' என்ற அவர் சொற்கள் அவர் காலத்திலிருந்த அந்தச் சந்ததியல்ல; அத்திமரம் துளிர்விடுவதைக் காணும் சந்ததி என்று பொருள்படும். 93இப்பொழுது நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் முன் சரியாக உள்ள இதைச் சற்று பாருங்கள். கடந்த 2500 வருட காலத்தில் முதன்முறையாக இஸ்ரவேல் இப்பொழுது ஒரு நாடாக ஆனது. உலகத்திலேயே மிகவும் பழமையான கொடி தற்பொழுது எருசலேமில் பறந்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் தாய் நாட்டிற்குத் திரும்பி விட்டாள். இங்குள்ள ஒரு சகோதரன் ஒரு சமயம் யூதர்களிடையே சென்று சுவிசேஷ ஊழியும் செய்ய விருப்பங்கொண்டார். அப்பொழுது நான் அவரிடம், ''ஒரு வேளை இங்கொன்றும் அங்கொன்றுமாக யாராவது இரட்சிக்கப்படலாம்'' என்றேன். ஓ! முழுதேசமே இரட்சிக்கப்படும் என்று ஜனங்கள் நினைக்கின்றனர். இல்லை ஐயா. இஸ்ரவேல் ஒரு தேசமாக மனந்திரும்புகிறது - தனிப்பட்ட நபராகவல்ல. ''ஒரே தேசம் ஒரு நாளில் பிறக்கும்''. அதுதான் இஸ்ரவேல் தேசம். ''இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்'' என்று பவுல் கூறினது நினைவிருக்கட்டும். ''இஸ்ரவேலரெல்லோரும் இரட்சிக்கப்படு வார்கள்''. இப்பொழுது கவனியுங்கள், “இஸ்ரவேலரெல்லோரும்.'' அது முற்றிலும் உண்மை . 94இப்பொழுது இதைக் கவனியுங்கள். அவர், ''அத்திமரங்களை யும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள், அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது'' என்று சொன்னார். இப்பொழுது கவனியுங்கள். நாம் நமது 2500 வருட காலத்தில் முதன் முறையாக இஸ்ரவேல் தாய் நாட்டிற்குத் திரும்பியுள்ளது. 'நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்' என்னும் யூதரைக் குறித்த படக்காட்சி நம்மிடமுண்டு. அவள் ஒரு நாடாக ஆகி, ஆறு முனை நட்சத்திரம் கொண்ட தாவீதின் கொடி இப்பொழுது அங்கு பறந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஸ்தாபனங்களில் எழுந்துள்ள எழுப்பு தல் போன்று முன்பு எப்பொழுதாவது நிகழ்ந்துள்ளதா? இப்பொழுது அதை வாசித்துப் பாருங்கள். நாம் நமது ஸ்தானத்தில் உள்ளோம். நாம் நமது மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் போன்ற ஸ்தாபனங்கள் பில்லி கிரகாமின் ஊழியத்தில் இப்பொழுது எழுப்புதலடைந்துள்ளது போன்று, எப்பொழுதாவது ஒரு மனிதனுடைய ஊழியத்தில் மலர்ச்சி பெற்றதா? முன்பு எப்பொழுதாவது ஒரு மனிதன் H-A-M என்ற எழுத்துக்களுடன் முடிவடையும் ஒரு பெயரைக் கொண்டு மாம்சப் பிரகாரமான சபைக்கு ஊழியம் செய்துள்ளானா என்று உங்கள் சரித் திரத்தை ஆராய்ச்சி செய்யுங்கள். A-b-r-a-h-a-m இப்பொழுது பாருங்கள், ஆபிரகாம் (ABRAHAM) என்னும் பெயர் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்களைக் கொண்டதாயுள்ளது. 95ஆனால் நம்முடைய சகோதரன் பில்லி கிரகாம் ஆறு எழுத்துக் களைக் கொண்டவராயிருக்கிறார் (GRAHAM). ஏழல்ல ஆறு என்பது உலகப் பிரகாரமான ஓர் எண்ணாகும். ஆகையால்தான் அவர் மாம்சப் பிரகாரமான சபையில் ஊழியஞ் செய்துக் கொண்டு வருகிறார். சோதோமிலிருந்து லோத்து மாம்சப் பிரகாரமான சபைக்கு எடுத் துக்காட்டாயிருக்கிறான். இரு தூதர்கள் அங்கு சென்று பிரசங்கித்து, சுவி சேஷத்தின் மூலமே அவர்களைக் குருடராக்குகின்றனர். ஆனால், ஒருவர் ஆபிரகாமுடன் தங்கிவிட்டார். அவரை ஆபிரகாம், 'ஏலோஹீம்' அல்லது 'ஆண்டவர்' என்றழைத்தான். மூன்று பேர் வருவதைக் கண்டபோது ஆபிரகாம், 'என் ஆண்டவரே என்கிறான். 96இதற்கு மாறாக லோத்து இருவர் வருவதைக் கண்டு, 'என் ஆண்ட வன்மாரே' என்று பன்மையில் அழைக்கிறான். அதுதான் வித்தியாசம். உங்களுடைய திருத்துவ கிரியைப் பாருங்கள். பாருங்கள்? “லோத்தின் நாட்களில் நடந்தது போல...'' என்று இயேசு கூறியுள்ளார். இப்பொழுது புரிகின்றதா? கவனியுங்கள். அதை எண்ணுங்கள். கவனியுங்கள், ஒரு நபர் ஆபிரகாமிடம் - ஆவிக்குரிய சபையாகிய மணவாட்டியிடம்-வருகிறார். அவன் ஆரம்பமுதல் சோதோமில் இருக்கவேயில்லை. அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அவனிடம் வந்தவர் சோதோமுக்குச் சென்ற மற்றிருவர்போன்று பிரசங் கம் செய்யவில்லை. ஆனால் ஒரு அடையாளத்தை அங்கு காண்பிக்கிறார். அதுதான் மேசியாவின் அடையாளம். அவர் பின்புறம் கூடாரத்தை நோக்கியவாறு இருந்தது. அவர் 'ஆபிரகாமே' என்று சொன்னார். இப்பொழுது ஞாபங்கொள்ளுங்கள். சில நாட்களுக்கு முன்பாக அவனு டைய உண்மையான பெயர் ஆபிராம் என்பதாகும். ஆனால் அவரோ, ''ஆபிரகாமே, உன் மனைவியாகிய சா-ரா-ள் எங்கே? என்று கேட்டார். சில நாட்களுக்கு முன்பாக அவள் சா-ரா-ய் என்று அழைக்கப்பட்டாள். ஆபிரகாம் மாறுத்தரமாக, 'அவள் உமக்குப் பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்' என்றான். “ஆபிரகாமே, அவர், 'நான்' ('நான்' என்று ஒருமையில் கூறுவதைக் கவனியுங்கள்) என் வாக்கின்படி உன்னிடத்தில் திரும்ப வருவேன்'' என்றார். அது என்னவென்று உங்களால் காண முடிகின்றதா? பாருங்கள்? ஒரு மனிதன். அவருடைய ஆடைகள் தூசியுடன் இருந்தன. இளங்கன்றை புசித்தார். பசுவின் பாலைக் குடித்தார், அப்பத்தைப் புசித்தார். ஆம் ஐயா. தேவன், ஏலோஹீம் மாம்சத்தில் வெளிப்பட்டார். கடைசி நாட்களிலும் அவர் தம்மை மாமிசத்தில் மறுபடியும் வெளிப்படுத்தப் போவதாக வாக்களித்துள்ளார். கவனியுங்கள். “ஆபிரகாம், உன் மனைவி, சாராள் எங்கே? “அவள் உமக்குப் பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்.'' ''நான் உன்னிடத்தில் திரும்ப வருவேன்.'' 97சாராள் ஏறக்குறைய நூறு வயது சென்றவளாயிருந்தாள். அவள் இதைக் கேட்டபோது, “கிழவியாகிய எனக்கா?'' என்று சொல்லி, கூடாரத்தின் திரைக்குப் பின்னாலிருந்து நகைத்தாள். அவர்களிருவரும் முதிர்வயதானபடியால் கணவனும் மனைவியுமாக அவர்கள் தொடர்பு கொள்வது எற்கனவே நின்று போயிருந்தது. ஆபிரகாம் அப்பொழுது நூறு வயது சென்றவனாயிருந்தான்; சாராளுக்கு அப்பொழுது தொண் ணூறு வயதாயிருந்தது. ''அது ஒருபோதும் நடைபெறாது” என்றாள். அவர் உடனே, “சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். வ்யூ! அவர் முதுகுப்புறம் அச்சமயம் கூடாரத்தை நோக்கியிருந்தது. ''இவைகள் எப்படியாகும் என்று ஏன் சாராள் நகைத்தாள்?'' என்றார். பாருங்கள். அவர் ஒரு அடையாளத்தை அவனுக்குக் காண்பித்தார். இப்பொழுது கடைசி காலத்தில் இது மறுபடியும் சம்பவிக்கு மென்று அவர் வாக்களித்துள்ளார். இரண்டு பேர் சோதோமுக்குச் சென்று லோத்துக்கு வார்த்தையை பிரசங்கித்தனர். அந்த ஸ்தலம் தீக்கிரையாக்கப்படுமென்றும், அவர்கள் அவ்விடமிருந்து வெளியேற வேண்டுமென்றும் கூறினர். அது அவ் விதமே சம்பவித்தது. லோத்தும் தடுமாறிக் கொண்டே வெளியேறினான். மாம்சப்பிரகாரமான சபை பாவச்சேற்றில் உழன்று கொண்டு, அதே சமயத்தில் ஸ்தாபனங்களின் திட்டங்களை அனுசரித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓர் நிலைமைக்கு இது எடுத்துக்காட்டு. ஆனால் மணவாட்டியோ... அந்த மனிதன் சோதோமுக்குச் செல்லவில்லை. அவர் சென்று, மணவாட்டியை மாத்திரமே அழைக்கிறார். இப்பொழுது நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ''தேவன் அங்கு (ஆபிரகாமிடம்) மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றா கூறினீர்கள்?“ 98இயேசுவும் தம்மைப்பற்றி, ''நீங்கள் எவ்விதம் என்னைக் குற்றம் சாட்டலாம்?... அவர் சொன்னார், ''தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறதென்று உங்கள் வேதாகமத்திலே, நியாயப்பிரமா ணத்திலே எழுதப்பட்டுள்ளதல்லவா?...'' அவர் எல்லாவற்றிலேயும், வசனத்தின்படியே இருந்ததால், “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரி சிகளிடம் வருகிறது'' என்றார். இப்பொழுது வார்த்தை கூறுவதென்ன வென்றால் ”தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறது. அவ்வாறு தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை நீங்கள் தேவர்களென்று அழைத்திருக்க, நான் என்னைத் தேவகுமாரன் என்று சொன்னபடியால் என்மேல் ஏன் நீங்கள் குற்றஞ் சாட்டவேண்டும்?'' என்று கேட்டார். அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலேயே, அவர்கள் வாயைத் தைத்தார் (sewed) அதுவேதான். பாருங்கள்? 99நாம் இப்பொழுது எங்கிருக்கிறோம்? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் உண்டாகுமென்று நாம் பார்த்தோம். அல்லாமல், அத்திமரமும் துளிர் விட்டாயிற்று. அதனுடன் மற்ற மரங்களும் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் போன்றவர்பிரிஸ்பிடேரியன் துளிர்விடத் தொடங்கிவிட்டன. அவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகியிருக்கிறது. இச்சமயத்தில் தேவன், தாம் தெரிந்து கொண்ட மணவாட்டியை அந்த மகத்தான சம்பவத்திற்காக ஒன்று சேர்க்கிறாரென்று நான் நம்புகிறேன். ஓ, என்னே! இப்பொழுது கவனியுங்கள். 100யோவான் கண்டது என்னவென்பதைப் பார்ப்போம். ''சிவப்பான குதிரையின் மேலேறி ஒருவன் புறப்பட்டுச் செல்கிறான். ஒரு பெரிய பட்டயத்தினால் ஜனங்களைக் கொன்று போடும்படி அவனுக்கு அதி காரம் அளிக்கப்படுகிறது. அதைக்குறித்து என்னுடைய வெளிப்பாடு இதுவே. அது மறுபடியும் சாத்தான் ஆகும். பிசாசு மறுபடியும் வேறொரு ரூபத்தில் காணப்படுகின்றான். இப்பொழுது நான் அன்றிரவு உங்களிடம் கூறினவாறு, முத்திரைகள்... குறிக்கின்றன. எக்காளத் தொனி ஜனங்களிடையே அல்லது தேசங்களிடையே நேரிடும் உள்நாட்டுப் போர்களைக் குறிக்கிறது. நீங்கள் பாருங்கள், இவன் கையில் பட்டயம் ஒன்றை ஏந்தியிருப்பதால், அது சபை அரசியலில் நேரிடும் யுத்தத்தைக் குறிக்கிறது என்பதை நாம் இங்கே காண்கிறோம். இப்பொழுது நீங்கள் அதை நினைக்கக்கூடாது. ஆனால் ஒரு நிமிடம் மாத்திரம், சில நிமிடங்கள் மாத்திரம் அதைக் கவனியுங்கள். குதிரைகளின் நிறங்கள் மாறிக்கொண்டே வருவதைக் கவனி யுங்கள். ஆனால் அவைகளின் மேல் சவாரி செய்பவன் அதே ஆள் தான். குதிரை என்பது ஒரு மிருகம். வேதத்தில் மிருகம் வல்லமைக்கு அறி குறியாக இருக்கிறது. அதே முறைமை வேறொரு நிறமுள்ள அதிகாரத் தின் மீது சவாரி செய்கிறது - களங்கமற்ற வெள்ளை நிறத்திலிருந்து இரத்த சிவப்பு நிறத்திற்கு மாறுதல். பாருங்கள்? அவன் எவ்வாறு வருகிறான் என்பதை இப்பொழுது கவனியுங்கள். 101அவன் தொடக்கத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் ஒரு சிறு கொள்கையாக விளங்கினான். அப்பொழுது அவன் யாரையும் கொன்று போடவில்லை. நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், அது வெளி. 2:6-ல் உள்ளது. அவன் ஒன்றையும் கொன்று போடவில்லை. அது ஒரு போதகம் மட்டும். அவன் மக்களிடையே ஒரு ஆவியாக மாத்திரம் திகழ்ந்தான். அந்த ஆவி யாரையும் கொன்றுபோடவில்லை. ஓ, அவன் களங்க மற்றவனைப் போல் வெள்ளைக்குதிரையின் மேல் சவாரி செய்தான். இன்றைக்கு ஜனங்கள் “நல்லது, நாம் உலகமெங்கும் வியாபிக்கும் ஒரு சபையை நிறுவி, அதை உலகமெங்கும் பரவியுள்ள சபை என்று அழைக்கலாமே'' (Universal Church) என்கின்றனர். அவர்கள் அதை இன்னும் செய்கின்றனர். சரி பாருங்கள்? இப்பொழுது, ''நாம் பெற்றுக் கொள்ளக்கூடும்...'' என்று சொல்கின்றனர். அது மிகவும் களங்கமில்லாதது போல் காணப்படுகின்றது. ஓ, அது களங்கமற்றது போல் காணப்பட்டு, 'நாமெல்லாரும் ஒன்றுகூடி ஐக்கியங் கொள்ள லாமே!' என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றனர். பாருங்கள்? அது களங்கமற்றதுபோல் தென்படுகிறது - வெள்ளைக்குதிரை. பாருங்கள்? 102ஆகையால் கெளரவம் வாய்ந்தவர்களும் கல்விமான்களும் ஒரே கூட்டப் பறவைகள் போல், 'நல்லது, நாம் எல்லோரும் ஒன்று சேருவோம்! ஏன் அந்த ஏழைக் கூட்டம் இடறவிரும்பினால் இடறலடை யட்டும். நல்லது, அது சரி, நாமோ, நற்குடிமக்கள் வருகை புரியும் சபையை பெற்றுக் கொள்வோம். நாம் இங்கிருந்து வெளியேறினால்,'' அவர்கள் உள்ளது போல, ஒன்று சேர்ந்து 'மேசன்ஸ்' (Masons) என்றும், ஆட் பெல்லோஸ் லாட்ஜ்' (Odd Fellows Lodge) என்றும் நம்மை அழைத்துக்கொள்ளலாம். ஆகவே அதன்பின்... இப்பொழுதுள்ள ஆட் பெல்லோஸ் லாட்ஜ் அல்ல, நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஆம், விசுவாசிகளுக்கு இது விந்தையாகவேதான் இருக்கிறது. ('Odd' என்னும் பதம் விந்தையென்று பொருள்படும்தமிழாக்கியோன்). இப்பொழுது, நாம் அதை வேறு வகையில் கூறு வோமானால், ''எங்களுக்குச் சொந்தமானது என்று அழைத்துக் கொள் கின்ற ஒரு கூட்டம் எங்களுக்கு வேண்டும்'' என்றனர். அது ஒரு உபதேசம், மிகவும் களங்கமற்றது போல இருந்தது. வேறு சிலர் ஒன்றுகூடி, சகோதரரே, ''எங்களுக்கு உங்கள் பேரில் எவ்வித விரோதமுல்லை. நிச்சயம் அவ்விதம் இல்லை. நீங்கள் செய்வதெல்லாம் சரிதான். ஆனால் எங்களுக்கு வியாபாரத் தொடர்பு இருப்பதனால், ஒரு குழுவை நாங்கள் அமைத்துக் கொண்டால் நல்லது என்று எங்களுக்குத் தோன்றுகிறது'' என்கின்றனர். பாருங்கள்? அது முடிவாக ஒன்று சேரும் வரையில் தொடர்ந்து சென்றது. ஆம், ஐயா. 103ஆனால் இத்தகைய கொள்கைகளை உண்டாக்கின அந்த ஏமாற்றும் ஆவி (ஓ, மனிதன்!) ஒரு மனிதனுக்குள் வாசம் செய்தது. இந்த உபதேச ஆவி, ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, அந்த மனிதன் கிறிஸ்துவின் ஸ்தானத்தைப் பறித்துக் கொண்டு, இப்பொழுது கிறிஸ்துவைப் போல் ஆராதிக்கப்படுகிறான். வேறுவகையில் கூறினால், வாடிகனில்... நான் அங்கு சென்றுள்ளேன். ''தேவனுடைய குமாரனுக்கு பதிலாக'' என்று அர்த்தம் கொள்ளும் சொற்கள் லத்தீனில் எழுதப்பட்டுள்ளது. (VICARIVS FILI DEI). இந்த லத்தீன் எழுத்துக்களின்கீழ் கோடிட்டால், ''தேவனுடைய குமாரனுக்குப் பதிலாக'' என்று அர்த்தமாகிறது. அப்படி யானால் அவன் பிரதிகுரு' (Vicar) என்று அர்த்த ம். 'பிரதிகுரு' (Vicar) என்பவன் யார் என்று நீங்கள் அறிவீர்கள். அதாவது அவன் வேறொரு வருடைய ஸ்தானத்தை வகிக்கிறான். தேவ குமாரனின் ஸ்தானத்தை அவன் பறித்துக் கொண்டான். “தேவனுடைய குமாரனுக்கு பதிலாக” 104“அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுள்ளவன் கணக்குப் பார்க்கக்கடவன். அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினு டைய இலக்கம் 'அறுநூற்றறுபத்தாறு'' என்று வேதம் கூறியுள்ளது. வாடிகனின் எழுதப்பட்ட VICARIVS FILII DEI என்ற லத்தீன் சொற்களில் காணப்படும் ரோம எழுத்துக்களின் எண்ணிக்கையை (உதாரணமாக 'V' க்கு 5, 'T'க்கு 1) கூட்டினால் 666 என்ற எண் கிடைக்கின்றது. ''அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல் உட்காரு வான்'' என்று வேதம் கூறுகின்றது. அவன் தேவனைப்போன்று ஆராதிக் கப்படுகின்றான். சிறு கொள்கையையளித்த அந்த ஆவி ஒரு மனிதனுக் குள் வாசம் செய்தபோது அவன் தேவகுமாரனுக்குப் பதிலாக 'பிரதி குருவாக' (Vicar) ஆகிறான். பாருங்கள்? ஓ! பயங்கரமான அந்த ஏமாற் றும் ஆவி!' நீங்கள் வேண்டுமானால் 2 தெசலோனிக்கேயர் 2:3 படியுங்கள். அது எங்கேயுள்ளது என்பதை நீங்கள் காணலாம். 105சாத்தான் எல்லா தேசங்களிலும் காணப்படும் அரசியல் வல்ல மைக்குத் தலைவனாக விளங்குகிறான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) விரும்பினால் மத்.4:8ஐக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இயேசுவை சாத்தான் ஒரு உயர்ந்த மலையின்மேல் கொண்டு சென்று, முன்பிருந்ததும் இனி வரப் போவதுமான உலகத்தின் இராஜ்யங்கள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் காண்பித்து, ''நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்'' என்று சொன்னான். அவனைக் குறித்துப்பேசுவோமானால்! இந்த இராஜ்யங்கள் அனைத்தும் ஒருநாள் அவர் ஆதிக்கத்தின் கீழ்வரும் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவ்வாறே இன்றைக்கும் ''என்ன பரிதாபமுள்ள பரிசுத்த உருளைகளே'' (holy rollers) என்கின்றனர். ''உலகமே நம்முடைய கரங்களிலுள்ளது.'' சாந்தகுணமுள்ளவர் கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று இயேசு கூறியுள்ளார். பாருங்கள்? பாருங்கள்? 106கவனியுங்கள், இந்த இராஜ்யங்கள் அனைத்தும் அவர் ஆதிக்கத் தின் கீழ்வரும் என்று இயேசு அறிந்து, “அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே'' என்று கடிந்து கொண்டார். மறுபடியும் வார்த்தையுடன் சரியாக நின்றார். பாருங்கள்? இப்பொழுது, வேதம் உரைத்தவாறு தலைமைப் பிசாசாகிய அவன் மதசம்பந்தமான இந்த பராக்கிரமசாலியினுள் குடிகொள்ளும்போது, அவன் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றாக இணைக்கிறான். அவன் ஆதிக்கம் கொண்டிருந்த இவ்விரண்டும் ஒன்றாகின்றன. பாருங்கள்? அந்திக்கிறிஸ்துவின் ஆவி புறப்பட்டுச் சென்றபோது, அது ஆவியாக இருந்தது. அதன்பின் அது என்னவாயிற்று? அதன்பின்பு அது .... இப்பொழுது இந்த முத்திரையை கவனியுங்கள். அந்திக்கிறிஸ்துவின் ஆவி புறப்பட்டுச் சென்று கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமாய் செயல் புரிந்தது. அது சரி. அது செய்த அடுத்த காரியம்... கிறிஸ்து தமது சபை என்ன செய்வதற்காக துவக்கினார். அது பாவத்திற்கு விரோத மாக இருக்கும்படியாக. ''ஓ, கிறிஸ்து சொன்னதற்கு இதுவல்ல அர்த்தம். அதுவல்ல அர்த்தம். அவர் கூறியுள்ளது நமக்காக அல்ல. ஆதி காலத்தவருக்கு'' என்றெல்லாம் விரோதமாக அது போதிக்கிறது. பாருங்கள்? பாருங்கள், விரோதமான ...... (anti). 107வெள்ளைக் குதிரையின் மேலிருந்தவனுக்கு கிரீடம் இல்லாமல் இருந்தது. பின்னர் அவனுக்குக் கிரீடம் அளிக்கப்படுகிறது. அவனிடம் வில்லிருந்தது. ஆனால் அம்புகள் இல்லை. பாருங்கள்? ஆகவே அவன் புறப்பட்டுச் சென்றபோது... சில காலங்களுக்குப் பின், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப் பட்டது. ஏனெனில் ஒரு ஆவிக்கு கிரீடம் சூட்ட முடியாது. ஆனால் இந்த ஆவி ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, அந்திக்கிறிஸ்து ஆவியின் கிரியைக்கு கள்ளத்தீர்க்கதரிசி என்னும் தன்னுடைய இரண்டாவது இரகசியமான உத்தியோகத்தை அவன் மேற்கொள்ளும்போது அவன் முடிசூட்டப்படுகிறான். இப்பொழுது, நாம் இப்பொழுது காண்கிறோம். இப்பொழுது. அவன் அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவன் அவ்விதமாகிறான். அவன் ஏற்கனவே உலக அரசியலை தன் ஆதிக்கத் திற்குள் வைத்திருக்கிறான். இப்பொழுது அவன் மதசம்பந்தமான ஆதிக்கம் கொண்டவனாய் உலக சபை ஒன்றை நிறுவத் தலைப்படுகிறான். அமெரிக்காவைக் குறித்து சொல்லப்பட்டிருக்கும் வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் ஒரு சிறு மிருகம் ஆட்டுக்குட்டிக்கொப்பாக இரண்டு கொம்புகளை உடையதா யிருந்தது என்று எழுதப்பட்டிருப்பதை என் சகோதரரே, நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஒரு கொம்பு அரசாங்க ஆதிக்கத்தையும், மற்றொரு கொம்பு மதசம்பந்தமான ஆதிக்கத்தையும் குறிக்கின்றது. அவனுக்கு முன் அந்த மிருகம் என்ன செய்ததோ, அதே காரியத்தை அவனும் செய்தான். 108அமெரிக்க நாட்டின் எண்ணிக்கை பதின்மூன்று, அது ஒரு ஸ்திரீ யின் நாடாகும். அது விநோதமல்லவா? அதைக் குறித்து வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது மிக அதிசயமல்லவா? நம் கொடியில் பதின்மூன்று கோடுகளும், பதின்மூன்று நட்சத்திரங்களும் உள்ளன. எல்லாமே ''பதின்மூன்று, பதின்மூன்று, பதின்மூன்று'' என்பதாக அமைந்துள்ளது. அவ்வாறே எல்லாமே தொடர்ச்சியாக “ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ”' என்பதாக அமைந்துள்ளது. முடிவில் ஒரு ஸ்திரீ ஆதிக்கம் கொள்வாள் என்று முப்பது வருடங்களுக்கு முன்னமே நான் முன்னறிவித்தேன். அப்பொழுது நான் முன்னறி வித்த ஏழு காரியங்களில், ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அவளை ஆதிக்கத்திற்குக் கொண்டுவரவிருக்கும் அந்த மனிதனை நீங்கள் அரசியலில் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ஆம். ஊம். அது சரி. 109ஆகவே, சொல்லவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. இப்பொழுது கவனியுங்கள். அப்படிச் சொல்லிக்கொண்டே போனால், நாம் நம்முடைய பொருளுக்கு வர இயலாது. உங்களை அதிக நேரம் தாமதிக்கமாட்டேன். பாருங்கள், கவனியுங்கள். சாத்தான் உலகத்திலுள்ள எல்லா இராஜ்யங்களின் பேரிலும் அரசியல் ஆதிக்கம் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அவரே அதைச் சொன்னார். மத்தேயு 4-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில் நீங்கள் அதைக் காணலாம். எல்லா இராஜ்யங்களும் அவனுக்குச் சொந்தமானவை. அதன் காரணமாகவே யுத்தங்களும் இரத்தம் சிந்துதலும் உண்டாகின்றன. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக அவர்களுக்கு இந்தப் பட்டயம் அளிக்கப்படுகின்றதென்பது வினோதமாகக் காணப்பட வில்லையா? ஓ, ஓ, ஓ, என்னே ! இப்பொழுது கவனியுங்கள். 110இப்பொழுது, அவன் அதைச் செய்தபொழுது, அவன் தொடக் கத்தில் மதசம்பந்தமான ஆதிக்கம் கொண்டிருக்கவில்லை. அவன் பிசாசி னாலான கள்ளப் போதனைகளுடன் துவக்கினான். அது பிறகு கோட் பாடாக உபதேசமாக மாறியது. பின்னர் அந்த உபதேசம் மனிதனுக்குள் வாசம் செய்து கள்ளத் தீர்க்கதரிசியென்னும் உத்தியோகத்தை மேற்கொண்டது. அதன்பின் அவன் சரியான இடத்திற்குச் சென்றான். அவன் ஒரு போதும் இஸ்ரவேலுக்குச் செல்லவில்லை. அவன் ரோமாபுரிக்குச் சென்றான். நிசாயா, ரோமாபுரி. அவன் ரோமாபுரிக்குச் செல்லுகிறான். 111அங்கு நிசாயாவில் ஒரு மாநாடு கூட்டப்பட்டு, அத்தியட்சகர் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் விளைவாக சபையும், அரசாங்கமும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அப்பொழுது அவன் தன் கையிலிருந்த வில்லை கீழே போட்டுவிட்டு, வெள்ளைக் குதிரையிலிருந்து கீழேயிறங்கி சிவப்பு குதிரையின் மேலேறுகிறான், தன்னுடன் இணங் காத யாவரையும் அவன் அப்பொழுது கொன்றுபோடுகிறான். அதுதான் இரண்டாம் முத்திரை. அதே ஆள்தான்! அவன் கடைசி வரையிலும் அதனுடன் சவாரி செய்வதைக் கவனியுங்கள், பாருங்கள். அவன் அந்த இரண்டு வல்லமைகளையும் இணைக்கிறான். 112இன்றைக்கும் அதையே செய்ய முயல்கின்றனர். ஒரு விநோதமான காரியம், ஒருவேளை உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இன்றைக்கு லூயிவில் (Louisville) பட்டிணத்திலுள்ள பாப்டிஸ்ட் குழுவினர் (நீங்கள் ரேடியோவில் கேட்டிருக்கலாம்), சரி. பாருங்கள்? அது சரி. நாம் கத்தோலிக்க சபையுடன் உண்மையில் சேரவேண்டிய அவசியமில்லையென்றும், ஆனால் ஆராதனையில் நாம் அவர்களுடன் ஐக்கியங்கொள்ளுதல் அவசியமென்றும் கூறுகின்றனர். லூயிவில் பட்டிணத்தில் இது நிகழும் தருணம், தேவன் முத்திரைகளின் இரகசியங்களைத் தம் மக்களுக்கு வெளிப்படுத்தி “அவ்வாறு செய்ய வேண்டா மென்று” அறிவுறுத்துகிறார். இரண்டும் ஒரே நேரத்தில் கிரியை செய் கின்றன. பாருங்கள்? காகமும் புறாவும் பேழையின் மேல் ஒரே கம்பத்தின் மேல் உட்கார்ந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிச்சயமாக. ஞாபகங்கொள்ளுங்கள். 113இப்பொழுது, அவன் சபையையும் அரசாங்கத்தையும் அந்த இரு வல்லமைகளையும் ஒன்றாக இணைக்கிறான் என்பதை நாம் பார்க்கிறோம். அதன்பின் அவன் என்ன செய்கிறான்? அவன் தன் சொந்த மார்க்கம் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு அவன் விருப்பத்திற்கேற்ப செய்கிறான். அப்பொழுது அவனுடன் இணங்காத அனைவரையும் கொல்வதற்கு அவன் உரிமை பெறுகிறான். அவன் முற்றிலுமாக அதையே செய்தான். அவன் அதைத்தான் செய்தான். தேவனுடைய வார்த்தையைக் கைக் கொண்ட ஜீவனுள்ள தேவனின் உத்தம பரிசுத்தவான்கள் அவனுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால் அவர்களை அவன் கொன்றுபோட்டான். 114இப்பொழுது, ஆதி சபையின் காலத்தைப் பற்றியும், நிசாயாவின் காலத்தைப் பற்றியும் நன்கு படித்திருக்கும் சகோ. லீ வேயில், மற்றுள் ளோரே! இதைப் படித்தீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஸ்மக்கர் (Schmucker) என்பவர் எழுதியுள்ள ''மகிமையுள்ள சீர்திருத்தம்“ (Glorious Reformation) என்னும் புஸ்தகத்தில் இது காணப்படுகின்றது. ஹிப்போ நாட்டைச் சேர்ந்த பரி. அகஸ்டின் ரோம சபையின் குரு வானவராக ஆனபோது - ஒருமுறை பரிசுத்த ஆவியானவர் அவரை அபிஷேகிக்க முயன்றபோது, அவர் அதைப் புறக்கணித்துவிட்டார் போதகர் என்ற முறையில், இதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? ஆகையால், அவர் பரிசுத்த ஆவியைப் புறக்கணித்தார். இன்றைக்கு பிராடெஸ்டெண்ட் சபைகளும் அவ்வாறே பரிசுத்த ஆவியை நிராகரித்து விட்டதற்கு அது ஒரு மாதிரியாய் உள்ளது. அகஸ்டின் ஹிப்போ நாட்டிற்குச் சென்று, ரோமன் கத்தோலிக்க சபையில் விசுவாசங் கொள்ளாத அனைவரும் கொலை செய்யப்படுவது தேவனுக்குப் பிரீதியா யுள்ளது என்னும் வெளிப்பாட்டை அவர் தேவனிடமிருந்து பெற்றிருப் பதாக ஒரு சாசனத்தில் எழுதி, அதற்குக் கையொப்பமிட்டார். 115இப்பொழுது கவனியுங்கள். 'இரத்தச் சாட்சிகள்' என்னும் புஸ்தகத்திலிருந்து இதை நான் எடுத்துக் கூறுகிறேன்: “பரி. அகஸ்டின் காலத்திலிருந்து 1586 வரை ரோமன் கத்தோலிக்க சபை 6,80,00,000 பிராடெஸ்டெண்டுகளை கொலை செய்துள்ளது''. அப்படியானால் அவன் பட்டயம் சிவப்பாயுள்ளதா? அவன் சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கின்றானா? அது என்ன? அதே ஆதிக்கம்! அதே ஆள்! அதுதான் இந்த முத்திரையின் இரகசியம். இரத்த சாட்சிகளாக மரித்தவர் மாத்திரம் 6, 80,00,000 பேர் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர், அதுவுமல்லாமல், கொலை செய்யப்பட்டவர் இன்னும் எத்தனையோ பேருண்டு. எவ்வளவு பயங்கரம்! இருளின் காலங்களில் கத்தோலிக்கர் கொள்கைகளை ஏற்காத லட்சக்கணக்கானவர் சிங்கங்களுக்கு இரையா யினர்! அல்லாமலும் இன்னும் அநேக விதங்களில் அவர்கள் கொலை செய்யப் பட்டனரென்று உங்களுக்குத் தெரியுமா! 116இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? (சபையார், “அதிகமான நேரம் உள்ளது? அது சரி.'' என்கின்றனர் -ஆசி) அது சரி. நான் உங்க ளுக்கு ஒன்றை வாசிக்கட்டும். என்னோடுகூட திருப்புங்கள் (வேதத்தை -தமிழாக்கியோன்) நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்கட்டும். ஒரு நிமிடத்தில்... அதை நாம் படம் பிடித்துக் காண்பிக்கட்டும். அது எனது எண்ணத்திற்குள் சற்று தோன்றியது, நாம் அதைப் படிப்போம். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். நமக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் மீதம் இருக்கின்றன. அது சரி. இப் பொழுது, நாம் படிக்கையில், மிகவும் மிகவும் கூர்ந்து கவனியுங்கள். வேதாகமம் வைத்துள்ளோருக்கு, நீங்கள் அதைத் திருப்ப நான் உங்களுக்கு சற்று நேரம் தருகிறேன். சகோ. லீ! ஸ்மக்கர் (Schmucker) எழுதிய 'மகிமையுள்ள சீர்திருத்தம்' என்னும் புஸ்தகத்திலிருந்து இரத்த சாட்சிகளின் பட்டியலை நான் எடுத்தேன். இந்தப் பட்டியல் ('மகிமையுள்ள சீர்திருத்தம்' என்னும் புஸ்தகத்திலுள்ளது-தமிழாக்கியோன்) வாடிகனில் ரோமாபுரி யின் இரத்த சாட்சிகள் என்பதிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது. 117பரி.பாட்ரிக்கைச் சார்ந்தவர்கள் இரத்த சாட்சியாய் மரிக்கும் வரையுள்ள எண்ணிக்கைதான் அது. இவையனைத்தும் செய்துவிட்டு அவர்கள் பரி. பாட்ரிக்கை தங்கள் சபையின் பரிசுத்தவானென்று அழைக்கின்றனர். ஊம்... பரி.பாட்ரிக் எவ்வளவாக கத்தோலிக்கராக இருந்தாரோ, அவ்வளவாக நானும் கத்தோலிக்கனாக இருக்கிறேன். நான் எவ்வளவாக கத்தோலிக்கனாயிருக்கிறேனென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். பாருங்கள்? அவர் ரோமன் கத்தோலிக்க சபையின் போதகங்களை வெறுத்தார். போப்பாண்டவரிடம் செல்ல அவர் மறுத்தார். ஆம் ஐயா, பரி. பாட்ரிக் வேதப் பள்ளிகள் நடத்திய வட ஐயர்லாந்துக்கு (Northern Ireland) நீங்கள் சென்றதுண்டா ? அவர் முதலில் பாட்ரிக் என்று அழைக் கப்படவில்லை. உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்? அவர் சுகாடஸ் (Sucatus) என்னும் பெயர் கொண்டிருந்தார். அது சரி. அவரது சகோ தரியை அவர் இழந்தார்... நீங்கள் ஞாபகங்கொள்ளுங்கள். பாருங்கள்? அது சரி. 118இப்பொழுது, கவனியுங்கள் சரி, வெளிப்படுத்தல் 17-ம் அதி காரத்தைப் படிப்போம். இப்பொழுத, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயங்களைத் திறந்து பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதிக்க அனுமதியுங்கள். ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடம் வந்து.... இப்பொழுது, இங்கே ஏழு கலசங்களைப் பாருங்கள். நாம் ஏழு என்னும் எண்ணிக்கையுடையவைகளைச் சிந்தித்துக்கொண்டு வந்திருக் கிறோம். சபையின் காலங்களுக்குப் பிறகு இவையெல்லாம், கொள்ளை நோய்கள் மற்ற யாவும் ஒரே நேரத்தில் சம்பவிக்கின்றன. அந்த ஒரே புஸ்தகத்தில் இவை முத்தரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்து, ஒன்றோடொன்று இணைகின்றன. இரண்டு ஆவிகள் கிரியை செய்து கொண்டு வருகின்றன - ஒன்று தேவன், மற்றொன்று பிசாசு. பாருங்கள்? ...என்னோடே பேசி; நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தன மாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந் தார்களே; “தண்ணீர்கள்'' என்பதை இப்பொழுது கவனியுங்கள். 119“வேசி” என்னப்படுபவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும். அது ஆணாக இருக்கமுடியாது. வேதத்தில், ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். ஏன்? கிறிஸ்துவின் மணவாட்டியும் ஒரு ஸ்திரீயாகவே சித்தரிக்கப்படுகிறாள். நீங்கள் பாருங்கள். சபை என்பது ஸ்திரீயாகும். இப்பொழுது, “தண்ணீர்கள்” என்பது எதைக் குறிக்கிறது? இங்கு கவனியுங்கள். 15-ம் வசனம் படியுங்கள்: பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந் திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங் களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். இந்த சபை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. பாருங்கள். அந்த வேசி தண்ணீர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிருள்.'' மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே (நிக்கொலாய் போதகத்தைப் பின்பற்றி ஆவிக்குரிய வேசித்தனம் செய்தார்கள்). அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே. இங்குள்ள குடிகாரக் குழுவைப் பாருங்கள். ..... ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்கு கொண்டு போனான்... ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன் 120அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா? இது கத்தோலிக்க சபையைக் குறிக்கிறது என்று கத்தோலிக்க புஸ்தகங்களே சம்மதிக் கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? 'எங்கள் மார்க்க விசுவாசத்தின் உண்மைகள்' (Facts of our Faith) என்னும் புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. பாருங்கள், அது ஒரு கத்தோலிக்க மத குருவிற்கு சொந்தமான புஸ்தகம். அது சரி; அது சரி. அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப் பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத் திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். இப்பொழுது, இந்த அடையாளத்தை (ஏழு தலைகளையுடைய மிருகம்) சற்று கவனியுங்கள். 'அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்'' என்று இங்கே கூறப்பட்டுள்ளது பாருங்கள். ரோமாபுரி ஏழு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது நிச்சயமாகும். பாருங்கள்? - “ஏழு தலைகள்,'' ''பத்து கொம்புகள்.'' பத்து கொம்புகள் பத்து இராஜ்யங்களைக் குறிக்கின்றன. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்பு களாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். 121அந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவி - “வேசித்தனம்” பாருங்கள், தன் “உபதேசத்தினால்'' வேசித்தனம் செய்தல்... பாருங்கள்? மண வாட்டியெனக் கருதப்படுகிறவள் வேசித்தனம் செய்கிறாள். பாருங்கள்? ஏவாள் செய்தது போன்று சபையும் வேசித்தனம் செய்கின்றது. பாருங்கள்? மேலும், இரகசியம், மகா பாபிலோன், ரோமாபுரிதான் “பாபிலோன்” என்று அனைவரும் அறிவர். வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. ஆறாவது வசனத்தைக் கவனியுங்கள். அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசு வினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண் டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். சிலுவைகள் இன்னும் மற்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு அவள் மிகவும் அழகானவளாய் காணப்பட்டாள். பரிசுத்தவான்களுடைய இரத்தத்தைக் குடித்த குற்றத்தை அவள் எவ்வாறு செய்திருக்க முடியுமென்று யோவான் குழப்பமுற்றான். அப்பொழுது தூதன் அவனிடம் என்ன கூறுகிறான் பாருங்கள். அப்பொழுது தூதனானவன் என்னை நோக்கி; ஏன் ஆச்சரி யப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையுமுடையதாய் இவைகளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். இது முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியமல்ல. இது வேறொன்று, பாருங்கள்? அவன் கூறினான்.... ஏழு தலைகளும், பத்து கொம்புகளும். நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது. இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, (அதற்கு அஸ்திபாரம் இல்லை - போப்பாண்டவர்) நாசமடையப்போகிறது. உலகத் தோற்ற முதல் ஜீவபுஸ்தகத்தில் (அதுதான் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள், பாருங்கள்) பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள். இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பது மாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். 122உங்கள் பெயர் எப்பொழுது ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது? நீங்கள் சென்றிருந்த அந்த எழுப்புதல் கூட்டத்தின்போதா? அல்லவே அல்ல. “உலகத்தோற்றத்துக்கு முன்னால்.'' இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகம். அந்த மிருகத்தைப் பாருங்கள்.“ ஒன்று சாகும். மற்றொன்று அதன் ஸ்தானத்தை வகிக்கும். ''இருந்ததும் இராமற்போனதும் இருந்ததும்; இராமற்போனதும், இருந்தான், இராமற்போனான்,” .... முடிவில் அது அவ்வழியில் நாசமடையப் போகிறது. பாருங்கள்? சரி. ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். ஆவிக்குரிய வரங்கள் ஒன்பதென்றும், அதில் ஞானம் ஒரு வரம் என்றும் எத்தனை பேர் அறிவீர்கள்? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி) அது உண்மை ! அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். ஓ! இதைப் புரிந்துகொள்ளாதவன் முற்றிலும் குருடனாயும், செவிடனாயும், ஊமையனாகவும் இருத்தல் வேண்டும். பாருங்கள்? சரி. அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்து பேர் விழுந் தார்கள். ஒருவன் இருக்கிறான் (நீரோ), மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித் திருக்க வேண்டும். நீரோ என்ன செய்தான் என்பது நினைவிருக்கிறதா? அவன் பட்டி ணத்தை எரித்துப்போட்டு, கிறிஸ்தவர்கள் மேல் பழியைச் சுமத்தினான். அவன் தன் தாயை ஒரு சிறிய மரக்கிளையில் உட்காரவைத்து அதை குதிரையைக் கொண்டு வீதிகள் முழுவதும் இழுக்கச் செய்தான். ரோமா புரி எரியும்போது அவன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான். அது சரி. இருந்ததும், இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும்... அந்திக்கிறிஸ்துவின் ஆவி மனிதனுக்குள் வாசம் செய்து கிரீடம் சூட்டப்பட்டபோது, அஞ்ஞான ரோம் மார்க்கம் போப்பாண்டவரின் ரோம் மார்க்கத்துடன் இணைந்தது. அவன் சபைக்கும் அரசாங்கத்துக்கும் முடி சூட்டப்பட்ட அரசனாக விளங்கினான். ஓ, சகோதரனே! பாருங்கள். அது முழுவதும் அசுத்தத்தால் நிறைந்துள்ளது. பாருங்கள்? ...அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும் நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான். (நாசமடையும் வரை அவர்கள் தங்கள் முறைமைகளை மாற்றப்போவதில்லை). நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத் துடன்கூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதி காரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். 123அவர்கள் சர்வாதிகாரிகளாக ஆகின்றனர். நீங்கள் பாருங்கள், “இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள், '' இப்பொழுது இங்கு கவனி யுங்கள். அது கம்யூனிஸ்ட்டுகளைக் குறித்துப் பேசவில்லை. பாருங்கள்? இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணு வார்கள். ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவ ரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர் களுமாயிருக்கிறார்கள் என்றான். பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந் திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங் களும்; கூட்டங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமாம். நீ மிருகத்தின் மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து (நாம் சென்ற இரவு கூறினது போன்ற அந்த உடன்படிக்கை முறிக்கப்படும்போது) அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடு வார்கள். 124பூமியின் வர்த்தகர்கள், “ஐயோ! ஐயோ பாபிலோன் மாநகரமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே!'' என்று புலம்புவார்கள் என்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? (வெளி: 18:16). பாருங்கள்? தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத் திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான். ருஷ்யா தேசம் எல்லா தேசங்களின் மேலும் ஆளுகை செய்வ தில்லை. நாமும் எல்லோர் மேலும் ஆளுகை செய்வதில்லை. நேபுகாத் நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையின் உருவம் கைகளில் தொடங்கி பாத விரல்களில் முடிவது போன்று, உலகம் முழுமையையும் அரசாட்சி செய்வது ஒன்றே ஒன்றாகும். அதுதான் ரோமாபுரி. ரோமாபுரி தேசம் அரசாட்சி செய்வதில்லை. ரோமாபுரி சபைதான் அவ்விதம் செய்கிறது. வானத்தின் கீழ் காணப்படும் எல்லா தேசங்களும் ரோமாபுரியின் ஆதிக்கத்தில் உள்ளது. “அவனுடன் யாரால் யுத்தம் செய்ய முடியும்?'' என்று அவர்கள் கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கத்தோலிக்க சபை 'சமாதானம்' என்று அறை கூவும்போது, (சகோ.பிரான்ஹாம் தன் விரல்களை ஒரு முறை சொடுக்கிறார்-ஆசி) அங்கு சமாதானம் ஏற்படுகிறது. ஒவ்வொரு கத்தோலிக்கனும், அதுதான், அது ”சண்டையிடாதிருங்கள்“ என்றால், சண்டையிடுவதை அவர்கள் நிறுத்திவிடுகின்றனர். அவ்வளவுதான். அது உண்மை . அவன் செய்வதை வேறு யாராலும் செய்யமுடியாது. ''ஆகவே அவனால் செய்யக்கூடும் அற்புதங்களைக் கண்டு அவர்கள் வியந்தனர்.'' அவன் யுத்தத்தை நிறுத்தமுடியும். (சகோ.பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்கிறார் - ஆசி) 'நிறுத்துங்கள்'' என்று அவன் சொன்னால் போதும். அப்பொழுது யுத்தம் நின்றுவிடும். ஆனால் அவன் அவ்விதம் சொல்லி யுத்தத்தை நிறுத்துவானா? இல்லவே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக அதிகாரம் பெற்றுள்ளனர் என்பதைக் கவனிக்கவும். தொடக்கத்தில் அவன் வில்லைப் பிடித்திருந்தான், ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. பிறகு அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து சிவப்பு நிறமுள்ள குதிரைக்கு மாறி, தன் கையிலுள்ள “பெரிய பட்டயத்தினால்'' கொலை புரிகிறான் - பிசாசின் கைகளில் பட்டயம். 125பேதுரு பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக் காரனைக் காதற வெட்டினபோது, இயேசு அவனிடம், 'பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்' என்றார். நீங்கள் எதிர்த்துப் போரிட வேண்டாம். பாருங்கள்? அவர் செய்தது போலவே நீங்களும் செய்யுங்கள். அதைத் தொடர்ந்து செய்யுங்கள். இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள். அவனிடம் பட்டயம் இருந்தது. சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் பட்டயத்தை வைத்துக் கொண்டு, தன்னுடன் இணங்காத அனைவரையும் கொன்று, அதனால் ஏற்பட்ட இரத்தப்பெருக்கின் வழியாகச் செல்கிறான். 126இப்பொழுது, இந்த முத்திரையின் அர்த்தம் நன்கு புரிகின்றதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). இந்த முத்திரையின் அர்த்தம் எத்தனை பேருக்குப் புரிகின்றது? ('ஆமென்'') அது சரி. இப்பொழுது இயேசு, என்ன கூறினார்? பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்ட யத்தால் மடிந்து போவார்கள்' என்று இயேசு உரைத்தார். அது உண்மை அல்லவா? அது சரி, அது சரி. காலங்கள்தோறும் இரத்தச் சாட்சிகளின் இரத்தம் சிந்தின இக்குதிரையின் மேல் சவாரி செய்பவனும் அவனைச் சார்ந்தோரும் இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய பட்டயத்தால் கொல்லப்படுவர். ''பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்'' அது உண்மை . அவர்கள் அந்திக் கிறிஸ்துவின் கொள்கையாகிய பட்டயத்தைக் கொண்டு, காலங்கள் தோறும் தேவனை உண்மையாக வழிபட்ட லட்சக்கணக்கானவர்களைக் கொன்று போட்டனர். ஆகையால் இயேசு பட்டயத்துடன் வரும்போது - அவருடைய வார்த்தை அவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது - அவருக்கு முன்னால் வரும் அனைவரையும் கொன்று போடுவார், அதை நீங்கள் நம்புகிறீர்களா? ”சத்துருவைக் கொன்று போடுவார்.'' 127சற்று பொறுங்கள். நானாகவே இதைச் சொல்லுகிறேனா அல்லது தேவனுடைய வார்த்தை இவ்விதம் உரைக்கிறதா என்று பார்ப்போம். வெளி. 19:11. பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்... (ஆமென்). இதோ ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரெனப் பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந் தன. அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. ஓசகோதரனே! அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்குக் கிரீடம் சூட்டியுள்ளனர். நீங்கள் பாருங்கள். அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. நாம் இன்னும் அந்த நாமத்தை அறிந்துகொள்ளவில்லை. ஞாபகங் கொள்ளுங்கள், நம்மால் முடியாது 'அவர் தரித்திருந்தார். நாம் அதை காணட்டும். இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந் தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (ஏனெனில் அவரும் வார்த்தையும் ஒன்றாகும்). (ஆங்கிலத்தில் அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது என்றல்ல. ஆனால் 'அவர் தேவனுடைய வார்த்தை என்னும் நாமத்தால் அழைக்கப்பட்டார்' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ஏனெனில் அவரும் அவருடைய வார்த்தையும்... ஒன்றே. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள், அவருடைய நாமங்கள்' என்று பன்மையில் கூறப்படவில்லை, ஊம்... 'நாமம்' என்று கூறப்பட் டுள்ளது. அவருடைய நாமம் 'தேவனுடைய வார்த்தை' என்பதல்ல. அவர் அந்நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரே நாமத்தை மாத்திரம் அறிந்திருந்தார் - வேறெந்த நாமத்தையும் அல்ல, பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். (வெண்மை வஸ்திரம் பரிசுத்தவான் களின் நீதியாகும்). 128இப்பொழுது கவனியுங்கள். இயேசு என்ன சொன்னார்? “பட்ட யத்தை எடுக்கிறவர்கள் பட்டயத்தால் மடியவேண்டும்''..... சரி, சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் வருகிறான். நீங்கள் ஒருக்கால் காலங்கள் தோறும் 6,80,00,000 பேரை அல்லது அதைக் காட்டிலும் அதிகமான வரைக் கொன்றிருக்கலாம். ஆனால் இயேசு, ''பட்டயத்தை எடுத்தவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்'' என்று சொல்லியிருக்கிறார். கவனியுங்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்.... கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருக்கிறது'' என்று எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தை வேறெதைச் செய்கிறது? ”அது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறது.'' புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. ...இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும், தொடையின் மேலும் எழுதப் பட்டிருந்தது. 129தேவனுடைய வார்த்தைக்கு எதிராக இருக்கும் போலியாட்கள், அவர்கள் உடன்படமாட்டார்கள், ஆகவே இந்தக் காரியமானது.... சாத்தான் தன் ஆதிக்கத்தின் கீழிருந்த அரசாங்க அதிகாரத்தையும் ஆவிக்குரிய அதிகாரத்தையும் ஒன்றாக இணைத்து உலகெங்கும் பரவியுள்ள ஒரு சபையை உண்டாக்கி, வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்கி சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேலேறிப் புறப்பட்டுச் சென்று, கோடிக் கணக்கானவர்களை பட்டயத்தால் கொன்றுபோட்டான். “ஆனால் தேவன் அவன் எந்த வார்த்தைக்கு விரோதமாக போதித்தானோ, அதே வார்த்தை இயேசுகிறிஸ்துவின் உதடுகளிலிருந்து வல்லமை பொருந்தியதாய் புறப்பட்டு, அவனையும் அவனைச் சார்ந்தவர் அனைவரையும் கொன்றுபோடும்'' என்று கூறினார். ஆமென்! 130அதுதான் இரண்டாம் முத்திரையின் இரகசியம். நீங்கள் அவரில் அன்பு கூருகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி) ஓ, என்னே! இது கர்த்தர் உரைக்கிறதாவது (சபையார் மிகவும் களி கூர்ந்து மகிழ்கின்றனர்) தேவனுக்கு ஸ்தோத்திரம். அநேக தரிசனங் களைக் கண்டு, வெளிப்பாடுகளைப் பெற்று, அவ்விதம் சம்பவிக்கும் என்று நான் கூறின ஒவ்வொன்றும் அதேபோன்று நிகழ்ந்தது. இதை யறிந்தவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நூற்றுக் கணக்கானவர் கைகளை உயர்த்தியுள்ளனர். இங்குள்ள அனைவருமே கைகளை உயர்த்தியிருக்கின்றனர். அது உண்மை . இது அப்படியே இருக்கும். அது அப்படியே என்று ஞாபகங்கொள்ளுங்கள். ஓ! நண்பர் களே ! இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றண்டைக்கு வாருங்கள். எப்பாவத்தீங்கும் அதனால் நிவர்த்தியாகும். நீங்கள் ஒருபோதும் வரவில்லையெனில், அவரை விசுவாசித்து இப்பொழுதே வாருங்கள். வேறொரு தருணத்திற்காகக் காத்திராதே யுங்கள். நண்பர்களே, உங்கள் ஜீவியத்தில் ஏதாவது காணப்பட்டால், 131நாங்கள் உதவி செய்ய இங்கிருக்கிறோம்... ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது. (சகோ-பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறைகள் தட்டுகிறார் -ஆசி) ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அது எப்பொழுது சம்பவிக்குமென்றும் எனக்குத் தெரியாது. என்ன நேரிடப் போகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எப்பொழுது என்று நான் அறியேன். அது கண்டிப்பாக நிகழுமென்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் இப்பொழுது எனக்கு அதை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். தீர்க்கதரிசிகளுக்கு முதலாவது அதை வெளிப்படுத்தாமல் அவர் செய்வதில்லை. ஆமோஸ். 3. இவையாவும் கடைசி நாட்களில், ஏழாம் சபையின் காலமுடிவில் அக்காலத்து செய்தியாளன் தோன்றும் போது நிறைவேறும் என்பதாய் அவர் வாக்களித்துள்ளார். முத்திரை களின் இரகசியம் அப்பொழுது வெளிப்படும். இப்பொழுது அது வெளிப் படுத்தப்படுகிறது என்று கர்த்தரின் நாமத்தைக் கொண்டு சொல்லுகிறேன். நண்பர்களே, நான் சொல்வதை நம்புங்கள். ஆம், ஐயா. பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள். நான் முடிப்பதற்குமுன் ஒன்றைக் கூறிட விரும்புகிறேன் ஏனெனில்.... இப்பொழுது ஒன்பதரை மணியாகின்றது. இப்பொழுது இது சரியான நேரமாயுள்ளது. நானும் பில்லியும் விமானத்தைவிட்டு இறங்கி இந்தியாவை அடைந்தபோது ஒரு ஆங்கிலப் பத்திரிகையை நான் படிக்க நேர்ந்தது. அதில் ''பூகம்பம் நின்றுவிட்டிருக்க வேண்டும். பறவைகள் திரும்பி வருகின்றன'' என்ற விவரம் அச்சிடப்பட்டிருந்தது. ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. 132இந்தியாவில் நம்மைப்போன்று கம்பிகளினால் செய்யப்பட்ட வேலிகள் கிடையாது. அவர்கள் அடைப்புக்காகக் கற்பாறைகளை உபயோகிக்கின்றனர். அவர்கள் வீடுகளையும் கற்பாறைகளைக் கொண்டே கட்டுகின்றனர். இந்தியாவில் எங்கும், எல்லாவிடத்திலும் உஷ்ண மாகவே உள்ளது. ஓ... மலைகளின் மேல் வசிப்பவரைத் தவிர. கல்கத்தா முழுவதிலும் ஜனங்கள் தெருக்களில் வாழ்ந்து மரிக்கும் அளவிற்கு பட்டினி கிடக்கின்றனர். இப்பொழுது, ஆகவே அவர்கள் மதில்களை வீடுகளின் பக்கத்தில் சுற்றிலும் கற்பாறைகளினால் கட்டுகின்றனர். ஆடுமாடுகளுக்கென்று அவர்கள் கிணறுகளை வெட்டி, அதைச் சுற்றிலும் மதில்கள் கட்டு கின்றனர். ஏதோ ஒன்று திடீரென்று சம்பவிக்கத் துவங்குகிறது. சிறு பறவைகள் இம்மதில்களில் காணப்படும் இடைவெளிகளில் கூடுகட்டி குஞ்சு பொறித்து குஞ்சுகளை வளர்க்கின்றன. ஏதோ ஒன்று சம்பவிக்கத் துவங்கு கிறது. ஒவ்வொரு நாளும், உஷ்ணம் அதிகமாகும்போது ஆடுமாடுகள் மதிலின் அருகிலுள்ள கிணறுகளின் கீழ் நிழலுக்காக வந்து நிற்கும். 133அந்தச் சிறு பறவைகள் யாவும் அந்த இடங்களில் வசிக்கின்றன. சடுதியாக ஏதோ ஒரு காரணத்தால் பறவைகள் பறந்து சென்று கூடுகளுக்குத் திரும்புவதில்லை. நான் சிறு பறவைகளைக் குறித்து அன்று கூறினேன் அல்லவா? பாருங்கள்? ஏதோ சில காரணங்களால் அவைகள் பறந்துவிடுகின்றன. வெளியே சென்ற அவைகள் தங்கள் கூடுகளுக்கு திரும்புவதில்லை. அவை வயல்வெளிகளில் அல்லது மரங்களில் அமர்ந்துகொள்கின்றன. அதுபோன்று ஆடுமாடுகளும் வயல்வெளிகளில் சென்று ஒன்றை யொன்று தழுவிக்கொண்டு நிற்கும். அவை தங்கள் ஸ்தலங்களுக்குத் திரும்புவதில்லை. அதுதான் செய்வதற்கான சரியான வழியாகும். ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது என்று அவைகளுக்குத் தெரியும். அப்பொழுது திடீரென்று பூகம்பம் உண்டாகி, கற்பாறை மதில்கள் பூகம்பத்தினால் அசைந்து விழுந்து போகின்றன. பூகம்பம் நின்றவுடன், மூன்று நான்கு நாட்களாக திரும்பிவராத பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்புகின்றன. அவைகள் கூடுகளுக்குத் திரும்புவதால் பூகம்பங்கள் நின்று போயிருக்கும்'' என்று ஜனங்கள் அறிந்துகொள்கின்றனர். 134ஏன்? நோவாவின் காலத்தில் ஆடுமாடுகளையும் பறவைகளையும் பேழைக்குள் போகச் செய்த அதே தேவன் பாதுகாப்பான ஸ்தலத்துக்கு அவைகளை இன்று பறக்கச் செய்யமுடியும் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்கள் அல்லவா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்-ஆசி) சகோதரரே, இப்பொழுது நான் ஒன்றை சொல்லட்டும். முக்கிய மான ஒரு சம்பவம் நிகழப்போகின்றது. மத சம்பந்தமான மதில்கள் யாவும் விழுந்து, நான் இங்கு நிற்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவர்கள் “மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்க இணங்குவார்கள். இந்த தேசம் முழுவதுமே அதை அங்கீகரிக்குமென்று கர்த்தருடைய வார்த்தை உரைக்கிறது. கவனியுங்கள், ஒரு விசித்திரமான உணர்ச்சி உங்களில் தோன்றும்போது, அந்த மதில்களை விட்டு நீங்கள் அகன்று போங்கள். இல்லாவிடில் நீங்கள் மரித்துப்போவீர்கள். நீங்கள் அதைச் செய்யாதீர்கள் (ஸ்தாபனங்களில் இருப்பதை- தமிழாக்கியோன்). அதை விட்டு வெளியே வாருங்கள். அந்த முறைகளை விட்டு அகன்று போங்கள். உங்களாலானவரைத் துரிதமாகத் தப்பியோடுங்கள். தேவனிடத்தில் இரக்கத்துக்காக மன்றாடுங்கள். “என் தாயார் மெதோடிஸ்டாக இருந்ததால் நானும் மெதோடிஸ்டாக இருப்பேன்' என்றோ , அல்லது ''என் தகப்பனார் பாப்டிஸ்டாக இருந்ததால் நானும் பாப்டிஸ்டாக இருப்பேன்' என்றோ நீங்கள் கூறவேண்டாம். நீங்கள் அதைச் செய்யவேண்டாம். நீங்கள் இதை யதேச்சையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது எவ்வளவு சாதாரணமாகவும் தாழ்மையாகவும் காணப்பட்டாலும், இது கர்த்தருடைய வார்த்தையென்பது உறுதியாகும். உங்களால் முயன்றவரை இயேசுகிறிஸ்துவினிடம் ஓடிச்சென்று தேவன் உங்களைப் பரிசுத்த ஆவியால் நிறைக்கும்வரை அவரில் நிலைத் திருங்கள். ஏனெனில் நீங்கள் பரிசுத்த ஆவியைத் தேடியும் அது கிடையாமற்போகும் தருணம் வரப்போகிறது. ஆகையால் இப்பொழுதே கண்டிப்பாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தலைவணங்கி ஜெபிப்போம். 135பரம தந்தையே, ஓ, நெருங்கி வரும் அந்த பயங்கரமான நேரத்தை நினைக்கும்போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறது. அது வராமல் நிறுத்த எந்த வழியும் இல்லை. அது வருமென்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஜனங்கள் ஏன் செய்தியைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்வதில்லை என்று நான் எண்ணுவதுண்டு. அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதாக நீர் உரைத்திருக்கிறீர். ஆகவேதான் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால், முத்திரைகள் திறக்கப்படும்போது, தங்கள் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண்பவர் அனைவரோடும் பரிசுத்த ஆவியானவர் பேசுகின்றார். ஆகையால் அவர்கள் மாத்திரம் அதை ஏற்றுக்கொள்கின்றனர். நீர் அவர்களை விலக்கமுடியாது. எவரும் அவர்களை அதினின்று விலக்க முடியாது. ஆடுமாடுகளையும் பறவைகளையும் பூகம்பகாலத்தில் நீர் வழி நடத்துவதுபோன்று அவர்களையும் நீர் வழிநடத்துகிறீர். நீரே தேவன். அவைகளுக்குள்ளிருக்கும் உணர்ச்சியைப் போன்று, ஸ்தாப னங்களினின்று விலகவேண்டுமென்ற உணர்ச்சி அவர்களுக்குள்ளும் இருக்கிறது. மிருகங்களுக்குள்ள ஓர் உணர்ச்சி வரப்போகும் ஆபத்தைக் குறித்து அவைகளை எச்சரித்து தப்பியோடச் செய்யுமாயின், பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டதாக கூறிக்கொள்ளும் சபைக்கு அந்த பரிசுத்த ஆவியானவர் என்னவெல்லாம் செய்யவேண்டும்? 348, தேவனே, எங்கள் மேல் கிருபையாயிரும். எங்கள் குற்றங்குறை களை மன்னியும். நாங்கள் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு கைகால்கள் வலிக்கும்படி இந்த ஜனங்கள் ஆராதனையில் நின்றுகொண்டிருந்து, பின்பு வீடுகளுக்குச் சென்று, செய்தி நன்றாகத்தான் இருந்தது' என்று கூறி அத்துடன் நிறுத்திவிட நாங்கள் விரும்பவில்லை. கர்த்தாவே அதற்கு நீர் ஏதாவது ஒன்றைச் செய்யவிரும்புகிறோம். கர்த்தாவே எங்கள் இருதயங்களை நீர் ஆராய்ந்து பார்த்து, தவறு ஏதாகிலும் இருந்தால் அதை எங்களுக்குத் தெரியப்படுத்தியருளும். காலதாமதமான பிறகு, அந்த பயங்கரமான நேரத்தை நாங்கள் அடைய நீர் அனுமதிக்க வேண்டாம். என்னை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே என்னைச் சோதித் துப்பாரும். முத்திரைகள் உடைக்கப்பட்டு வெளிப்படும் இரகசியங்களை நான் தேவகிருபையினால் இவர்களுக்கு அறிவிக்கிறேன். இவ்விதம் நிகழு மென்று சில வாரங்களுக்கு முன் நீர் எனக்கு அறிவித்தீர். பிதாவே, இப்பொழுது எங்களுக்கு அந்த இரகசியங்கள் வெளியரங்கமாகின்றன. 136இப்பொழுதும் கர்த்தாவே என் இருதயத்தை ஆராய்ந்து பாரும். என்னை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே நாங்கள்... நீர் எங்கள் ஜீவியத்தைக் காணவேண்டுமென்று விரும்புகிறோம். எங்கள் ஜீவியத்தில் தவறு காணப்பட்டால், கர்த்தாவே எங்களுக்கு அதைத் தெரிவியும். இரத்தம் நிறைந்த ஊற்று உள்ளபோதே- எங்கள் பாவத்தையும் அவிசுவாசத்தை யும் போக்கும். வெண்மையாக்கும் திரவம் இருக்கும்போதே, நாங்கள் அதைச் சரிபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். எங்கள் ஆத்துமாக்களை அதில் மூழ்கவைத்து அவிசுவாசத்தைப் போக்கிக்கொள்ள விரும்பு கிறோம். தேவனே, எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். கர்த்தாவே அதை எங்களை விட்டு எடுத்துப்போடும். எடுக்கப்படுதலுக்கேற்ற கிருபையை நாங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். அந்த இரகசியமான இடிகள் அங்கு முழங்கி சபை எடுக்கப்படும்போது அந்த இரகசியங்களை நாங்கள் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும்படி அருள்புரியும். உம்முடைய வார்த்தையைக் கொண்டு எங்களை சோதித்தறியும். நாங்கள் வார்த்தையை நோக்கி, தவறு செய்தவராகக் காணப்பட்டால்.... கர்த்தாவே பட்டப்பெயர்களினால் ஞானஸ்நானம் பெற்று உண்மை யான ஞானஸ்நானம் எதுவென்று அறியாதவர் இங்கிருந்தால், பவுல் செய்ததுபோல நானும் உண்மையுள்ளவனாக... 137அவன் எபேசு பட்டிணத்தின் மேற்குக்கரைக்குச் சென்றபோது, கூச்சலிட்டு, சத்தமிட்டு, மகத்தான ஓர் சமயத்தை அனுபவித்துக்கொண் டிருந்த சீஷர்களிடம், 'நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்க, அவர்கள் 'பரிசுத்த ஆவி உண் டென்று கேள்விப்படவேயில்லை' யென பதிலுரைத்தனர். அப்பொழுது, அவன், 'அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?' என்று கேட்டான். அவர்கள் மகத்தான அந்த தீர்க்கதரிசி (யோவான் ஸ்நானன்) கொடுத்த மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தனர். அப்பொழுது அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் மறுபடியும் ஞானஸ் நானம் பெறவேண்டுமென்று பவுல் அவர்களுக்குக் கட்டளையிட்டான். பவுலைப்போன்று நானும் உண்மையுள்ளவனாக... கர்த்தாவே உம்முடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு இருக்கக் கிருபை செய்யும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாத யாவரும் தருணமுள்ளபோதே தண்ணீரைத் துரிதமாய் அடைந்து அந்நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள நான் கட்டளையிடுகிறேன். 138பரிசுத்த ஆவியினால் நிறையப்படாதவரே, இப்பொழுதே முழங் கால் படியிட்டு, பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர் அன்பினாலும் நற்பண்பினாலும் நிறைத்து, தேவனுடைய சமூகத்தில் உங்கள் ஆத்துமாக்கள் திருப்தியடைந்து, அவரைக் சேவிக்கவும், அவரோடு சஞ்சரிக்கவும், இனி உங்கள் ஜீவியகாலமெல்லாம் அவருக்காக உழைக்க உங்களுக்கு வாஞ்சை தோன்றும்வரை, நீங்கள் முழங்காலிலிருந்து எழுந்திருக்க வேண்டாமென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். தேவன் இதை உங்களுக்கு அருள நான் வேண்டிக்கொள்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் நீங்கள் உண்மையாகவே அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 139(நான் நேசிக்கிறேன் என்ற பாடலை சகோ. பிரான்ஹாம் மெளன மாய்ப் பாடத் துவங்குகிறார் - ஆசி) தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று, அல்லது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற வேண்டுமென்ற அவசியத்தை யாராவது இன்றிரவு உணர்ந்திருந்தால்... உங்கள் தேவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது இப்பொழுது உங்களுக்கு வெளிப்பட்டுள்ளது. ஜெபத்தில் நினைவுகூர வேண்டு மென்று நீங்கள் விரும்பினால்... நாங்கள் யாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உங்களுக்கு அளிக்க முடியாது. தேவன் ஒருவர் மாத்திரமே அதை செய்யக்கூடும். ஓ, நாங்கள் உங்களுக்கு ஞானஸ் நானம் வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியை மாத்திரம் எங்களால் உங்களுக்குக் கொடுக்கமுடியாது. தேவனே அதை அளிக்கிறார். தேவன் உங்கள் இருதயங்களில் பேசி அதன் அவசியத்தை உங்களுக்கு உணர்த்துவதாக நீங்கள் எண்ணினால், நாங்கள் உங்களை ஜெபத்தில் நினைவுகூர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் யாரென்று நாங்கள் அறிந்து கொள்ள தயவுசெய்து எழுந்து நிற்பீர்களாக! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! பேர் எழுந்து நின்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், அறை களிலும் வெளிப்புறத்திலும் கைகளை உயர்த்தியுள்ளவர்கள் எத்தனை பேரோ எனக்குத் தெரியாது. உங்களெல்லாருக்கும் ஒரு தேவையுண்டு. நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம். 140இப்பொழுது உங்கள் பக்கத்தில் நிற்கிறவர்கள் கிறிஸ்துவுக்கு முன்னிலையில் சாட்சியாக நிற்கின்றனர். நிற்பவர்கள் இவ்விதம் கூறுங்கள்! கர்த்தாவே நீர் எங்களுக்குத் தேவை. உலகத் தோற்றத்துக்கு முன்னால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தில் என் பெயரெழுதப்பட்டிருப் பதை இன்றிரவு நான் காண்பேன் என்று நம்புகிறேன். என் இருதயத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. அதற்காகத்தான் நான் எழுந்து நிற்கிறேன். கர்த்தாவே அது நானா? நீர் என்னை அழைக்கிறீரா? என் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதை நீர் எனக்கு வெளிப்படுத்த வேண்டும். பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து உமக்குள் முத்திரித்துக் கொள்ளும்.' ஏற்கனவே முத்திரிக்கப்பட்டவர்கள் எழுந்து நின்று, நிற்பவர்களின் மேல் கைகளை வைத்து ஜெபியுங்கள். (சகோதரன் பிரான்ஹாம் சிறிது நிறுத்துகிறார்) நீங்கள் உத்தமமாக ஜெபியுங்கள். (சபையாரும் அனைவரும் ஜெபிக்கத் துவங்குகின்றனர் - ஆசி) 141பரம பிதாவே, மகா பரிசுத்த ஆவியானவர் இங்கு கூடியிருப்பவர் களின் மேல் பலத்தக் காற்றைப் போல அசைவாடி ஒவ்வொரு இருதயத் தையும் அழைத்து, கர்த்தாவே இந்த ஜனங்களின் மேல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அனுப்பும்படியாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். அங்கே தண்ணீர் காத்துக்கொண்டிருக்கின்றது “பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசியபொழுது, வார்த்தையைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்தாவி இறங்கினதால், அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டார்கள்.'' (சபையார் அனைவரும் தொடர்ந்து ஜெபிக்கின்றனர் - ஆசி)